21/03/2021
இன்று 21. 3 .2021 உலக டவுன் சிண்ட்ரோம் தினம். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள்,சமூக சேவகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து டவுன் சிண்ட்ரோம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,பொது நிகழ்ச்சிகள் பலவற்றை செயல்படுத்தி அதன்மூலம் இந்த குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் சம உரிமையை நிலைநாட்டுவதும் கொண்டாட்டத்தின் நோக்கமாகும் .
டவுன்சின்ரோம் ஒரு மரபணு குறைபாடு. அதனால் மூளை வளர்ச்சி தாமதம், இருதய நோய், காதுகேளாமை கண் கோளாறு, தசைப் பிரச்சினை மற்றும் தைராய்டு பிரச்சனை போன்ற பல நோய்கள் ஏற்படலாம் இந்தக் குறைபாட்டை முதலில் வரையறுத்த ஆங்கிலேய மருத்துவர் ஜான் லாங்டன் டவுன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
வயது அதிகம் உடைய தாய்மார்களுக்கு கர்ப்பம் தரிக்கும் பொழுது இந்த குறைபாடு அவர்கள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த குறைபாடு 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவில் இருந்து ஆயிரம் பேருக்கு ஒருவர் என்னும் அளவு வரை வேறுபடுகிறது.
இதனை மரபணு பரிசோதனைகள் மூலமும் முன்னரே கண்டறியலாம்.
டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை, சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் மேலும் மரபணு ஆலோசனை மூலம் பெற்றோர்கள் அடுத்த அடுத்த குழந்தைகளை இந்தக் குறைபாடு இல்லாமல் நன்முறையில் பெற்றிடலாம்.
டாக்டர் கிருத்திகா, மரபியல் மருத்துவர்,
சேலம் ஜெனிடிக் சென்டர்.
(இன்று தினகரன் செய்திதாளில் டவுன் சிண்ட்ரோம் பற்றிய என்னுடைய விழிப்புணர்வு குறிப்பு வெளிவந்துள்ளது)