சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

  • Home
  • India
  • Mumbai
  • சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

சித்த மருத்துவ வாழ்வியல் மையம் சித்த மருத்துவ வாழ்வியல் மையம்

தூக்கம் வரவில்லை என்ற கவலை இனி வேண்டாம்..ஆழ்ந்த தூக்கத்திற்கு அட்டகாசமான மருந்து இதோ..    1.சடாமஞ்சில் -50g    2.கசகசா-5...
12/12/2025

தூக்கம் வரவில்லை என்ற கவலை இனி வேண்டாம்..

ஆழ்ந்த தூக்கத்திற்கு அட்டகாசமான மருந்து இதோ..

1.சடாமஞ்சில் -50g
2.கசகசா-50gm
3.ஜாதிக்காய்-50gm

ஆகியவற்றை தனித்தனியே பொடி செய்து ஒன்றாக மூன்றையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு உறங்கும் முன் அரை ஸ்பூன் ஒரு டம்ளர் பாலில் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றவைத்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர ஆழ்ந்த உறக்கம்,உடல் பூரிப்பு,முக செழுமை, பயம் பதட்டம் நீங்கி தைரியம் உண்டாதல் ஆகியன ஏற்பட்டு உடல் பலமடையும்..

மாசிக்காயின் மகத்துவம் நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய் இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர...
28/11/2025

மாசிக்காயின் மகத்துவம்

நீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய் இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது.

இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது.

இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளிவருவதற்கு முன்னே எடுப்பது நல்லது அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது? இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்..

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.

மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.

மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும் பல் ஈறு பலப்படும்

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டா நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.

மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, சறது வெணயுடன் அல்லது

1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்

மாசிக்காய்த் தூள் 20 கிராம, சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து,Download to read ad-free

10 கிராம் அளவு எடுத்து

சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.

மாசிக்காய்த் தூள் 5 கிராம்

3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்

உங்கள் குடலில்15 பவுண்டு வரைகழிவுகள் இருக்கும் என்பதை அறிவீர்களா.!இது மெதுவா உங்கள் சக்தியை சுரண்டிக்கொண்டு இருக்கும் மற...
11/11/2025

உங்கள் குடலில்
15 பவுண்டு வரை
கழிவுகள் இருக்கும் என்பதை அறிவீர்களா.!

இது மெதுவா உங்கள் சக்தியை சுரண்டிக்கொண்டு இருக்கும் மறைமுக காரணம் ஆகலாம்.

ஆய்வுகள் சொல்றது என்னன்னா → தவறான உணவு, Stress, நீர் குறைபாடு காரணமாக 60% பேருக்கு செரிமான பிரச்சனை, வயிற்றுப் புடைப்பு, சோர்வு ஏற்படுது.

குடல் (Colon) -வெறும் கழிவு வெளியேற்றம் அல்ல,

Immunity-ஐ காக்கும்

உடல் திரவங்களை balance பண்ணும் ⚖️

மனநிலையும், உடல் எடையையும் பாதிக்கும்

நல்ல செய்தி என்னன்னா → விலை உயர்ந்த Detox kit தேவை இல்லை

எலுமிச்சை + இஞ்சி + ஆளி விதை + தேன் + ACV → இந்த simple mix குடிச்சா போதும்.

குடல் சுத்தம் தேவை என்பதை காட்டும் சிக்னல்கள்

அடிக்கடி மலச்சிக்கல்

வயிற்றுப் புடைப்பு / வாயுத் தொல்லை

காரணமில்லா சோர்வு / Brain fog

சர்க்கரை craving அதிகம்

முகப்பரு / Skin issues

நல்ல oral care இருந்தாலும் bad breath

Night-time Colon Detox Recipe

*தேவையானவை*

வெந்நீர் – 1 கப்

எலுமிச்சைச் சாறு – 1 tsp

ஆளி விதை தூள் – 1 tsp

துருவிய இஞ்சி – ½ tsp

தேன் – 1 tsp

Apple Cider Vinegar – 1 tsp

செய்வது எப்படி :-

எல்லா பொருட்களையும் வெந்நீரில் சேர்க்கவும்

நன்றாக mix பண்ணி, படுக்கும் முன் 30 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்

அடுத்த நாள் காலை லேசான & சுத்தமான feeling

IBS, Crohn’s disease உள்ளவர்கள் → try பண்ணாதீர்கள்.

நன்மைகள்:-

Easy morning bowel movement

வீக்கம் குறைவு

Energy + Clear mind

Strong immunity

Skin glow + Bad breath குறைவு

நீண்டகால குடல் ஆரோக்கியத்துக்கான 5 ஹேபிட்ஸ்

25–30g Fiber (Fruits , Veggies , Whole grains

8–10 கப் தண்ணீர்

30 நிமிடம் exercise

Processed food, Alcohol, Sugar குறைச்சல்

எப்போது குடிக்கணும் :-→

Bedtime-க்கு 30 நிமிடம் முன்னாடி

எவ்வளவு நாள்⁉️→ மாதம் 2–3 முறை போதும்.

எடை குறையுமா → Temporary weight loss (waste + water). Long-term weight loss = Healthy food + Workout only.

குடல் clean பண்ணினா → உடலும் மனமும் Fresh + Light + Energetic ஆக இருக்கும்.

இந்த Natural Detox recipe-ஐ try பண்ணி பாருங்க.

"உங்கள் குடலை சுத்தம் பண்ணுங்க."

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:சீரகம் என்பது Cuminum cyminum என்ற தாவரத்தின் உலர்ந்த விதை. இது சமையலில் மணமும் சுவையும் அ...
10/11/2025

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:

சீரகம் என்பது Cuminum cyminum என்ற தாவரத்தின் உலர்ந்த விதை. இது சமையலில் மணமும் சுவையும் அளிப்பதற்காக பரவலாக பயன்படுத்தப்படும் மசாலா. இந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமாகப் பயிரிடப்படுகிறது.

சீரகம் என்பது : சூடான தன்மை கொண்டது, மணம் நிறைந்தது, சிறந்த செரிமான உதவி, ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை, பல நோய்களைத் தணிக்கும் மூலிகை மதிப்பு

சீரகத்தில் உள்ள முக்கிய சத்துக்கள்: இரும்புச்சத்து (Iron), நார்ச்சத்து (Fiber), வைட்டமின் A, C, E கொரிமொன்கள் சீர்படுத்தும் பைட்டோ-கெமிக்கல்ஸ், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம்

சீரகத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்

1. செரிமானத்தை மேம்படுத்தும், குடல் இயக்கத்தை சீர்படுத்துகிறது, வாயுப்பிடிப்பு, அஜீரணம், வயிற்றுவலி தணிக்கிறது

2. ரத்தத்தில் இரும்பை அதிகரிக்கும், ரத்தசோகை கொண்டவர்களுக்கு பயனுள்ளது

3. குடல் நோய்களை தடுக்கும், வயிற்றுப்போக்கு, வாந்தி உணர்ச்சி ஆகியவற்றை குறைக்கும்

4. பித்தத்தை குறைக்கும், உடல் சூட்டை கட்டுப்படுத்தும், பித்தசம்பந்தமான நோய்களை தணிக்கும்

5. இருமல் மற்றும் சளி குணமாகும், சீரகம் சளியை உடைக்கிறது, மூச்சுத் திணறலிலும் நன்மை

6. தோல் பிரச்சனைகளில் பயன்படும், அரிப்பு, கட்டு, புண் ஆகியவற்றில் தேய்க்கலாம்

7. உடல் எடையை குறைக்க உதவும், மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரிக்கிறது

8. பால் உற்பத்தியை அதிகரிக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உதவுபவை

சீரகத்தைப் பயன்படுத்தும் சில வழிகள்
சீரக நீர் (Jeera water)
சீரக பொடி
சீரகக் கஷாயம்
வறுத்த சீரகம்
எண்ணெயில் சீரகம் தாளிக்க

நாள் ஒன்றுக்கு 1–2 தேக்கரண்டி அளவு போதுமானது. 8 மணி நேரம் ஊறவைத்த நீரைக் காலையில் குடித்தால் அதிக நன்மை.

கவனிக்க வேண்டியவை :
🚫 கர்ப்பிணிகள் அதிக அளவு சீரகம் உட்கொள்ளக் கூடாது

🚫 அதிக அளவு எடுத்தால் வயிற்றுப்பிடிப்பு அல்லது அமிலத்தன்மை அதிகரிக்கலாம்

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்:

சீரகத்தை வாழைப்பழத்துடன் நசுக்கி காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் ரத்தச் சீர்கேடு சரியாகும்.

சீரகம் மற்றும் உப்பை சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி விரைவில் குறையும்.

சீரகத்துடன் கற்கண்டு சேர்த்து மென்று சாப்பிட்டால் இருமல் தணியும்.

சீரகப்பொடியை தேனுடன் கலந்து எடுத்தால் விக்கல் ஒழியும்.

சீரகத்தை அரைத்துப் மூலம் உள்ள பகுதியில் தடவினால் மூலம் குணமாகும்.

சீரகத்தை நைசாக அரைத்து தோலில் தடவினால் அரிப்பு குறையும்.

சீரகத்தை மென்று சாப்பிட்டாலே வயிற்றுப் புண் குறைந்து செரிமானம் மேம்படும்.

சீரகப்பொடியை எலுமிச்சைச் சாறுடன் கலந்து உண்டால் பித்தம் தணியும்.

நல்லெண்ணெயில் சீரகம் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தடவி குளித்தால் பித்தம் குறையும்.

சீரகப்பொடியை தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் தடவினால் விஷம் தணியும்.

சீரகத்தை வறுத்து சூடுநீரில் ஊற்றி, பால் சேர்த்து குடித்தால் பசி அதிகரிக்கும்; மிளகுப்பொடியுடன் காய்ச்சி வடிகட்டி குடித்தால் அஜீரணம், மந்தம் சரியாகும்.

சீரகம் மற்றும் வில்வ வேர்ப்பட்டை சேர்த்து அரைத்து பால் கலந்து காலையில் குடித்து வந்தால் தாது வலிமை பெருக்கும்.

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்முகப்பொலிவை தரும் பீட்ரூட்சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்குகருவளையத்தை நீக்கும் வெள்...
08/11/2025

முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்

முகப்பொலிவை தரும் பீட்ரூட்

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு

கருவளையத்தை நீக்கும் வெள்ளரி

பொடுகைப் போக்கும் எலுமிச்சை

நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை

உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை

தலைமுடியை கருமையாக்கும் கறிவேப்பிலை

முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள்

வசீகர அழகை தரும் ஆரஞ்சு

தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை

இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம் இயற்கை முறையில்..இரத்தக் குறைபாடு நீங்க கீழ்க்கண்ட இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றலா...
08/11/2025

இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம் இயற்கை முறையில்..

இரத்தக் குறைபாடு நீங்க கீழ்க்கண்ட இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

(1) ஊட்டச்சத்துக்களைச் சேர்த்தல்:

ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கு முக்கியக் காரணம் இரும்புச்சத்தும், வைட்டமின் C-யுமே ஆகும். இவற்றை உங்கள் சமைக்காத இயற்கை உணவுகளில் கட்டாயம் சேர்க்கவும்:

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்: கருப்பு எள் (ஊறவைத்து), பூசணி விதைகள், பேரிச்சம்பழம், உலர்ந்த அத்திப்பழம், முளைத்த பயறு வகைகள் (பச்சை பயறு, கொண்டைக்கடலை), மற்றும் பீட்ரூட்.

வைட்டமின் 'சி' நிறைந்த உணவுகள்: உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் சுலபமாக உறிஞ்ச வைட்டமின் 'சி' அவசியம். இதற்கு நெல்லிக்காய், ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை சாறு, கொய்யா, பப்பாளி போன்றவற்றைத் தினமும் எடுத்துக் கொள்ளவும்.

(2) இரும்புச் சத்துத் தடுப்பான்களைத் தவிர்க்கவும்:

உங்கள் உடல் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அல்லது இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுக்கும், இந்தத் தடுப்பான்களுக்கும் இடையில் குறைந்தது 2-3 மணிநேரமாவது இடைவெளி விடுங்கள்.

தவிர்க்க வேண்டியவை: தேநீர் மற்றும் காப்பி, பால் மற்றும் பால் பொருட்கள் (தயிர், வெண்ணெய்), கால்சியம் மாத்திரைகள், மற்றும் அமில நீக்கி மருந்துகள் (Antacids).

(3) அத்தியாவசிய வாழ்வியல் முறைகள்:

சரியான இயற்கை வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது, ஹீமோகுளோபின் அளவை விரைவாக மேம்படுத்த உதவும்:

உணவு முறை: சமைத்த உணவுகளை கூடுமானவரையில் தவிர்த்து, சமைக்காத இயற்கை உணவுகளாகிய பழங்கள், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகளை உண்ணுவது சிறந்தது. ஒரு வேளை சமைத்தால், இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது பரவாயில்லை.

சூரிய ஒளி: தினமும் 20–30 நிமிடங்கள் காலை சூரிய ஒளியைப் பெற்று இயற்கை வைட்டமின் ‘டி’ சத்தைப் பெறுங்கள்.

தூக்கம்: ஒவ்வொரு இரவும் 7–9 மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.

மேற்கூறிய உணவு மற்றும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி வர, உங்கள் ஹீமோகுளோபின் அளவு 6 முதல் 8 வாரங்களில் நன்கு மேம்படக்கூடும்.

மூக்கிரட்டை என்னும் மூலிகை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.மூக்கிரட்டை கீரையை வாரத்தில் 3 நாள் சாப்பிட்டால் போதும்… கல...
04/11/2025

மூக்கிரட்டை என்னும் மூலிகை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

மூக்கிரட்டை கீரையை வாரத்தில் 3 நாள் சாப்பிட்டால் போதும்… கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்....!!

மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது.

இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது.

மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் விரட்டுகின்றது.

இந்த கீரையை இதை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். தற்போது இந்த கீரையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.

மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் மூட்டுவலி எப்படி பறந்து போய்விடும்.

வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

சர்க்கரை நோய் ஸ்டார்டிங் பாயிண்ட்டில் இருக்கிறது அதை கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி ............1) தினம் தோறும் 200 or 2...
29/10/2025

சர்க்கரை நோய் ஸ்டார்டிங் பாயிண்ட்டில் இருக்கிறது அதை கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி ............

1) தினம் தோறும் 200 or 250 ml நெல்லிக்காய் சாறு குடித்தாலே போதுமானது. Sugar ஏறாது.....

2) கருஞ்சீரகம் லேசா வறுத்து பொடி செய்து கொண்டு தினமும் 4 தேக்கரண்டி போட்டு வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு 100 ml குடிக்கலாம்....

3)வறுத்து பொடி பண்ணிய வெந்தயம் 4 தேக்கரண்டி மோர் கலந்து குடித்து வரலாம்....

4)சிறுகுறிஞ்சான் பொடி தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு பாக்கெட் வாங்கி தினம் 3 தேக்கரண்டி போட்டு வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம்.

Border line என்பதால் ஏதேனும் ஒன்று பின்பற்றவும்.

@மிகவும் பலன் தரக்கூடியது நெல்லிக்காய் சாறு தினம் குடிப்பது......

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூப்..குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க... தினமும் கொடுக்க வேண்டிய வல்லாரை சூப்.பெற்றோர்களுக...
29/10/2025

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூப்..

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க... தினமும் கொடுக்க வேண்டிய வல்லாரை சூப்.

பெற்றோர்களுக்கு குழந்தைகளில் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று தான். அப்படி குழந்தைகளின் மூளையை பன்மடங்கு வளர்ச்சியடைய வல்லாரை சூப் மிகவும் உதவுகிறது. இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் சிறார்கள் மூளை பயங்கர வளர்ச்சி அடையும்.

அந்தவகையில் வல்லாரை சூப் எப்படி செய்வது என்பது குறித்து விளக்கமாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
ஞாபகசக்தியை அதிகரிக்கும் வல்லாரை சூப்

வல்லாரை கீரை – 15

பூண்டு – 2 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

சீரகம் – 1/2 கரண்டி

நெய் – 1 கரண்டி

எண்ணெய் - 1 கரண்டி

பாசிபருப்பு – 1 கரண்டி (வேகவைத்தது)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

செய்முறை :-
வல்லாரை கீரை சூப் செய்வதற்கு முதலில் வல்லரை கீரை, கீரகம், பூண்டு, வெங்காயம் அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி அரைத்து எடுத்துக் கொள்ள விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போகும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் வேகவைத்து மசித்து எடுத்துக் கொண்ட பாசிபருப்பை அதில் சேர்த்து உப்பு மற்றும் காரத்திற்காக மிளகுதூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் கொத்தமல்லித் தழையை சூப் மீது தூவி இறக்கி ஆறவைத்து குடிக்க வேண்டும்.

இருதய இரத்த குழாய் அடைப்பு திறக்க எளியவழி.......அடைப்புகள் திறக்க உதவும் பானத்திற்குறிய மூலப்பொருட்கள்1 கப் எலுமிச்சை சா...
27/10/2025

இருதய இரத்த குழாய் அடைப்பு திறக்க எளியவழி.......

அடைப்புகள் திறக்க உதவும் பானத்திற்குறிய மூலப்பொருட்கள்

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சி சாறு

1 கப் பூண்டு சாறு

1 கப் ஆப்பின் சிடார் வினிக்கப்

எல்லா சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள் இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள் நான்கு கப் மூன்றாக குறையும் ஆடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சமஅளவு இயற்கை தேன் கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள் நாள் தோறும் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் (15M) பானத்தை மகிழ்ச்சியுடன் அருந்துங்கள் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்....

மகிழ்ச்சி பெறுக,செல்வம் செழிக்க,ஆரோக்கியம் சிறக்க,இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.!
19/10/2025

மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.!

பசலைக்கீரை யின் பயன்கள்..!பசலைக்கீரை இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது சோகை நோயைத் தடுக்கவும...
12/10/2025

பசலைக்கீரை யின் பயன்கள்..!

பசலைக்கீரை இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது சோகை நோயைத் தடுக்கவும், இரத்த சோகையை சரிசெய்யவும் உதவும், கண் பார்வைத் திறனை அதிகரிக்கும், எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், குடல் மற்றும் சிறுநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், பசலைக்கீரை உடலின் வெப்பத்தைத் தணித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பசலைக்கீரையின் குறிப்பிட்ட பயன்கள்...!

இரத்த சோகை நீக்கும் :-

இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

கண் பார்வை மேம்படும்:-

வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க உதவும்.

எலும்புகள் வலுப்படும்:-

சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை சேர்க்கும்.

இதய ஆரோக்கியம்:-

மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

செரிமான மண்டல ஆரோக்கியம்:-

கரையா நார்ச்சத்து நிறைந்துள்ளதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சிறுநீர் மண்டலப் பிரச்சனைகளைத் தீர்க்கும்:-

நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.

உடல் வெப்பத்தைத் தணிக்கும்:-

பருப்புடன் சேர்த்துச் சாப்பிடும்போது உடல் வெப்பம் தணியும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:-

வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குடல் புண்களைக் குணப்படுத்தும்:-

பசலைக்கீரை குடல் புண்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Sion West Mumbai
Mumbai
400022

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919930720234

Website

Alerts

Be the first to know and let us send you an email when சித்த மருத்துவ வாழ்வியல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to சித்த மருத்துவ வாழ்வியல் மையம்:

Share