RKR HONEY

RKR HONEY We are supplying all kind of Honey with fully organic, we can supply any of quantity at continue ord

18/09/2017

Honey is a
Good for the blood
Safer than sugar
Good for yoga
Destroys bacteria
Energy food
Helps digestion
Clears the skin
Helps sleep

02/05/2016
03/04/2016

தேன், சாப்பிடுவது எப்படி ?

எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக... என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை. எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டுபிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது? என்பது குறித்து சில தகவல்களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.

“தேன், பல மருத்துவ குணங்களைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீரைத்தான் விற்பனை செய்கிறார்கள். தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது.
‘ஓடைத்தேன்’ என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன்கூடுகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் பழத்தைப் போட்டுவைத்தால், 200 ஆண்டுகளுக்குக் கூட கெடாது. மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்துவதற்கு இந்தத் தேனைத்தான் பயன்படுத்துவர். மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன். பெரும்பாலும் கடைகளில் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன்தான். ஆனால், இதில் பொருட்களை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

தாம்பத்திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவிட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.

முகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்தபட்ட பிரச்னை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும்.
பலாப்பழமும் தேனும் கலந்து சாப்பிட முகம் பொலிவாகும். உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து.
சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது... ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்.
- இ.ராஜவிபீஷிகா

Address

Thoothukudi
628952

Telephone

9969327229

Website

Alerts

Be the first to know and let us send you an email when RKR HONEY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RKR HONEY:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram