04/01/2026
1968'ல் Andy என்கிற பல்துறை மன்னர் ஒரு கருத்தை சொன்னார். "எதிர்காலத்தில் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் 15 நிமிடத்திற்கு உலகப்புகழ் பெறுவார்கள்" என்பதே அது. அனைவராலும் பரவலாக "15 minutes fame" என்று சுருக்கி விளிக்கப்பட்ட அந்த கருத்து, மிக புகழ் பெற்றது. அவர் சொல்லிய காலத்தை வைத்து யோசித்தால் இன்றைய Youtube, Facebook புகழை எல்லாம் எவ்வளவு தீர்க்க தரிசனமாக சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.
நம்ம சுஜாதா கூட ப்ளாக் எழுத்தாளர்களை பற்றி குறிப்பிடும் போது 15 நிமிட புகழுக்காக காத்திருப்பவர்கள்ன்னு சொன்னதா ஞாபகம். அவர் Andy'யோட கருத்தை தான் மேற்கோள் காட்டினார். வரலாற்றில் சிலரை அல்லது அவர்களின் படைப்புகளை க்ளாசிக்கலாக கொண்டாடியது போல இனி வரும் காலங்களில் சாத்தியமில்லை. எல்லோருக்கும் 15 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் புகழ். பின்னாடியே இன்ஸ்டன்ட் கெட்ட பெயரும் வந்து விடுகிறது.
சோஷியல் ட்ரோலிங்க்ல பல பேரை பார்த்தாச்சு... இப்ப புதுசா ஒரு வீர தமிழச்சியை தூக்கி கொஞ்சிட்டு உடனே இழுத்து கீழ போட்டிருக்காய்ங்க... 15 நிமிட புகழும் பின்னாடியே அவப் பெயரும் வந்து புகழை காலி செய்யுது...!
தற்காலிக புகழை பற்றிய ரொம்ப பழைய ஆங்கில மொழி ஒன்னு இருக்கு. 'Nine days Wonder' என்று குறிப்பிடுவார்கள். தனக்கு கிடைக்கும் புகழுக்கான மதிப்பு தன்னிடத்தில் இருக்க வேண்டும். வேல்யூ இல்லாத புகழ் 9 நாளைக்கு தாண்டாது என்று பொருள். ஜிபி. முத்து கூட தனக்கு கிடைக்கும் புகழுக்கான மதிப்பை கொண்டிருக்கிறார்ன்னு தான் சொல்வேன். அவர் தாக்கு பிடிக்கும் அளவுக்கு கூட நிறைய பேர் தாக்கு பிடிக்கிறதில்லை...
புகழை போல போதை எதுவும் இல்லை. சும்மா ஒரு டெஸ்ட்டுக்காக யாரிடமாவது சென்று, "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்'ன்னு சொல்லி பாருங்களேன். சிரிப்பும் வெக்கமும் சாராயத்தை விட வேகமாக சும்மா கும்மென்று ஏறும். ரொம்ப உயரத்தில் பறக்கும் பட்டம் போன்றது தான் அது. கீழே ஒற்றை நூலைப் போல தான் பிடிமானம் இருக்கிறது.
கீழே விழும் போது உயரத்தில் இருப்பவனுக்கு தான் அதிகமா அடி படும்ன்னு சொல்வாங்க. ரொம்ப உயரம் போகும் போது விழுந்து விடாமல் பேலன்ஸ் பண்றது ரொம்ப முக்கியம். இப்போதெல்லாம் பறக்க விடுவதற்கு பயன்படுத்தும் அதே நூலை பயன்படுத்தி கீழே இழுத்தும் போடுறாய்ங்க. 🙂
Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , 9080052846, 9842775242
To buy our products online pls visit www.dhanvandhirivaidyasalatheni.com/shop/ for more details
- [ ]