12/08/2016
ஐ.டி வல்லுனர்களே அலார்ட் (ஆ அவ்ட்ச்)
பெங்களூரில் பணியில் உள்ளதால் ஐ.டி துறைசார்ந்த பணியில் உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு அல்லது குறைந்தது ஒருவருக்கவாது மருத்துவம் அள்ளிப்பது வழக்கமாகிவிட்டது. தனக்கு இருக்கும் ஆங்கில அறிவுத்திறன் மற்றும் கூகுள் மருத்துவர் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டே இயன்முறை மருத்துவம் எடுத்துக் கொள்ள வருவார்கள். சில நேரம் இவர்கள் கேட்கும் கேள்விகள் அறிவின் உச்சம் தொட்டு விடும். அனைத்தும் அறிந்தே இவர்கள் வருவதாக இருந்தாலும், இயன்முறை மருத்துவராக அனைத்து நிலைகளிலும் ஆய்ந்து மருத்துவம் அளிக்க முற்பட வேண்டும். பொதுவாக இவர்கள் தொடர்ந்து 8 முதல் 12 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிய நேரிடும் பொழுது உடலின் வடிமைப்பில் (human design) ஏற்படும் மாற்றம் மற்ற தசைகளில் அழுத்தத்தையும், இறுக்கத்தையும்(TIGHTNESSS) ஏற்படுத்தும் (POSTURAL CHANGES). இதனால் தசை வலி (PAIN IN THE MUCLES) ஏற்பட நேரிடும், நாட்பட்ட தசை வலி பின்னாளில் நாட்பட்ட வலியாக வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதனை மருத்துவத்தில் (chronic pain) என்பார்கள்.. பொதுவாக கழுத்து வலி, முதுகு வலி, தோள் பட்டை வலி, முழங்கை வலி மற்றும் மணிக்கட்டில் வலியாக வெளியே தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து பணி புரிய நேரிடும் பொழுது பல லட்சம் ப்ராஜெக்டாக இருந்தாலும் குறைந்தது 1 மணிக்கு ஒரு முறை உங்கள் இருக்கையில் இருந்து எழுந்து இரண்டு நிமிடம் நடந்து விட்டு அமருங்கள். ஏனென்றால் உங்களுக்கு கொடுத்து இருக்கும் இருக்கை உங்கள் வடிமைக்கு ஏற்றவாறு கண்டிப்பாக வடிவமைக்கப்பட்டதாக இருக்காது. (ERGONOMICALLY DESIGNED CHAIR).. தொடர்ந்து கழுத்து தசைகளை stretch செய்வது, முதுகு தசைகளை stretch செய்து விட்டு சிறிது தண்ணீர் குடித்துவிட்டு அமருவது நாட்பட்ட வலிகள் வருவதிலிருந்து காத்துக்கொள்ள கண்டிப்பாக உதவும்.