02/08/2022
#கண்பார்வை பெற்றோர்களின் கடமை!
கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக, பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. இருந்தாலும் பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பதே ஒரு கசப்பான உண்மை. ஆகவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளி காத்தல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்கிறோம்!.
உங்கள் குழந்தைக்கு கண்ணாடி தேவையா?
குழந்தைகள், பார்வை தெளிவாக இல்லை என்பதைப் பெற்றோரிடம் பெரும்பாலும் புகார் தெரிவிப்பதில்லை! காரணம் ஏதாவது ஒரு கண் தெளிவான பார்வையுடன் இருக்கலாம்; அல்லது ஒரு கண்ணோ இரு கண்களுமோ குறையுடன் இருந்தாலும் ஏதோ ஓரளவுக்கு பார்க்கும் திறன் இருந்தால் அப்படித்தான் எல்லோருக்கும் இருக்கும் என்று சிறு குழந்தைகள் இருந்து விடுகின்றன! பெரிய குழந்தைகள் கூட கண்களில் வலி ஏற்பட்டாலேயோழிய அல்லது மெனேஜ் பன்னும் அளவுக்கு மேல் குறை இருந்தாலேயோழிய புகார் செய்வதில்லை! என்றே தெரிகிறது!
எங்களிடம் பெற்றோர்கள் அழைத்து வரும் கிட்டத்தட்ட 14/15 வயது குழந்தைகள் கூட பலருக்கு கண்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்து அவர்களிடம் ஏன் இவ்வளவு நாள் குழந்தையை காட்ட வில்லை என்ற கேட்டால் அந்த பெற்றோர் குழந்தையை ஏன் என்னிடம் கூறவில்லை என்று அதட்டுவார் அந்த குழந்தை சொல்லும் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே இப்படித்தான் இருக்கு அப்பா! என்பது போன்று பதிலளிக்கும்! இது இங்கு சகஜமாக நடப்பது!
ஆகவே இது விஷயத்தில் பெற்றோர்களே கவனம் செலுத்த வேண்டும்!
குழந்தை அடிக்கடி தலை வலிக்கிறது மற்றும் கண் வலிக்கிறது என்று தெரிவித்தாலோ அல்லது கண் கூசும் அளவுக்கு ஒளிரும் பொருட்கள் அல்லாது ஏதாவது ஒரு சாதாரண பொருட்களை பார்க்கும்போது, கண்களை சுருக்கினாலோ, அல்லது படிக்கும் போது, கண் அருகே வைத்துக்கொண்டு படித்தாலோ. மேலும், வகுப்பறையின் கரும்பலகையில் உள்ள விஷயத்தைப் பார்த்து, தனது நோட்டில் எழுத மிகுந்த சிரமப்படுவதை அறிந்தாலோ...உடனடியாக ஒரு நல்ல கண் மருத்துவரிடமோ அல்லது கண்ணொளி நிபுணர்கள் உள்ள ஆப்டிகல்ஸுக்கோ காலம் கடத்தாது அழைத்துச்செல்வது பெற்றோர்களின் கடமை! .தள்ளிப்போடுவது, உங்கள் குழந்தையின் சிக்கலை அதிகரிக்கத்தான் செய்யும்!
இதில் அடுத்த ஆச்சர்யமான விஷயம் என்னவெனிஸ் பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கண்ணாடி அணிவதை விரும்புவதில்லை. அது துரதிர்ஷ்டமே! கண்களில் குறைகள் உள்ள உங்கள் குழந்தைகளுக்கு பார்வையில் தெளிவு ஏற்படுத்த்தி தருவதால், அவர்களின் படிப்பு மற்றும் மற்ற செயல்பாடுகளிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுவதை கண்கூடாக காணலாம்!
பெற்றோர்களில் ஒருவருக்காவது கண்களில் பார்வை குறைபாடுகள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தன் குழந்தையை பரிசோதித்துக் கொள்வது அவசியம்!
குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டவர்கள், ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம் கண் பரிசோதனை செய்துகொள்ளவது அவசியம்!
உங்கள் குழந்தை கண் தொடர்பான எந்த பிரச்சினையையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்கூட, குறைந்த பட்சம் முதல் பரிசோதனை மற்றும் வருடாந்திர பரிசோதனைகள் பல எதிர்கால நன்மைகளுக்கு அடிப்படையாக அமையும்.
எங்களிடம் உங்க கணனொளி சம்பந்தமான ஐந்து விதமான பரிசோதனைகள *இலவசமாக எங்கள் எல்லா கிளைகளிலும் செய்து கொள்ளலாம்!
#பெஸ்ட்ஆப்டிகல்ஸ் #கண்பரிசோதனை மையம்!
#பட்டுக்கோட்டை கிளை: பள்ளிவாசல் தெரு, வடசேரி ரோடு!
#அதிராம்பட்டினம் கிளை: சாரா கல்யாண மண்டபவளாகம் (ECR) சேது ரோடு!
ஃபோன் 6383521261