Rishi Training Center

Rishi Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rishi Training Center, Alternative & holistic health service, RISHI , 2, Paraparan Street, Murugankurichi, Tirunelveli.

🌿 Transform Knowledge into Practical Skills! 🌟
"Our programs are uniquely designed to equip participants with both in-depth knowledge and hands-on skills, ensuring success in real-world situations."

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.  அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்...
03/10/2025

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது.

அந்த பெண் யோசிக்கின்றாள்:- “ நான் கீழே விழப்போகின்றேன் என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்! அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று
ஆனால் அந்த

ஆண் யோசிக்கின்றான்:- “ மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை? ”

இந்த படம் சொல்லும்
நீதி:-

எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.

இது வாழ்க்கை,வேலை,குடும்பம்,நண்பர்கள். உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் ,
ஒருவருக்கொருவர்_புரிந்துகொள்ள_முயலவேண்டும் இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.

நாமும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் 😐

26/09/2025

மனம் கெட்டால் உடல் கெடும்,
உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்கிய நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல்மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்கியத்தை
அனுபவியுங்கள்.......!.
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

வாரத்தின் ஒவ்வொரு தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப்போன்று ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்துடன் தொடர்பு கொண்ட...
10/09/2025

வாரத்தின் ஒவ்வொரு தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப்போன்று ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கிரகத்திற்கும் - நிறங்களுக்கும் இடையே உள்ள இந்த தொடர்பை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் ஆடைகளை உடுத்த தொழில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்!

28/08/2025

1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை.

3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.

6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை.

10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!!

அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்*
🙏🏻🙏🏻🙏🏻

23/08/2025

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?

அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?

என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன்.

இறைவன் மிச்சமே வைக்காமல்
படைத்த அழகிய படைப்பு.

அவளுக்கென்று தனி அழகு இருக்கு

அவளுக்கென்று தனி தாய்மை இருக்கு

அவளுக்கென்று தனி நேசம் இருக்கு...,,

அவளுக்கென்று தனி பாசம் இருக்கு.

அவளுக்கென்று தனி கற்பனை இருக்கு.

அவளுக்கென்று தனி மனம் இருக்கு.

அவளுக்கென்று தனி குழந்தைதனம் இருக்கு

அவளுக்கென்று தனி ஆண்மை இருக்கு

அவளுக்கென்று தனி பெண்மை இருக்கு

அவளுக்கென்று தனி நளினம் இருக்கு

அவளுக்கென்று தனி வெட்கம் இருக்கு

அவளுக்கென்று தனி நாணம் இருக்கு

அவளுக்கென்று தனி திமிர் இருக்கு

அவளுக்கென்று தனி இதயம் இருக்கு

அவளுக்கென்று தனி உள்ளம் இருக்கு

அவளுக்கென்று தனி காதல் இருக்கு.

அவளுக்கென்று தனி உலகம் இருக்கு.

அவ்வளவு இருக்குங்க.

அவளிடம்...,

அவளிடம் மட்டும்....,

அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்...

கடல்னு சொன்னா கூட...,

கடலில் கூட கரையேறி விடலாம்.

ஆனால் ஒரு முறை,

அவள் அன்பிற்குள்,

அவள் அரவணைப்பிற்குள்,

அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால்,

கரையேறவே ஆசை படாது மனது.

அங்கேயே சிக்கி தவிக்கும்.

மனுசனை கிறுக்காக்கும்.

பையன பாடா படுத்தும்.

ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல்

இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம்.

இது தான்

அதன் காரணி... இதுவே தான்...

தாய்ப்பால் தான்.

அங்கே இருந்து தான் ஆரம்பித்தது

அவள் மேல் உள்ள தேடல்...

நம்ம முதல் உணவே அவளின் ரத்தம் தானே?

அவளின் உதிரத்தால் தானே நம் உயிர்?

அது தான் காரணி. வேற ஒன்னும் இல்லை..

அவள் உதிரத்தில் தோன்றி,

மார்பில் பால் குடித்து, மடியில் தவழ்ந்து....,

அவளுடனே பின்னி பிணைந்ததால் தானோ என்னவோ,

அவளைப் போலவே இருக்கும் இவளைப் பார்த்ததும்,

அதே தேடல் இவள் பின்னாலும்

அவனை தூக்கி செல்கிறது..

மீண்டும் அதே மடியில்

ஒரு அரவணைப்பும்,

அவள் நெஞ்சுக்குழியில்

தலை சாய்க்க ஒரு இடமும் வேண்டும்

அவனுக்கு. அந்த தேடல் தான்,

தொரத்தி தொரத்தி நிற்க வைக்குது,

கிரங்க வைக்குது, மயங்க வைக்குது....

மனுசனை கொஞ்ச பாடா படுத்துது?

வளர்ந்துட்டடானு சொல்லி நாலு அடி
தள்ளியே வச்சி பார்க்குது உலகம்,

ஆனால் அவன் என்றும் வளர்வதே இல்லை..

இப்பவும் அவனுக்கு அந்த அரவணைப்பு வேணும்..

இனி அம்மாவிடம் போய் நிற்க முடியாது..

அப்ப யாரிடம் தான் போவான்?

அந்த அரவணைப்பிற்காக?

அவன் தேவையே அது தானே..

அது மட்டும் தானே..

உலகத்தையே ஜெயிச்சிட்டு வாடானு சொன்னா

ஜெயிச்சிட்டு வந்துடுவான்..

ஆனால் உள்ளுக்குள்ள அவன் மனசு

யாரிடமோ தோற்க ஆசை படுகிறது..

வெற்றி தோல்வி இல்லாத

ஒரு சண்டை போடனும்னு ஏங்குது..

இந்த தருதலதணத்தை தட்டி கேட்க

ஒருத்தி வர மாட்டாளா என்று ஆசை படுறான்..

ஆனால் வளர்ந்த புள்ளைய என்ன திட்டுறதுனு

அம்மா விட்டுவிடுகிறாள்..

என்னை கேட்டால்,

அவள் தன் அழகை வைத்து

இவனை இப்படி கிரங்க வைப்பதில்லை..

இவனா வேணும்னே

இவளுக்குள் சிக்கி தவிக்கனும்னு

ஆசைப்பட்டு தானாவே

வந்து சிக்கிக் கொள்கிறான்..

அவனுக்கு அவள் ஒரு போதை..

ஆண் மட்டும் ஒரு பெண்ணிடம்

சிக்கி தவிப்பது இல்லை..

பெண்ணும் ஒரு ஆணிடம் தான்

சிக்கி தவிக்கிறாள்..

என்ன ஒன்னு,

இவ்வளவு வெளிப்படையாக

காண்பித்துக் கொள்வது இல்லை..

என்ன தான் இன்பம்

இந்த பெண்களிடத்தில் என்ற கேள்விக்கு......,

பதில், காமம் என்று நினைத்தால்

ஐ எம் சாரி,

அது இல்லை

அவளின் அரவணைப்பு தான்.....

அதே தான்.

மனதின் தேவை தான் முதல் காரணி,

உடல் தேவை எல்லாம் ரெண்டாவது தான்.

மனைவியிடம் மயங்கி நிற்கும் அவன்

தாசியிடம் மயங்கி நிற்பதில்லை....

காரணம்....,

அரவணைப்பில் இவள் கொடுக்கும் நம்பிக்கையும்

அவளிடம் கிடைப்பதில்லை..

அவனுக்கு தேவை எல்லா சூழ்நிலையிலும்

தன்னை நம்பி, துணை நிற்கும் ஒருத்தி..

தன்னை முற்றிலும் நம்பும் ஒருத்தியிடம்

அவன் மயங்கியே தான் நிற்பான் என்பது நியதி..,

அந்த நம்பிக்கையையும்,

அரவணைப்பையும் உங்கள் துணைக்கு

பரிசளித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....

அவளிடம் மயங்கி நிற்பது ஒன்றும்

அசிங்கமான செயல் இல்லை..

உண்மையில் அது தான் அழகு!!!

அங்கே தான் கொட்டிக் கிடக்கின்றது

வாழ்வின் மொத்தமும்....

மொத்தத்தில்,

அவள் ஒரு_____

இந்த கோடிட்ட இடத்தை நீங்க நிரப்புங்க....

Address

RISHI , 2, Paraparan Street, Murugankurichi
Tirunelveli
627002

Website

https://www.facebook.com/multidimensionalspiritualgrowths/about

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rishi Training Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram