26/10/2022
எண்ணம் போல் வாழ்வு. நம் வாழ்வு செழிக்க, நம் எண்ணத்தை நெறி செய்ய வேண்டும். கடந்த காலத்தை நம்ம ஒரு நாளும் மாற்ற இயலாது. அப்படி இருக்க கடந்த காலத்தில் நடந்த சில கசப்பான நினைவுகளை மனதில் ஏந்தி கொண்டு நம் நிகழ் காலத்தில் வாழ்வது துன்பத்தை தரும். அதேபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஒரு வித பதட்டத்தை தரும். கடந்த கால மனக்கவலையோ எதிர்காலத்தின் பதட்டமோ நம் நிகழ்காலத்திற்கு உதவாது. எனவே நம் வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள நம் நிகழ்காலத்திலே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நன்மையும் கூட. நம்முடைய இன்றைய சிந்தனைகளை நாளைய செயல்கள் ஆகின்றன. எனவே நம் சிந்தனையை வளப்படுத்துவோம்.