Together We Can

Together We Can To create Awareness Diabetes, Hypertension, Drug Addiction, Alcohol addiction, Rehabilitation center for Physically handicapped To conduct Mobile medical c

Health and General Knowledge

இதய நோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள்!ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கி...
20/09/2019

இதய நோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள்!

ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஒருவர் செய்ய வேண்டியது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது தான். ஆரோக்கியமான டயட்டினால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல நோய்களுக்கு வழிவகுக்கும் தொப்பையை வரவிடாமல் தடுக்கலாம்.

நிச்சயம் நாம் சாப்பிடும் ஏராளமான உணவுகளால் நமது இதயத்தின் ஆரோக்கியம் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் ஒருவர் அளவுக்கு அதிகமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்கள் உடல் பருமனடைவதோடு, இதய நோயினாலும் பாதிக்கப்படக்கூடும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளுள் முதன்மையானது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது ஆகும்.

ஒருவரது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயின் தாக்கத்தைத் தடுக்கும் ஏராளமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தாலே, ஒருவரால் இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதய நோயில் ஒன்றான கார்டியாக் அரெஸ்ட் மூலம் திடீரென்று மரணத்தை தழுவினார். இச்செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒருவர் எப்போது வேண்டுமானாலும் இதய நோயால் பாதிக்கப்படலாம். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் உறுப்புக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தால், மரணத்தை சந்திப்பதைத் தவிர்க்கலாம். இக்கட்டுரையில் ஒருவரது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். ஆகவே வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது சால்மன் மீனை உணவில் சேர்த்து வாருங்கள். ஒருவேளை சால்மன் மீன் கிடைக்காவிட்டால், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களையாவது சாப்பிடுங்கள்.

வால்நட்ஸ்
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். மேலும் வால்நட்ஸிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. வேண்டுமானால், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆளி விதை, சியா விதைகள் போன்றவற்றையும் அன்றாடம் சாப்பிடலாம்.

ராஸ்ப்பெர்ரி
ராஸ்ப்பெர்ரி பழங்களில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும். ராஸ்ப்பெர்ரி கிடைக்காவிட்டால், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

கொழுப்பு குறைவான பால் அல்லது தயிர்
பால் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எப்போது ஒருவர் கொழுப்பு குறைவான பால் அல்லது பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்கிறாரோ, அப்போது அவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். ஆகவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் மற்றும் அதற்கு ஏற்ப உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த வகை நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவேளை கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பீன்ஸ்களை வாங்குவதாக இருந்தால், அவற்றில் சோடியம் குறைவாக அல்லது உப்பு சேர்க்காததை வாங்குங்கள். ஏனெனில் சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அப்படியே உப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அவற்றை நீரில் நன்கு கழுவி, பின் பயன்படுத்துங்கள். கரையக்கூடிய நார்ச்சத்துக்களானது கொண்டைக்கடலையில் மட்டுமின்றி, கத்திரிக்காய், வெண்டைக்காய், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றிலும் தான் உள்ளது. வேண்டுமானால் இவற்றை சாப்பிடுங்கள்.

ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா-க்ளுக்கான் என்னும் ஒரு வகை நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். 1 1/2 கப் வேக வைத்த ஓட்ஸில், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஒரு நாளைக்குத் தேவையான அளவு பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இந்த பீட்டா க்ளுக்கான் பார்லி, கடற்பாசி போன்றவற்றிலும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமான எண்ணெயாக கருதப்படும் ஆலிவ் ஆயிலில் மற்ற உணவுப் பொருட்களை விட சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான அளவிலேயே உள்ளது. விலங்கு பொருட்களில் இருந்து பெறப்படும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, தமனிச் சுவர்களில் கொழுப்புக்களை படியச் செய்து, இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கும். ஒருவேளை உங்களுக்கு ஆலிவ் ஆயில் பிடிக்காவிட்டால், கனோலா எண்ணெய் மற்றும் குசம்பப்பூ எண்ணெயைப் (safflower oil) பயன்படுத்தலாம்.

டார்க் சாக்லேட்
கொக்கோ என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டில், ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் செய்யும். மேலும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, தமனிச் சுவர்களில் கெட்ட கொழுப்புக்கள் தேங்காமல், தமனியை சுத்தமாக வைத்திருக்கும். அதிலும் டார்க் சாக்லேட்டில் தான் அதிகளவு ப்ளேவோனால்கள் மற்றும் குறைவான சர்க்கரை உள்ளது. சர்க்கரை கூட இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா?

அவகேடோ
அவகேடோ பழம் வழுவழுவென்று இருப்பதால், அப்பழம் கொழுப்பு நிறைந்த பழம் போன்று காணப்படும். அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது தான். ஆனால் அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு என்னும் நல்ல கொழுப்பு அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலினுள் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தினுள் நாள்பட்ட அழற்சியால் ஏற்படும் பெருந்தமனி தடிப்பு ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக அவகேடோ பழத்தில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் இப்பழத்தை அளவாக எடுப்பதே நல்லது.

உப்பில்லாத பாதாம் வெண்ணெய்
முழு தானியய டோஸ்ட்டின் மீது நட்ஸ் வெண்ணெய் தடவி சாப்பிட அற்புதமாக இருக்கும். நட்ஸ் வெண்ணெய்களில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. எனவே எப்போதும் நட்ஸ் வெண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவை உப்பு இல்லாததாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உப்பில்லாத பாதாம் வெண்ணெய் கிடைக்காவிட்டால், உப்பில்லாத வேர்க்கடலை வெண்ணெய் வாங்கி சாப்பிடுங்கள்.

சிவப்பு திராட்சை
சிவப்பு நிற திராட்சையில் ரெஸ்வெராட்ரால் என்னும் இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். ரெட் ஒயின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற கூறுவதற்கு காரணம், இது இந்த சிவப்பு திராட்சையைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் தான். ஆனால் எந்த ஒரு உடல்நல நிபுணர்களும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ரெட் ஒயினைக் குடிக்க பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் அதில் ஆல்கஹால் சிறிதளவு உள்ளது. ஆகவே ரெட் ஒயினை குடிக்க நினைத்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

தக்காளி
தக்காளி கூட இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின்கள், ப்ரீ-ராடிக்கல்களால் இதயத்திற்கு ஏற்படும் அபாயத்தைத் தடுத்து, இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்

– அனைவருக்கும் பகிருங்கள்.
Shared from Tamil Tips..!!

18/05/2019

Together We Can ..

ஹெல்த் டிப்ஸ்
31/03/2019

ஹெல்த் டிப்ஸ்

20/03/2019

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆங்கிலச் சொற்கள்.

மாணவர்களுக்கும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் பயனளிக்க அதிகமாக பகிருங்கள் நண்பர்களே!! Keep sharing...

மேலும் #ஆங்கிலம், ஆங்கில இலக்கணம் கற்க ஆசையுடையோர், தேவையுடையோர் எமது முக நூல் குழுமத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://www.facebook.com/groups/328590577953817/

மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்புவில் உள்ள நன்மைகள்...!!மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அன...
15/02/2019

மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்புவில் உள்ள நன்மைகள்...!!

மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும். அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள். கிராம்புவில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.

கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், கிராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ தேனுடன் கலந்து உட்கொள்ள உடனே சரியாகும்.

கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.

நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.

– அனைவருக்கும் பகிருங்கள்

சமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...! முள்ளங்கி இலையைக் தூக்கிப் போடாமல், சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ...
12/02/2019

சமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...!


முள்ளங்கி இலையைக் தூக்கிப் போடாமல், சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுத்து சேர்த்து துவையல் அரைத்துப் பாருங்கள். சுவை அசத்தலாக இருக்கும். சத்தும் அதிகம். உடம்புக்கும் நல்லது.

புதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.

காலையில் செய்த கூட்டு மீந்துவிட்டதா? சிறிது பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கூட்டைக் கொதிக்கவிட்டு இறக்கினால், மாலை டிபனுக்குக் குருமா ரெடி. புளிப்பு அதிகம் வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.

பருப்பு வகைகளை வேகவைக்கும்போது, சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது பூண்டு போட்டு வேக வைத்தால் பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.

சாம்பார் செய்ய அல்லது வேறு ஏதாவது சமையல் செய்ய துவரம் பருப்பு வேகவைக்கும்போது, ஒரு பிடி கொள்ளையும் போட்டு வேகவைத்தால் உடம்புக்கு நல்லது.

மசாலா பொடிக்கு மிளகாயை வறுக்குபோது அதோடு ஒரு பிடி நிலக்கடலையைச் சேர்த்து கொள்ளுங்கள். நல்ல சுவையுடன் இருக்கும். கறிவகைகள் செய்யும்போது இந்தப் போடியை மேலாகத் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.

கூட்டு, பொரியல் குழம்பு வைக்கும்போது அவசியம் ஜீரகம் போட்டு தாளிக்கவும். குழம்பு வாசனையாக இருப்பதுடன் சாப்பாடு எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.

– அனைவருக்கும் பகிருங்கள்..
Shared from tips

பல்வலிக்கு தீர்வு தரும் இயற்கை மருந்து புதினா....! நமது பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பரம்பரை போன்ற காரணங்களினால் பல் ப...
12/02/2019

பல்வலிக்கு தீர்வு தரும் இயற்கை மருந்து புதினா....!


நமது பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பரம்பரை போன்ற காரணங்களினால் பல் பிரச்சனை பெரிய அளவில் தொல்லை தருவதாக உள்ளது. முக்கியமாக குளிர்ந்த ஐஸ்கிரீமோ, சூடான பானமே குடிக்கும்போது சுரீர் என வலி ஏற்படுத்தும்.
பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது.

மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து கலந்த பற்பசை, "ஃபில்லிங்', "ரூட் கெனால்' போன்ற சிகிச்சை முறைகளை பற்கூச்சத்தின் தீவிரத்துக்கேற்ப மேற்கொள்ளலாம்.

உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன்படுத்தும். பேக்டீரியாக்களை உப்பு அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும். ரத்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலங்களைத் தரும்.

கிராம்பு சிறந்த வலி நிவாரணி. வலியை மரத்துப் போகச் செய்யும். பேக்டீரியாக்களை அழிக்கிறது. அதன் காரத்தன்மைக்கு பேக்டீரியாக்கள் பற்களை நெருங்காது. அதிக நேரம் பல் தேய்த்தலையும், படுக்கைவசமாக தேய்த்தலையும், கடின கூச்சங்கள் கொண்ட பிரஷ்ஷினால் தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும். தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கமுள்ளவர்கள், அதைத் தடுக்க ஸ்பிளிண்ட் அல்லது நைட்கார்டு பயன்படுத்தலாம்.

புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்கினால் இரண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். மேலும் கொஞ்சம் புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து பல் துலக்கினால் இரெண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

தினம் ஒரு வாழை சாப்பிட்டு பாருங்க தெரியும்...! ஆண்டு முழுவதும் சீசன் உள்ள வாழைப்பழத்திற்கு, நமது நாட்டில் மட்டுமின்றி, உ...
05/02/2019

தினம் ஒரு வாழை சாப்பிட்டு பாருங்க தெரியும்...!


ஆண்டு முழுவதும் சீசன் உள்ள வாழைப்பழத்திற்கு, நமது நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கடும் கிராக்கி உள்ளது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது.

தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை. வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம பெரும்பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும்.

கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.

வாழைப்பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.

ஆய்வு ஒன்றில் ‘வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

– அனைவருக்கும் பகிருங்கள்

குளிர்காலத்தினால் சளி தொல்லையா? எளிதான தீர்வு இதோ...குளிர்காலம் துவங்கிவிட்டது, பனிபொழிவும் அதிகமாக காணப்படுகிறது. குளிர...
04/02/2019

குளிர்காலத்தினால் சளி தொல்லையா? எளிதான தீர்வு இதோ...

குளிர்காலம் துவங்கிவிட்டது, பனிபொழிவும் அதிகமாக காணப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி தொல்லைக்கும் மற்ற உடல்நல உபாதைக்கும் தீர்வை தெரிந்துக்கொள்ளுங்கள்...

1. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். எனவே குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும்.
2. குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு உதவுகிறது.
3. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஆரஹ்ன்சு பழத்தில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும்.
4. ஆரஞ்சை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க பருக வேண்டும்.
5. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். அதாவது, ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும்

– அனைவருக்கும் பகிருங்கள்

Shared from tips p

01/02/2019

Healthy life

Address

22 Railway Road Kollidam
Sirkazhi
609102

Alerts

Be the first to know and let us send you an email when Together We Can posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Together We Can:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram