ரமா நாட்டு மருந்துக் கடை,பொள்ளாச்சி

  • Home
  • India
  • Pollachi
  • ரமா நாட்டு மருந்துக் கடை,பொள்ளாச்சி

ரமா நாட்டு மருந்துக் கடை,பொள்ளாச்சி In this store you can get all kinds of Siddha,Ayurveda,Organic Medicines. Its a one stop for all your organic medicinal queries

All kinds of siddha medicines like choornam,lekiyam,tablets,tonics are be available.And also all pooja items are available.

எங்களது புதிய தொடக்கம். ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் ஆடையகம்,ஒரு பீஸ் கூட வாங்கலாம்,ஆன்லைன் ஆர்டர் வசதி உண்டு.Like, Share,S...
04/02/2023

எங்களது புதிய தொடக்கம். ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் ஆடையகம்,ஒரு பீஸ் கூட வாங்கலாம்,ஆன்லைன் ஆர்டர் வசதி உண்டு.

Like, Share,Subscribe and Support us..

https://youtube.com/shorts/P0nsqaRntsc?feature=share

Launching Mens Branded Sweatshirts in CA Infinity Collections

Offer sale.. book ur orders soon

Mens Branded Premium Quality Sweatshirts. For orders watsapp at 9884445569.Book your orders soon. very limited stock. , , , , ...

குழந்தைகள் நைட்டி எங்களிடம் கிடைக்கும்
30/11/2022

குழந்தைகள் நைட்டி எங்களிடம் கிடைக்கும்

Girls Pure Cotton Nighty available for 2 to 12 yrs. For Orders Kindly Watsapp at 9884445569. , , , , , , , ...

சலுகை விலையில் குழந்தைகள் ஆடை. விரைவில் ஆர்டர் செய்யுங்கள்
08/11/2022

சலுகை விலையில் குழந்தைகள் ஆடை. விரைவில் ஆர்டர் செய்யுங்கள்

, , , , , , , , , , , , , , , are stockist of Kids ...

We have started our new venture for kids daily wear collections. Do like and follow our page for trusted, budget friendl...
01/11/2022

We have started our new venture for kids daily wear collections. Do like and follow our page for trusted, budget friendly online shopping.

, , , , , , , , , , , , , , Name-CA ...

பக்கவாதம் என்றால் என்ன ?    இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக...
24/05/2022

பக்கவாதம் என்றால் என்ன ?

இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும்.. இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.

மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

பக்கவாதம் வகைகள் :

பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும்.

மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது - Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள் , காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும்.

பக்கவாதம் அறிகுறிகள் :

நன்றாக இருப்பார்கள் திடீரென்று கை,கால் வராமல் போவது, ஒருபுறம் வாய் கோணலாகப் போவது, சிலருக்கு பேசுவதற்கு வார்த்தை வராது, ஒருசிலர் பேசுவார்கள் ஆனால் வாய் உளரும். ஒருசிலருக்கு இடது கையோ, வலது கையோ மறத்துப்போதல், இன்னும் சிலருக்கு நடை தடுமாறுதல், சிலருக்கு இரண்டிரண்டாகத் தெரிவது, தலைசுற்றுவது என இந்த மாதிரி மூளையில் எந்தப் பகுதியில் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதோ? அதனுடைய செயல்கள் இழந்து போவதால் அறிகுறிகள் நிறைய வரும். முக்கியமாக மக்களுக்குத் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் கை, கால் விளங்காமல் போவது, வாய் கோணித்துக்கொள்வது, பேச்சு வராமல் இருப்பது இந்த மூன்றும் முக்கியமான அறிகுறி. இந்த விதமான அறிகுறி இருந்தது என்றால் உடனே அதைப் பக்கவாதம் என்று தெரிந்து அருகாமையில் இருக்கிற பக்கவாதத்திற்கான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.

நன்றி.

கிழட்டு தன்மை நீங்க கீழாநெல்லியை சாப்பிடுங்க  கல்லீரலின் இயக்கம் சீராக நடைபெற்றால் இதன் விளைவாக உடலில் அழகும் ஆரோக்கியமு...
15/11/2021

கிழட்டு தன்மை நீங்க
கீழாநெல்லியை சாப்பிடுங்க

கல்லீரலின் இயக்கம் சீராக நடைபெற்றால் இதன் விளைவாக உடலில் அழகும் ஆரோக்கியமும் நீண்ட இளமையும் எப்போதும் இயல்பாக இருக்கும்

கல்லீரலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதாவது கல்லீரல் பாதிப்பு அடைந்து விட்டால் நமது உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இளமையிலேயே முதுமை தோற்றம் வந்துவிடும்

எனவே கல்லீரலை பலம்பெற செய்தால் போதும் உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களின் பாதிப்புகளும் வெகு எளிதாக விலகிவிடும்

கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க ஒரு எளிய வைத்தியம்

பச்சையான கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு பறித்து இதை மைபோல அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு பசு மோர் அல்லது பசும்பாலில் இதை கலக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் இதை பருகி வர இதன் விளைவாக கல்லீரல் மிகுந்த பலத்தை பெறும்
மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க இது மிகவும் துணை புரியும் உடலில் எப்போதும் இளமை நீடிக்கும் இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நமது உடலில் மிக மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல் இரைப்பை சிறுநீரகம் பித்தப்பை கணையம் மண்ணீரல் கருப்பை போன்ற ராஜ உறுப்புகள் அனைத்தும் பழுது ஏற்படாமல் நல்லமுறையில் பாதுகாக்கப்படும்

சிறுநீரகம் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இயங்க கீழாநெல்லி பெரிதும் உதவும் எந்த முறையிலேனும் கீழாநெல்லியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் பலம் பெறும்

இதன் மூலம் மண்ணீரல் பழுதடையாமல் பாதுகாக்கப்படும் நமது உடலில் மண்ணீரல் பழுதடையாமல் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்புகள் உடலில் தோன்றாது

சர்க்கரை நோயின் பாதிப்பால் இன்சுலின் சுரப்பு குறைந்திருந்தாலும் கீழா நெல்லியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும் கணையமும் நன்கு செயல்பட துவங்கும்

சர்க்கரை நோயின் பாதிப்பில் இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் சம அளவாக வெள்ளை கரிசலாங்கண்ணியை சேர்த்து இரண்டையும் பொடியாக செய்து கொண்டு இதை தினந்தோறும் காலை மாலை இருவேளையும் இதில் மூன்று கிராம் எடுத்து இதை வெந்நீரில் கலந்து இதை தொடர்ந்துசாப்பிட்டு வர சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக விலகும் மேலும் உடலில் மற்ற நோய்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இது நமது உடலை பாதுகாக்கும்

ரத்த சோகை இருப்பவர்கள் இந்த மருத்துவ முறையை கடைபிடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும்

கீழாநெல்லி இலையை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து மை போல அரைத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும் உடல் உஷ்ணத்தால் இளைத்த உடலில் கொஞ்சம் சதை பிடிக்கும் முகத்தில் அழகும் பொலிவும் ஏற்படும்

இளமை நீடிக்க
வாலிப வயோதிகம் நீங்க
ஆண்மை சக்தி அதிகரிக்க

கீழாநெல்லியுடன் சம அளவாக
ஓரிதழ் தாமரை விஷ்ணுகிரந்தி இரண்டையும் கலந்து இதை மைபோல அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் தோன்றும் முதுமை மறையும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் நீர்த்த விந்து இறுகி கெட்டிப்படும்

காமாலை நீங்க
கல்லீரல் பலம் பெற

கீழாநெல்லி இலை கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை இவைகளை சம அளவாக எடுத்து நன்றாக இதை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கொண்டு

காயவைத்து ஆறிய பசும்பாலில் இதை கலந்து காலைவேளையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் பருகி வர மஞ்சள் காமாலை பூரணமாக குணமாகும்

இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில் உணவில் உப்பு புளி காரத்தை முழுமையாக நீக்க வேண்டும் பால்சோறு அல்லது மோர் சாதம் சாப்பிட்டால் இந்த மருத்துவ முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இது உறுதி

வெள்ளை நோய் நீங்க
நீர்த்தாரை ரணம் குணமாக

கீழாநெல்லி ஓரிதழ்தாமரை யானை நெருஞ்சில் இவைகளை சமஅளவாக எடுத்து இதை மைபோல அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு இதை எருமைத் தயிரில் கலந்து பத்து நாட்கள் காலை வேளையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம் குணமாகும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு நீங்கும்

இந்த மருத்துவ முறையை கடைபிடிக்கும் பொழுது அதிக காரமும் மிகுந்த சூடும் இல்லாமல் உணவை சாப்பிட வேண்டும்

தோல் நோய்கள் நீங்க
சர்க்கரை நோய் குணமாக

கீழாநெல்லி வெள்ளை மிளகு பரங்கிப்பட்டை சிறியாநங்கை ஆடுதின்னா பாளை இவைகளை சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக செய்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர கருங்குட்டம் வெண்குட்டம் சிறுநீர் வழியில் ஏற்படும் புண்கள் தோல் வியாதிகள் இவைகள் குணமாகும் மேலும் சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் முழுமையாக நீங்கும்

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை பறித்து இதில் சிறிதளவு உப்பு சேர்த்து இதை நன்றாக மை போல அரைத்து சொறி சிரங்கு அரிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர தோலில் ஏற்படும் படை கடி போன்ற விஷங்கள் நீங்கிவிடும் தேகத்தில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்

பார்வை சக்தி அதிகரிக்க

கீழாநெல்லி மூக்கிரட்டை பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து இருநூறு மில்லி
பசுமோரில் கலந்து இதைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர மாலைக்கண் பார்வை மங்கல் வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் நீங்கும் கண்ணில் பார்வை சக்தி அதிகரிக்கும்

சீதபேதி குணமாக

கீழாநெல்லி இலை மாதுளம் கொழுந்து நாவல் கொழுந்து இவைகளை சம அளவாக எடுத்து மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் இருநூறுமில்லி பசு மோரில் கலந்து குடித்து வர சீதபேதி குணமாகும்

பீனிசம் மூக்கடைப்பு குணமாக

கீழாநெல்லி இலைச்சாறு உத்தாமணி இலைச்சாறு குப்பைமேனி இலைச் சாறு இவைகளை சம அளவாக எடுத்துக் கொண்டு இதற்கு சமமாக நல்லெண்ணெய் சேர்த்து இதை தைல பதமாகக் காய்ச்சி வடித்து கொண்டு இதில் இரண்டு துளி வீதம் எடுத்து இரண்டு மூக்கிலும் நசியமிட்டு வர ஓயாத தலைபாரம் தலைவலி நீங்கும் மூக்கில் நீர்வடிதல் குணமாகும் பீனிச நோய் குணமாகி மூக்கடைப்பு நீங்கும்

விக்கல் ஏப்பம்
வயிற்று உப்பிசம் குணமாக

கீழாநெல்லியை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து இதற்கு சமமாக மிளகு வெள்ளைப் பூண்டு சேர்த்து கல்வத்திலிட்டு மைபோல அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் முறை காய்ச்சல் நாள்பட்ட காய்ச்சல் சீதபேதி வயிற்று மந்தம் முதலியவை குணமாகும் மேலும் விக்கல் ஏப்பம் ஏற்படும் சமயம் இந்த மாத்திரைகளில் ஒன்றை மென்று சாப்பிட்டுவரவாய்வு தொந்தரவால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும்

கீழாநெல்லி பொடியும்
மருத்துவ குணமும்

கீழாநெல்லியை முழு செடியாக பிடுங்கப்படும் அரசி நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து இதில் மூன்று கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து அதிகாலை வேளையில் தொடர்ந்து பருகி வர இரைப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் சீராக இயங்கும்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் கீழாநெல்லியை பச்சையாகவோ அல்லது பொடியாகவோ செய்து கொண்டு இதை பசு மோருடன் கலந்து தொடர்ந்து காலைவேளையில் தினந்தோறும் சாப்பிட்டு வர நிச்சயமாக இது நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை குணப்படுத்தும்

மேகம் சம்பந்தமான வெள்ளை வெட்டை போன்ற நோய்களையும் இது குணப்படுத்தும் காமாலை நோய் வருவதை தடுக்கும் சர்க்கரை நோய் வருவதைத் தடுத்து நிறுத்தும்

கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் இதன் மூலம் இளமையும் அழகும் பொலிவும் எப்பொழுதும் இருக்கும்

இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருத்துவ தாவரங்களில் சிறப்பான முதல் தரமான இடத்தை கீழாநெல்லிக்கு தரலாம் அப்படி ஒரு அற்புத சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு

நோய்கள் இன்றி வாழ
கீழநொல்லி ஒன்றே போதுங்க

சித்தர்களின் சீடன்
பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

21/02/2021
எளிய முறை காடை வறுவல்
31/01/2021

எளிய முறை காடை வறுவல்

This video describes the preparation of Quail/Kaadai Gravy. Please try this recipe and let us know your feedback in comments.Video Contents:Introduction - 0:...

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் போதுமான அள...
26/01/2021

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.
வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.
தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

வீடே மணக்கும் மீன் வறுவல், விரைவில் செய்யலாம்.
25/01/2021

வீடே மணக்கும் மீன் வறுவல், விரைவில் செய்யலாம்.

This video shows how to prepare fish fry .Please do try this recipes and share your valuable feedback in comment section.Video Contents:Introduction - 0:00In...

Address

136, Bazzar Street, Near VKR Textiles, Besides Co-Optex Textiles
Pollachi
642001

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 9:30am - 9:30pm

Telephone

+919894640480

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரமா நாட்டு மருந்துக் கடை,பொள்ளாச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ரமா நாட்டு மருந்துக் கடை,பொள்ளாச்சி:

Share