25/04/2015
உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி
1. காலை மாலை நடைப் பயிற்சி
2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
3. பகல் தூங்காதிருத்தல்
4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல் ܼ¡Ð.
6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; 8.அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
9. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
10. பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், உட்கொள்ளல்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
• அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
• ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
• பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
• கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
• வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
• கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடைகுறையும். -
கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது
ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா, டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்தியஎங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.
ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.
தக்காளி இரசம்
நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
உடல் பருமன் குறையும்!
100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு
சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால்
உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு
தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாதுஉப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது.அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
பார்வை நன்கு தெரிய
இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.
செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
காய்ச்சலா? பித்த வாந்தியா?
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.
ஆஸ்துமாவா?
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் தக்காளிச்சாறு மிக்ஸி மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும். முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு டம்ளரில் உள்ள தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.
மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த நன்மையளிக்கும் சிகிச்சை
முறை இது.சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகிவருவதும்
கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச்
சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்;
உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும்.
இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்துச் சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதை இது ஜீரணிக்கச் செய்துவிடும். அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக்கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும். எனவே உணவைக் குறைவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியைத் தக்காளி இரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாகச் சாப்பிட முடியாது. ஓட்டலுக்கு இந்த முறையால் லாபமும் கிடைக்கும்.
பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.
தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்த குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும்
அருந்த வேண்டம். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறே போதும்.
பார்வை நரம்புகள் பலம் பெற
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில்
இருக்கிறது. அதனால் கண் பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும்
தக்காளிப் பழத்தையும், தக்காளிச் சாற்றையும் லண்டனின் உள்ள கைஸ் மருத்துவமனை (Guy’s Hospital) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் குணப்படுத்தி வருகிறது. இதற்குத் ‘தக்காளி வைத்தியம்’ என்று பெயர்.
தக்காளி தென்னமெரிக்காவில் தோன்றியது. ஐரோப்பியர்களால் ‘காதல் பழம்’
என்று வழங்கப்படுகிறது. உலகில் அதிகம் விளையும் முதல் காய்கறி உருளைக்கிழங்கு, இரண்டாவதாக அதிகம் விளையும் காய்கறி தக்காளி.
பதப்படுத்தப்பட்ட தக்காளி சூஸ் உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது.
தக்காளியுடன் துவரம் பருப்பு சேர்த்து பச்சடி செய்து எல்லா வயதினரும் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் நிகழலாம்.
இஞ்சியைத்தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப்
பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும்.இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள்,வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய்மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
இயந்திர மயமாகிவிட்ட இச்சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டே வேலை
செய்பவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள் தான் இத்தகைய உடல் பருமனுக்கு பெரும்பாலும் ஆளாகிறார்கள். சில பரம்பரை காரணிகளாக இருப்பதுண்டு. குழந்தைள் கூட இந்த உடல்பருமன் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.
முக்கியமான காரணங்கள்
1. அதிக கலோரி மதிப்புகளை உடைய உணவினை அதிக அளவில் உண்ணுதல்.
2. குறைந்த அளவில் உடற்பயிற்சி செய்வது
3. உடற்பயிற்சியே செய்யமலிருப்பது.
1. குறைந்த கலோரிகளை உண்ணுதல்
உடல் பருமனை குறைப்பதற்கு குறைந்த கலோரிகள் உள்ள உணவை உண்ண வேண்டும்.
கலோரிகளின் அளவைக் குறைக்கும்போது அடிப்போஸ் திசுக்களில் ஏற்கெனவே
சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகளானது கரைந்து உடலுக்கு சக்தியைத்
தருகின்றன. இந்த முறையில் கொழுப்பு கரைய கரைய உடலில் உள்ள தேவையற்ற தசைகள் அதாவது உடல் பருமனானது சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.
2. உடற்பயிற்சி
சுமாரான அளவுள்ள உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்து வந்தால் கூட உடல்பருமன் குறைய வாய்ப்பிருக்கிறது.அதாவது நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் அளவுக்கு தகுந்த வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது.
உதாரணமாக ஒரு நாள் 3 மைல் தூரம் நடக்கும்போது 300 கிலோ கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால் உடல் பருமன் குறைவதோடு, மேலும் பருமனாகமல்
தடுக்க முடியும்.
3. உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் (Weight Maintenance Diets)
உடல் எடையைச் சமச்சீராக அதாவது இயல்பான நிலைக்கு வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களை சரியான அளவுகளுடன் உண்ணும்போது உடல்பருமன் என்றாலே என்னவென்றே தெரியாமல் போகும்.
தடுப்பு முறைகள்
உடல் பருமனை நாம் உண்ணும் உணவு முறைகளில் மூலம் தடுக்கலாம்.
1. அதிகக் கலோரிகளை உண்ணக்கூடாது.
2. அடிக்கடி உணவினை சாப்பிட்டுக் கொண்டே இருக்கக்கூடாது.
3. இடைவெளி விட்டு நேரத்திற்கு தகுந்தாற் போல் சரியாக உண்ண வேண்டும்.
4. நன்றாக பசி எடுத்த பின்னரே உண்ண வேண்டும். (இது ரொம்ப முக்கியம்)
5. ஏதோ கடமக்கு என்று சாப்பிடக் கூடாது.
6. வறுக்கப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
7. எண்ணெய்ப் பொருட்கள், கொட்டை வகைகள், இனிப்புப் பண்டங்களைத் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
8. முக்கியமாக கொழுப்புச் சத்துக்கள் கலந்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
9. தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
10. ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உண்ணப்படும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைப்
பற்றி குழந்தகளுக்கும், தாய்மார்களுக்கும் தெள்ளத் தெளிவாகக் கூறி
புரியும்படி விளக்களாம்.