SVP Homeo Pharma

SVP Homeo Pharma We Are doing Wholesale and Retails in Homeopathy, Electro homeopathy,Sidha, Ayurveda, Unani medicines

அனைவருக்கும் எங்களது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!
11/11/2023

அனைவருக்கும் எங்களது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!!!

எங்களது கடையில் தரமான சிறுதானிய ரொட்டிகள் (பிஸ்கட்) கிடைக்கும்.
07/11/2023

எங்களது கடையில் தரமான சிறுதானிய ரொட்டிகள் (பிஸ்கட்) கிடைக்கும்.

11/10/2023
Brainology சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் எடுத்துக் கொள்வதால் கவனிப்புத் தன்மை அதிகரிக்கிறது. ஞாபகசக்தி அதிகரிக்கிறத...
28/09/2023

Brainology சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் எடுத்துக் கொள்வதால் கவனிப்புத் தன்மை அதிகரிக்கிறது. ஞாபகசக்தி அதிகரிக்கிறது. படிப்பில் கவனம் அதிகரிக்கிறது. சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது. *SVP HEALTH CARE*, காரணம்பேட்டை, 9042999657

15/09/2023

*இளவயது மாரடைப்பு தீர்வு என்ன?*

*SVP ஹெல்த் கேர்,*
*காரணம்பேட்டை.*

சமீப காலமாக நாம் அடிக்கடி பார்க்கும்/கேட்கும் செய்தி மாரடைப்பு. பலரும் சொல்வது என்னவென்றால் கொரோனாவிற்கு பின் அல்லது கட்டாய ஊசி செலுத்திக் கொண்டபின் அதிகளவில் இளவயது மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தான். இது உண்மையா? பொய்யா? என்கிற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் மேற்கண்ட செய்தி இதுவரை ஆதாரம் மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் கோவிட் தொற்றிற்கு ஆளானவர்களுக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே சொல்லப்படுகின்றது. இளவயது மாரடைப்பு தொடர்பாக இதுவரை முழுமையான ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு இறப்பிற்கும் தனிப்பட்ட கோளாறுகளே காரணமாக கூறப்படும் நிலையில், மாரடைப்பு வருவதற்கான பொதுவான காரணங்களை பார்ப்போம்.
1.போதிய உறக்கமின்மை
2.மாவு சார்ந்ந உணவுகளை அதிகம் உண்பது
3.குப்பை உணவுகளை உண்பது
4.எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் உண்பது
5.நீரிழிவு கட்டுப்பாடு இல்லாமை
6.இரத்தக் கொதிப்பு
7.புகை மற்றும் குடிப்பழக்கம்
8.சிறுநீரக கோளாறு
9.அதீத உடல் பருமன்
10.பரம்பரை இதய நோய் உள்ளவர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன.

*நோய் எதிர்ப்பு மண்டலம்*

பொதுவாகவே எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து போராடுவது நோய் எதிர்ப்பு மண்டலமே ஆகும். கோவிட் பெருந்தொற்றிலும் தொற்றிற்கு பிறகும் கடுமையாக நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்படைகிறது. இந்த நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படுவதால் ஏற்கனவே தடுக்கப்பட்ட நிலையில் இருந்த நோய்களும் புதியதாக சில நோய்களும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இவை எல்லோருக்கும் தோன்றும் என்று உறுதிபடக் கூற முடியாது ஆனால் ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொருத்து மாறுபடும். கோவிட் தொற்றிற்கு பிறகு நோய் எதிர்ப்பு மண்டலம் பழைய நிலையை அடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது என்பது உண்மை. இதனை Long term effects of covid - 19 என கூறுகிறோம்.

*நமக்கு நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்?*

1.அதீத உடல் சோர்வு
2.தூக்கமின்மை
3.மறதி
4.தொடர் கை,கால், உடல் வலி
5.மார்பு பகுதியில் அசௌகரியம்
6.உடலுறவில் நாட்டமின்மை
7.அடிக்கடி நோய் வாய்ப்படுதல்

இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமுடன் இருந்தலும் உடனே மருத்துவரை நாடுதலும் நல்லது.

*பரிசோதனை மூலம் கண்டறிவது எப்படி?*
1.Cbc
2.CRP
3.ESR
4.d.dimer
5.ferritin
6.LFT
7.LDH
மேற்கண்ட பரிசோதனைகளை செய்வதன் மூலமாக மாரடைப்பு வருவதற்கான ஆபத்தை பெரும்பாலும் தவிர்த்துவிட முடியும்.

*முன்னெச்சரிக்கை பரிந்துரை என்ன?*

லோடிங் டோஸ் எனப்படுகின்ற ஆபத்துக் கால மாத்திரைகளை எப்போதும் கையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

1.Disprin 325 mg - 1 tablet
2.Atorvastatin 80 mg - 1 tablet
3.Clopitab 150 mg - 2 tablet
(ஆங்கில மருத்துவர் பதிவிலிருந்து) மேற்கண்ட மருந்துகளை பயன்படுத்தும் முன் ஏற்கனவே வேறு நாட்பட்ட நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் தனது மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.இம்மாத்திரைகளை அவசர காலத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவமனையை நாடுவதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம்.

*பொதுவான பரிந்துரை என்ன?*
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் அதே சமயம் மாவுச்சத்து சார்ந்த உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. மிதமான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி கொஞ்சம் யோகா என இருப்பது நல்ல பலன் தரும்.

நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் இருதயத்தை பாதுக்காக்கும் சிறப்பான மருந்துகள் மாற்றுமுறை மருத்துவத்தில் பக்க விளைவுகள் அற்றதாக கிடைக்கின்றன அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது சிறப்பான பயனை அளிக்கும்.

*வருமுன் காப்பதே சிறந்தது' எனும் வாக்கியத்திற்கேற்ப நாம் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் மாரடைப்பை எளிதாக வராமல் தடுக்கலாம்.

*வாழ்க! வளமுடன்!*

விழிப்புணர்விற்காக,
S.பூபதி கண்ணதாசன்.BEMS.,CMS & ED.,
எலெக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்,
*SVP ஹெல்த் கேர்,*
*காரணம்பேட்டை.*

30/08/2023

*Paracetamol - பாராசிடமால்*
காலநிலை மாற்றம் துவங்கிவிட்டது. அதனால் காய்ச்சல், சளி பருவகால நோய்கள் பரவ ஆரம்பிக்கும் காலம் இது. பொதுவாக காய்ச்சல், தலைவலி என்றாலே எல்லோரும் பொதுவாக சொல்லும் வார்த்தை 'ஒரு பாராசிடமால் வாங்கி போடு' அந்த அளவுக்கு பிரபலமான எல்லோரும் பயன்படுத்தும் மருந்து இது. குழந்தைகள் உள்ள வீட்டில் எப்பொழுதுமே பாராசிடமால் இருக்கும். தீடீரென காய்ச்சல் வரும்போது என்ன எதுவென்றால் ஆராயாமலே பாராசிடமால் குடுப்பது வழக்கம். இந்த மருந்து அவசரகாலத்தில் வரப்பிரசாதமாக இருந்தாலும் மருந்தின் அளவு அதிகமாக கொடுக்கப்படும்போது அது லிவரை பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உடல் எடைக்கேற்ப மட்டுமே Dose தரப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் தரக்கூடாது. தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக 6.5 கிலோ எடையுள்ள குழந்தைக்கு 120Mg வீரியமுள்ள மருந்தை கொடுத்தால் 4 ML என குறைந்தபட்சமாக 4 மணி நேர இடைவெளியில் தரலாம். நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 4 முறை தரலாம். இவை எல்லாவற்றையும் விட ஒரு நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம். மருந்துவரின் பரிந்துரையின் பெயரிலே மருந்தகத்தை நாடி மருந்து பெறுவது சாலச் சிறந்தது.

மக்கள் விழிப்புணர்விற்காக,
*SVP ஹெல்த் கேர்,*
*காரணம்பேட்டை.*

அனைத்து மருந்துகளும் தரமான மற்றும் 5% முதல் 20% வரை சலுகை  விலையில் கிடைக்கும்.
29/08/2023

அனைத்து மருந்துகளும் தரமான மற்றும் 5% முதல் 20% வரை சலுகை விலையில் கிடைக்கும்.

எங்களிடம் அனைத்து வகையான மூலிகைப் பொடிகளும் முதல் தரத்தில் கிடைக்கும்.SVP ஹெல்த் கேர்,சோமனூர் மெயின் ரோடு,காரணம்பேட்டை.0...
12/08/2023

எங்களிடம் அனைத்து வகையான மூலிகைப் பொடிகளும் முதல் தரத்தில் கிடைக்கும்.
SVP ஹெல்த் கேர்,
சோமனூர் மெயின் ரோடு,
காரணம்பேட்டை.
090429 99657 ,9043999657

தலைமுடி உதிர்கிறதா? அடர்த்தி குறைகிறதா? வளர்ச்சி வேண்டுமா? பேன், பொடுகு போன்ற தொந்தரவா? வறட்சியா? அனைத்திற்கு பின்விளைவு...
07/08/2023

தலைமுடி உதிர்கிறதா? அடர்த்தி குறைகிறதா? வளர்ச்சி வேண்டுமா? பேன், பொடுகு போன்ற தொந்தரவா? வறட்சியா? அனைத்திற்கு பின்விளைவுகள் இல்லாத இரசாயணம் இல்லாத மருந்துகள் மூலம் தீர்வு கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு,
SVP ஹெல்த் கேர்,
SVP Homeo Pharma ,
சோமனூர் பிரதான சாலை,
காரணம்பேட்டை.
090429 99657 ,9043999657

05/08/2023

*ரோட்டரி மேட்டுப்பாளையம் பிரைம் சங்கம்,* இனாலி பவுண்டேஷன், ரோட்டரி பூனே டவுண்டவுன், ஆகியவை இணைந்து நடத்தும், *இயந்திர* *செயற்கை கை* பொருத்தும் முகாம், செப்டம்பர் 2023- 8,9 மற்றும் 10 ஆம் தேதியில் மேட்டுப்பாளையத்தில் (கோவை) நடைபெறவுள்ளது,

முழங்கைக்கு கீழே கைகளை இழந்தவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி , இலவச கைகளை பொருத்திக் கொள்ளலாம்,

பதிவு செய்யும் முறை
1) *கைகளின்* *புகைப்படம்*
2) *ஆதார் அட்டை*
3) *விலாசம்*
4) *கைபேசி எண்*

இவைகளை கீழ் காணும் எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்யலாம்

*8667284369*
*9361621114*
*9488906299*

முடிந்தவரை பகிரவும் 🙏

உங்களுடைய ஆடு, மாடு கால்நடைகள், செல்லப்பிராணிகள், சேவல், கோழி போன்ற பறவையினங்களுக்கு சிறந்த மருந்து.100% பாதுகாப்பானது, ...
31/07/2023

உங்களுடைய ஆடு, மாடு கால்நடைகள், செல்லப்பிராணிகள், சேவல், கோழி போன்ற பறவையினங்களுக்கு சிறந்த மருந்து.
100% பாதுகாப்பானது, சிறப்பானது.

பயன்கள்: எடையை அதிகரிக்கும், தேவையான சத்துக்களை அளிக்கும், நோய் எதிர்ப்புத் திறன் மேலோங்கும், தசைகளை வலுவாக்கும், ஜீரண சக்தியை சீராக்கும், பால் சுரப்பை அதிகரிக்கும், உறுதியான மற்றும் சத்தான எலும்பைத் தரும். குளிர் மற்றும் மழைகால நோய்களிலிருந்து பாதுகாத்திட உதவும்.
விலை : 185/- மட்டுமே
கிடைக்குமிடம்:
SVP ஹெல்த் கேர்,
SVP ஹோமியோ பார்மா,
சோமனூர் மெயின் ரோடு,
காரணம்பேட்டை.
090429 99657 9043999657

Address

1/1421, 1 St Floor, SVP Towers, Somanur Main Road, Karanampettai
Palladam
641401

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

+919042999657

Website

Alerts

Be the first to know and let us send you an email when SVP Homeo Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SVP Homeo Pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram
); }) .always(function() { gettingMore = false; }); } map._clearMarkers = function() { markersLayer.clearLayers(); } }); }, 4000); });