Vidhya Siddha Pharmacy

Vidhya Siddha Pharmacy SELLING SIDDHA, AYURVEDA, UNANI MEDICINES

16/10/2025

*இன்றைய (16-10-2025) மூலிகை தகவல்*

*நல்ல வேளை*

1. *மூலிகையின் பெயர்*: நல்ல வேளை

2. *தாவரப்பெயர்*: GYNANDROPSIS PENTAPHYLLA.

3. *தாவரக்குடும்பம்*: CAPPARIDACEAE.

4. *பயன்தரும் பாகங்கள்*: இலை, பூ மற்றும் விதைகள்.

5. *வேறு பெயர்*: தை வேளை.

6. *வளரியல்பு*:
நல்ல வேளைச் செடி மழை காலங்களில் தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் வளர்கிறது. ஆப்பிரிக்கா, காங்கோவில் அதிகம் காணப்படும். ஒன்றாகக் குத்துக் குத்தாக வளரும். நீண்ட காம்புடன் விரல்களைப் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்து மலர்களையும் உடைய சிறுஞ்செடி. இதன் விதைகளைக் கடுகுக்குப் பதிலாக பயன் படுத்துகிறார்கள். எண்ணையும் எடுக்கிறார்கள். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. *மருத்துவப் பயன்கள்*:
இலை நீர்கோவை நீக்கும் மருந்தாகவும், பூ கோழையகற்றிப் பசியுண்டாக்கவும், விதை இசிவு அகற்றியாகவும், வயிற்றுப் புழுக்கொல்லியாகவும், குடல் வாயுவகற்றியாகவும் பயன் படும்.

சமூலத்தை இடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க நீர்க்கோவை, தலைப்பாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.

இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம் சீதளச் சுரம் ஆகியவை தீரும்.

நல்ல வேளை இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.

நல்ல வேளை இலையை அரைத்துப் பற்றுப் போடச் சீழ் பிடித்துக் கட்டிகள் உடைந்து ஆறும்.

பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கக் கபம்,
கணமாந்தம் சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம், நீர்கோவை ஆகியவை தீரும்.

விதையை நெய்விட்டு வறுத்து பொடித்து சிறுவர்க்கு அரை கிராம், பெரியவர்க்கு 4 கிராம் வீதம் காலை மாலையாக மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் (விளக்கெண்ணையில்) பேதிக்குக் கொடுக்கக் குடலிலுள்ள தட்டைப்புழுக்கள் கழியும்.

16/10/2025

*இன்றைய (14-10-2025) மூலிகை தகவல்*

14/10/2025

டெங்கு காய்ச்சலில் இருந்து
காத்துக்கொள்ள பயணுள்ள யோசணைகள்

பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது.

வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும்.

இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை வராது.

எப்படி பரவுகிறது?

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) எனும் உடலில் கோடுகள் உள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளியிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர்தான் அடுத்தவர்களுக்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.
இக் கொசு கடித்து நோய் வர 5முதல் 15நாட்கள் வரை ஆகும்.

டெங்கு அறிகுறிகள்:
**********************
ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தொடர்ந்து தலைவலி,கண்களைச் சுற்றி வலி, முதுகுவலி, பின்னர் கடுமையாக கால் மற்றும் மூட்டுகளில் வலி
உடல் முழுவதும் வலி, சளி, வரட்டு இருமல், குளிருடன் காய்ச்சல் விட்டு விட்டு வரும். உடல் களைப்பு,அசதி இருக்கும்.

இந்த குறிகுணங்கள் போன்றவை வந்து சில மணி நேரத்தில் காச்சல் 104 டிகிரி பாரன்ஹீட்
வரை போகலாம்.நாடித்துடிப்பு குறைதல்
ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும்.கண்கள் சிவக்கும்,உடலின் தோல் நிறம் மாறு

13/10/2025

மரப்பாச்சியின் மகத்துவம்

மரப்பாச்சி பொம்மை மகிமை

அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள் அன்னதானத்தைவிட சிறந்த தானம் இல்லை.ஆகையால்

பொம்மைக்கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். அதை அடியேன் பார்த்திருக்கிறேன்.

சரி திருமணம் ஆகிவிட்டது.பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்

அந்தப்பெண் அந்த பொம்மைகளையே

தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள்

காரணம் அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது.

சரி குழந்தை பிறந்துவிட்டது

அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து

கட்டி மேல் தடவுவார்கள்.

சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக்கொடுப்பார்கள்.அதை

குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

சரி அடுத்தது இனிமரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக

வாங்கிக்கொடுங்கள்.வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.

கண்ணில் கிருக்கட்டி வந்தால் மரப்பாச்சி மை சந்தனக் கல்லில் இழைத்து போட்டால் சரியாகிவிடும்.

தகவல் பகிர்வு
வித்யா சித்தா பார்மசி வைசியாள் வீதி புதுச்சேரி

08/10/2025

பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை மாதம் மாதம் பூசம் நட்சத்திரம் அன்று கொடுக்க வேண்டிய swarnaprasam சுவர்ணபிராசம், எங்களிடம் உள்ளது, செல்:8489982168,
வித்யா சித்தா பார்மசி, வைசியாள் வீதி, புதுச்சேரி
நோய் எதிர்ப்பு சக்தி, மூளை திறன் அதிகரிக்கும்

Address

Calve Subbraya Chetty Street
Pondicherry
605002

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 10am - 1pm

Telephone

+919994473581

Alerts

Be the first to know and let us send you an email when Vidhya Siddha Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vidhya Siddha Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram