30/04/2014
இன்று மனிதனைப்பாதிக்கும் நோய்களை கணக்கிட்டால், அவற்றை நீங்கள், ஆயிரக் கணக்கில் எண்ணிக்கொண்டே இருக்கலாம். எண்ணிக்கையில் அடங்கா நோய்கள்
இன்று மனித குலத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், சித்தர்களின் கண்ணோட்டத்தில் [3] மூன்றே நோய்கள்தான்.! அவை, வாதம்,பித்தம்,கபம் ஆகும். இன்றய நோயின் பெயர் எதுவாயினும் அது இந்த மூன்றிற்குள்ளேயே அடக்கம்.
அது எப்படி? நன்றாக கவனித்து, படித்து உள்வாங்கிக்கொள்ளுங்கள்.. இவ்விடத்தில்.. நோய்களை குணமாக்குவதற்கு உண்டான வழிமுறைகளை 3பிரிவுகளாக விளக்குகிறேன்.
(1)திரிதோசநாடிகள் [அ] மூளை, நரம்பு, எலும்பு, தசை, மஜ்ஜை -ஆஹியானவற்றைப் பற்றிய கோளாறுகள் வாதம் ஆகும்.
(ஆ)நுரையீரலைப் பற்றிய சுவாசக்கோளாறுகள் கபம் எனப்படுகிறது. மேலும், (இ)மற்ற உள்ளுறுப்புகளையும், அதனால் உண்டாகிற இரத்தச்சீர்கேட்டையும் பித்தம் என்கிறோம்.
இப்போது, நீங்கள் எந்த நோயாளியைப் பார்த்தாலும் அவர், வாத தேகியா? பித்த தேகியா? கப தேகியா? -என்று கண்டு பிடித்து விடுவீர்கள் தானே?! -இந்த இடத்தில் இது இப்படியே இருக்கட்டும்.. .. வேறுசில விசயங்களைப் பார்த்து விட்டு பிறகு மீண்டும் இங்கே வரலாம்..
(2)வர்மப்புள்ளிகள் நோய்களை போக்கும் மருந்து நம் உடம்பிலேயே இருக்கிறது. அதன் பெயர் வர்மப்புள்ளிகள். அது நம் உடம்பில் 108 இடங்களில் அமைந்துள்ளன. இதில், படுவர்மம்12, தொடுவர்மம்96. ஆக, மொத்தம் 108வர்மப்புள்ளிகள். மேலும்,
(3) சித்தர்களின் உடலியற்கூறு தத்துவம், உச்சந்தலையில் இருந்து-உள்ளங்கால் வரை 72 ஆயிரம் சில்லறை நாடிகள் உள்ளன. இந்நாடிகள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து உள்ளுறுப்புகளுக்கான உயிரோட்டத்தை தொடர்ச்சியாக வழங்கிய வண்ணம் உள்ளது. இவற்றிற்கான ஆற்றலை வழங்குவது, கத்திரிக்கோல் மாறலாக அமையப்பெற்றுள்ள
தச நாடிகள் என்னும் (meridian way) 10 நாடிகள் ஆகும். இந்த தச நாடிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் வாத, பித்த, கப -எனப்படும் திரிதோஸ நாடிகள் ஆகும்.
ஆக, மேற்பார்த்த 72ஆயிரம் சில்லறை நாடிகளிலோ, 10தச நாடிகளிலோ, 3திரி தோச நாடிகளிலோ ஆற்றல் குறைபாடு ஏற்படும் போது, அது சம்பந்தப் பட்ட உள்ளுறுப்பு பாதிக்கப்படுகிறது. பாதிப்புக்கு தக்க நோய்யும் உண்டாகிறது. ஆற்றல் குறைபாட்டை சரி சரிசெய்ய, 108இடங்களில் இயற்கையாகவே, வர்மப்புள்ளிகள் அமையப்பெற்றுள்ளன. இவ்விடத்தில், தேவைக்கு ஏற்றவாறு, மிகச்சரியாக வர்மப்பிரயோகம் செய்தால், உடனடியாக துன்பம் குறைகிறது, முற்றிலுமாக நோய்யும் குணமாகிறது. நோய் எதுவானாலும் அதற்கான தீர்வு நம் உடம்பிலேயே இருக்கிறது. இது தெரியாமல்தான், இந்த டாக்டர்/அந்தடாக்டர்-என்றும், இந்த மெடிகல் ஸ்டோர்/அந்த மெடிகல் ஸ்டோர்-என்றும் கடை- கடையாக தேடி அலைகிறோம். இதைத்தான், "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாதஇடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே" -.! என்று ஒரு சித்தர் பாடினார்.. "நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" - வள்ளுவர் சொல்வதை நுட்ப்பமாக ஆராய்ந்தால் உங்களுக்கு ஒரு பேருண்மை புரியும். அதாவது நாடி, நாடி என்று குறள்-லில் கூறுகிறாரே ?!... அதுதான், 72ஆயிரம் [சில்லறை] நாடி/ [10 தச]நாடி/ 3[திரிதோச] நாடி //