Vadalur arutjothi vaithiyasalai

Vadalur arutjothi vaithiyasalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vadalur arutjothi vaithiyasalai, Health/Medical/ Pharmaceuticals, 10, vishwas nagar, Tiruchirappalli.

Nannari sharbath for Burning micturation, excessive thirst, reduce the body heat
15/03/2019

Nannari sharbath for Burning micturation, excessive thirst, reduce the body heat

Nannari sharbath
15/03/2019

Nannari sharbath

இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?ஆள்காட்டி விர...
06/08/2018

இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழிச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து...
03/08/2018

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதைத் தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதைக் குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

*தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு*.இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு வி...
02/08/2018

*தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு*.

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது.

செய்முறை:
முன்னாள் இரவே ஒரு ஐம்பது கிராம் கொள்ளை தண்ணிரில் கழுவிய பிறகு 750 மிலி தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் வேகவைத்து அதை வடிகட்டி அந்த தண்ணீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை குறையும். உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பு நீங்கும்.

கொத்தமல்லியின் பயன்கள்கொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த     ஒரு மூலிகை தாவரம் என்று கூறலாம். இது ஒரு சிறு தாவர குடும்பத்...
01/08/2018

கொத்தமல்லியின் பயன்கள்

கொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரம் என்று கூறலாம். இது ஒரு சிறு தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதை coriander leaves என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இதனுடைய தாவரவியல் பெயர் Coriandrum sativam. கொத்தமல்லியின் விதையை தனியா என்று அழைக்கப்படும் (coriander). இது Apiaceae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது.

சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும் இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது.

சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊறவைத்து பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தும் சீராகும்.

கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.

கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும். கொத்தமல்லியில் சூப் மற்றும் கொத்தமல்லி சாதம் செய்து மாலை நேரங்களில் சிற்றுண்டி உணவாக சாப்பிடலாம்

31/07/2018

எதிர் உணவுகள்
____________________
எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடல்நிலையை பாதிக்கும்.

உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்!
எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.

எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கி
பசலைக்கீரை X எள்
திப்பிலி X மீன்.
தயிர் X மீன் .
திப்பிலி X தேன்.
துளசி X பால்.
தேன் X நெய்.
பால் X புளிப்பான பொருள்கள்.
மோர் X வாழைப்பழம்
இறைச்சி X விளக்கெண்ணெய்
முள்ளங்கி X பால்
அகத்திக்கீரை X ஆல்கஹால்

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ORTHO FINE OIL Indications: joint pain, Neck pain, hip pain
31/07/2018

ORTHO FINE OIL
Indications: joint pain, Neck pain, hip pain

Pitha vayu lehyam :Indigestion, loss of appetite
27/03/2018

Pitha vayu lehyam :
Indigestion, loss of appetite

Moolanivarani Lehyam for bleeding piles, non bleeding piles, constipation
27/03/2018

Moolanivarani Lehyam for bleeding piles, non bleeding piles, constipation

OMA WATERIndication:-  Indigestion,  Loss of appetite,  Diarrhoea,  Very useful in children
01/04/2017

OMA WATER
Indication:- Indigestion, Loss of appetite, Diarrhoea, Very useful in children

Address

10, Vishwas Nagar
Tiruchirappalli
620008

Opening Hours

Monday 9:30am - 7:30pm
Tuesday 9:30am - 7:30pm
Wednesday 9:30am - 7:30pm
Thursday 9:30am - 7:30pm
Friday 9:30am - 7:30pm
Saturday 9:30am - 7:30pm

Telephone

+919976716583

Alerts

Be the first to know and let us send you an email when Vadalur arutjothi vaithiyasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vadalur arutjothi vaithiyasalai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram