ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை

  • Home
  • India
  • Thanjavur
  • ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை

ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை, Medical and health, 24, EVR Market, Thiruvaiyaru, Thanjavur.

06/04/2019
06/04/2019

இயற்கை மருத்துவம்

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

02/11/2018

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
.whats app ல் இருந்து பகிரப்பட்டது..

02/11/2018

முக்கியச் செய்தி
🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀ வணக்கம் !

சேலம் டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

இதை உங்களிடம் உள்ள அனைத்து வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

02/11/2018

டெங்குக் காய்ச்சல்:-
(Dengue fever)
------------------------
டெங்கு காய்ச்சல் நமது உடம்பில் நீர் சத்துக்கள் மற்றும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்கின்றது..

சராசரியாக நமது உடலில் தட்டணு (pletlet) செல்கள் , மூன்று லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும் .

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நமது உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை
(25,000) இருபத்தைந்து ஆயிரத்திற்கு கீழ் குறைகின்றது.

இதனால் நமது உடல் பல பிரச்சனைகளை சந்திக்கிறது இறுதியில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

இதை சரி செய்ய ,மிகவும் சுலபமான , எளிய இயற்கை மருத்துவங்கள்

1. சீரக தண்ணீர்:
------------- சீரகத்தை ;,தண்ணீரில் போட்டு, கொதிக்க விட்டு, ஆற வைத்து பருக வேண்டும். சீரக தண்ணீர் நம் உடம்பில் நீர் சத்துக்கள் குறையாமல் உடம்பை பாதுகாக்கிறது.

2.உலர் திராட்சை ( dry graphs):
---------------- ---
இதை தினமும் நான்கு வேலை ( காலை, மதியம், மாலை, இரவு )
என 10 திராட்சை வீதம் வாயில் போட்டு சப்பி ,10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை உமிழ் நீரில் ஊர வைத்து பிறகு சாப்பிடவும் .

இவற்றை செய்தால் ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாமல் , நம் உடம்பிற்கு தேவையான தட்டணுக்களை ,உலர் திராட்சை தந்து உடம்பை பாதுகாத்து டெங்கு வைரஸிலிருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்தால் நம் உடல் ,எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்

காய்ச்சல் வராதவர்களும் பயன்படுத்தி வருமுன் காக்கலாம்.
உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்!
அனைவரும் நலமுடன் வாழட்டும்

02/11/2018

Medical & health

டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்  காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.இதனை அனைவரும் சாப்பிடலாமா...
02/11/2018

டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.
இதனை அனைவரும் சாப்பிடலாமா? என்றால் கிடையாது.

நிலவேம்பு கஷாயத்தை யார் குடிக்க கூடாது?

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது அதற்கு பதிலாக குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் குடிக்கலாம்.

டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் நிலவேம்பு கஷாயத்தை குடிக்க கூடாது.

முதல் மூன்று மாதம் உள்ள கர்ப்பிணி பெண்கள் நிலவேம்பு கஷாயத்தை குடிக்க கூடாது.
( அருந்தினால் வாந்தி உண்டாகலாம் )

வயிற்றுப்போக்குடன் காய்ச்சல் உள்ளவர்கள் நிலவேம்பு கஷாயத்தை அருந்தக்கூடாது.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நிலவேம்பு கஷாயத்தை பருக கூடாது.

இந்த தகவலை அனைவருக்கும் பகிர்வோம்....

PLEASE SHARE ALL FRIENDS & FAMILY MEMBERS

THANK YOU....

கிட்னி பிரச்சனையை தீர்க்க ஒரு எளிய வழி.....இந்துப்பு:செயலிழந்த கிட்னியை  15 நாட்களில் சரி செய்ய உதவும் மிகவும் அற்புதமான...
01/11/2018

கிட்னி பிரச்சனையை தீர்க்க ஒரு எளிய வழி.....

இந்துப்பு:
செயலிழந்த கிட்னியை 15 நாட்களில் சரி செய்ய உதவும் மிகவும் அற்புதமான ஒரு மருந்து!

கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றனர். இதில்
அதிக சிரமம் மற்றும் செலவு உண்டாக்குகிறது..

creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்...

பல லட்சம் செலவு ஆகும் வலி வேதனை உண்டு.
இதனை சரி செய்ய மிக எளிய வழி...

நாட்டு மருந்து கடைகளில் இந்துப்பு கிடைக்கும், நமது கடையிலும் கிடைக்கின்றது...

ஒரு கிலோ 80 ருபாய் மட்டுமே...

நாம் உபயோகப்படுத்தும் உப்புக்கு பதிலாக இந்துப்பை சமையலில் சேர்த்துக்கொள்ளவும்...

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் கிட்னி இயல்பு நிலையை அடையும்...
அதன் பிறகு creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்துப்பினை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்பது
இமாலய மலை பகுதியில் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கபடும் உப்பே இந்து உப்பு...
இதனை ஹிந்துஸ்தான் உப்பு என்றும் கூறப்படுகிறது.
இந்துப்பில் உடலுக்கு தேவையான 80 மினரல் உள்ளது.

இந்துப்பைக் கொண்டு வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனைகள் மற்றும்
வாய் புண்கள் குணமாகும்.

தைராய்டு பிரச்சனை குணமாகும்...

இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

ஆண்மையை வளர்க்கிறது.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.
சிறிதளவு உஷ்ணமுள்ளது.

கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

👍 நல்ல பதிவுகளை பகிர்வோம் 💐

11/10/2018
நம் உடலின் மொழியினை புரிந்து கொள்வோம் நலமாய் வாழ்வோம்...
25/09/2018

நம் உடலின் மொழியினை புரிந்து கொள்வோம் நலமாய் வாழ்வோம்...

21/09/2018

உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டது தங்க பஸ்பம். ஆனால், எந்தச் செலவும் இல்லாம.....

தாய்ப்பால் பெருகும். தேன் அல்லது பால் அல்லது தண்ணீரில் கலந்து பருகலாம்.. விலை 25 ரூபாய் மட்டும்...நமது கடையில் உள்ளது......
21/09/2018

தாய்ப்பால் பெருகும். தேன் அல்லது பால் அல்லது தண்ணீரில் கலந்து பருகலாம்..
விலை 25 ரூபாய் மட்டும்...
நமது கடையில் உள்ளது....
அம்மான் பச்சரிசின் மருத்துவ குணங்களை அறிய https://rajaganapathynattumarunthukadai.blogspot.com/2018/09/blog-post_9.html

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....நன்றி....
26/08/2018

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....
நன்றி....

முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, நெல்லிகாய் அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் ....

100 வயசு வரை நோயே இல்லாம வாழனுமா? தினமும் இந்த காயகல்பத்தை செஞ்சு சாப்பிடுங்க!!என்ன அப்படியே இருக்கறீங்க? ஏதாவது காயகல்ப...
25/08/2018

100 வயசு வரை நோயே இல்லாம வாழனுமா? தினமும் இந்த காயகல்பத்தை செஞ்சு சாப்பிடுங்க!!

என்ன அப்படியே இருக்கறீங்க? ஏதாவது காயகல்பம் சப்பிடறீங்களா? என யாராவது வயதான பின்னும் இளமையாக இருப்பவர்களைப் பார்த்து கேட்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். காயகல்பம் அத்தனை சக்தி வாய்ந்தது. புற்று நோய், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது. பாதிக்கப்பட்ட உறுப்புகள் குணமாகும்.

காயகல்பம் சித்தர்கள் கண்டுபிடித்த அருமையான அருமருந்து.

மிகவும் ஆற்றல் வாய்ந்த மூலிகைகளாள் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை சாப்பிட்டுதன சித்தர்கள் எந்த நோயும் அற்று வாழ்ந்தார்கள்.

மிக அரிய மூலிகைகளால் செய்யப்பட்டும் மூலிகை விலை அதிகம். ஆனால் குறைந்த செலவில் காயகல்பம் செய்யலாம். மனதிர்களின் நலத்திற்காக வள்ளலார் கொடுத்தருளிய குறிப்பு இங்கே சொல்லப்பட்டுள்ளது.

Third party image reference
தேவையானவை :

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

தூதுவளை 50 கிராம்,

முசுமுசுக்கை 50 கிராம்,

சீரகம் 50 கிராம்

Third party image reference
குடிக்கும் முறை :

மேலே சொன்னவற்றை நாட்டு மருந்துக்கடையில் பொடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.

சீரகத்தை மட்டும் வீட்டில் பொடி செய்து கொள்ளலாம்

பின் இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் ஒரு தம்ளர் பாலில் இந்த மூலிகைப் பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் சர்க்கரை கலந்து கொள்ளுங்கள். லேசான சூட்டிற்கு ஆறிய பிறகு சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் குடியுங்கள்.

Third party image reference
நோய்கள் விலகும் :

இதனை சாப்பிட ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் தங்கியிருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும். உணவு முழுமையாக ஜீரணித்து இரைப்பையில் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

Third party image reference
எப்போது குடிக்கலாம் ?

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.
பத்தியம் எதுவும் தேவையில்லை. காலையில் குடிக்கத்தகுந்த அருமையான மூலிகைபானம் இது.

இந்த காயகல்பம் சகல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதனை வருடக் கணக்காக சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது என்பது உறுதி.

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்... நன்றி...இயற்கையோடு வாழ்வோம்...இயற்கையை காப்போம்....
24/08/2018

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...
இயற்கையோடு வாழ்வோம்...
இயற்கையை காப்போம்....

கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய.....

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....
23/08/2018

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....

வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணம...

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
23/08/2018

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து...

இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.... நன்றி....
20/08/2018

இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.... நன்றி....

நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம்: நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்ப.....

Address

24, EVR Market, Thiruvaiyaru
Thanjavur
613204

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 6:30am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

9500238694

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஸ்ரீ ராஜ கணபதி நாட்டு மருந்துக்கடை:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram