16/10/2025
திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட வடிகால் குழந்தைகள் வயதானவர்களின் உயிர் கேள்விக்குறியாகி உள்ளது!
“வாழ்க்கை புதுப்பள்ளிவாசல் அருகாமையில், பொதுப்பணித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள் (ஓவர்ஃபுளோ லைன்) எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களும் இன்றி, முற்றிலும் ஆபத்தான முறையில் அரைகுறையாக விடப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
வடிகாலின் இருபுறமும் மண் அணைக்கப்படாமல் (Side embankments), பள்ளங்கள் நிரப்பப்படாமல், விளிம்புகள் அபாயகரமாக உள்ளன.
மேற்புறத்தில் சிமெண்ட் மூடி (கவர் ஸ்லாப்) போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.
இந்த வடிகால் பகுதிக்கு அருகிலேயே குடியிருப்புப் பகுதிகள் பள்ளிவாசல், உள்ளதாலும், பள்ளிவாசலுக்கு சென்று வரக்கூடிய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நடமாட்டம் உள்ளதாலும், எந்த நேரத்திலும் விபத்துக்கள் நிகழக்கூடிய அபாயம் உள்ளது. இது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மரணப் பொறி போல் அமைந்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த ஆபத்தான பணியைக் கண்டிப்பதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுக்கிறோம்:
உடனடியாகப் பணியாளர்களை நியமித்து, வடிகாலின் இருபுறமும் மண் அணைத்து, மேற்புறத்தில் உறுதியான சிமெண்ட் மூடிகளையோ அல்லது கிரில் தடுப்புகளையோ பொருத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாகப் பணி செய்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திமுக ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாகப் பணித் தடையுடன் கூடிய துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
👉 ஆபத்து:
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல். எந்த நேரத்திலும் உயிரிழப்பு ஏற்படலாம்.
இதனைக் கண்டித்து, அலட்சியமான அதிகாரிகளையும் ஒப்பந்ததாரரையும் கண்டிக்கிறோம்!
திமுக மாவட்டச் செயலாளர் அண்ணன் பூண்டி கலைவாணன், ஒன்றிய செயலாளர் மனோகரன் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இந்த விஷயத்திலே தலையிட்டு, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று தமுமுக சார்பாக உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
சிறு பிள்ளைகளின் உயிர்களை துச்சமன நினைத்து கடந்து செல்லாமல் இதற்கு துரித நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இப்படிக்கு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வாழ்க்கை-சேங்கனூர்