15/08/2019
வணக்கம்! உங்களுடன் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இன்று நம் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது பலரும் பலவிதங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களிலும் நேரிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் ஆனால் எனக்கு யாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்ல விருப்பமில்லை காரணம் நான் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்கிறேன் என்று உண்மையாக நான் உணரவில்லை ஏனெனில் சுதந்திரம் என்பது வெறும் வெற்று வார்த்தையாக நான் நினைக்கவில்லை , அது ஒரு முழுமையான வார்த்தை . சுதந்திரம் என்பது நாம் நினைத்த இடங்களுக்கு செல்வதும் நம் வாயில் வந்த வார்த்தைகளை பேசுவதும் நாம் நினைத்த செயல்களை செய்வது மட்டுமல்ல அது மிக ஆழமானது. சுதந்திரம் என்பது ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் சமமான நீதியும் நியாயமும் உரிய நேரத்தில் கிடைப்பது என்பதாகும். ஆனால் சுதந்திர இந்தியா என்று கூறிக்கொள்ளும் இந்த இந்தியாவில் நீதியும் நியாயமும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை என்பதே என்னுடைய கருத்து . அதாவது ஒருவருக்கு வேண்டிய நீதியை நாடி நாம் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது அந்த நீதிமன்றங்களில் அணுகுவதும் அங்கே நீதியை பெறுவதும் செல்வந்தர்களுக்கு இருக்கும் எளிமையை போன்று ஒரு சாமானியனுக்கு இல்லை. அன்று எப்படி ஓர் ஆங்கிலேய ஆட்சியில் இந்தியர்களுடைய உழைப்பும் வளங்களும் பிற நாட்டு மக்களுக்காக இங்கே இருந்து சுரண்டி எடுக்கப்பட்டதோ அதே போன்றே இன்று இந்தியாவில் இருக்கும் அதிகார வர்க்கத்தினராலும் ஆட்சியாளர்களாலும் இந்தியர் அனைவருக்கும் சமமாக கிடைக்க படவேண்டிய வளங்களும் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கக்கூடியதான வருமானங்களும் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது . அப்படி இருக்கும் பொழுது இது எப்படி சுதந்திர இந்தியாவாகும் . இங்கு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினருக்கு அதாவது இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதையையும் மதிப்பையும் ஏன் ஒரு உழைக்கும் தொழிலாளி கொடுப்பதில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த இந்தியாவில் சுதந்திரம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வது . இன்று இந்தியாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இங்கே ஒருவனுடைய வேலை நேரம் என்பது அதிக மாறுகிறது . இருவர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் செய்ய வேண்டிய ஒரு நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று பேர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் செய்து ஒரு நபருக்கான ஊதியத்தை மட்டுமே பெறுகிறார் .அவருக்கான ஊதியம் 3 பேருக்கு தேவையான ஊதியமாக கிடைத்தால் அது ஏற்றுக் கொள்ளலாம் . அதாவது உதாரணமாக எட்டு மணி நேரம் உழைக்க கூடியதான ஒரு தொழிலாளி 24 மணி நேரம் உழைக்கிறார் அவருக்கு கிடைக்க வேண்டியதான ஊதியம் 24 மணி நேரத்துக்கு ஆனதாக இருந்தால் சரி. ஆனால் அவருக்கு எட்டு மணி நேரத்துக்கான ஊதியம் வழங்கப்பட்டு 24 மணி நேரத்திற்கான வேலை வாங்கப்படுகிறார் . இது இந்தியாவில் இல்லை இங்கு சரியாக தான் நடக்கிறது என்றால் அது பொய். இந்தியாவில் இன்றும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கேஅரசு ஊழியர்களை மட்டுமே ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள் என்று நினைக்கிறார்கள் .அரசு ஊழியர்கள் மட்டும் தான் 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுகிறார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற சலுகைகளைப் பெறுகிறார்கள் எல்லாவற்றையும் பெறுகிறார்கள் ஆனால் இங்கு தனியார் தொழிற்சாலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமையை முழுமையாக பெறுகிறார்களா என்றால் இல்லை. அவர்களுக்கான ஊதியமும் சரியானதா என்ற இல்லை இல்லை என்பதே என்னுடைய கருத்து .இப்படி தொழிலாளர்கள் மீது அக்கறை கொள்ளாத ஒரு அரசு இங்கேயே மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது எப்படி இது சுதந்திர இந்தியா என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு அரசின் மிக முக்கிய கடமையாக நான் கருதுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு உடுக்க உடை உறங்க உறைவிடம் இவற்றை உறுதி செய்வதே ஒரு அரசின் தலையாய கடமை .ஆனால் இந்திய அரசுகள் அதாவது மத்திய மாநில அரசுகள் நான் மேலே கூறியதான உணவு உடை உறைவிடத்தை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தவறிவிட்டது. அவர்கள் இன்று செல்வந்தர்கள் ஆகிய இந்திய முதலீட்டாளர்கள் மீது கொள்ளும் அக்கறையை அந்த முதலீட்டாளர்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் தொழிலாளர்கள் மீது கொள்வதில்லை. உதாரணமாக மாதம் 8000 ஊதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்திய திருநாட்டில் கிட்டத்தட்ட உழைப்பவர்களில் 30லிருந்து 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் .அந்த 8000 மாத ஊதியமாகப் பெறும் ஒரு தொழிலாளி தனக்கு தேவையான இருப்பிடத்தை பெற்றுக்கொள்வதற்கு சாதாரணமாக இன்று ஒரு குடிசை பகுதியில் இடம் வழங்குவது என்றால் கூட ஒரு செட்டின் விலை முப்பதாயிரம் நாற்பதாயிரம் என்கிற அளவில் உள்ளது அந்த நிலத்தின் விலை என்பது அந்த ஊழியரின் மாத வருமானத்தில் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு மடங்கு என்கிற அளவில் உள்ளது. ஒருவன் தன்னுடைய ஊதியத்தில் நான்கு மாத ஊதியத்தை சேமித்தால் மட்டும் அவனால் இடத்தை வாங்க முடியும் . அப்படி அவன் நான்கு மாத ஊதியத்தை சேமிக்க வேண்டும் என்றால் அவனுடைய குடும்பம் வறுமையின் பிடியில் சில காலம் தவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தான் இந்தியாவில் நிலவுகிறது. இப்படி இருக்க கூடிய ஒரு இந்தியாவை எப்படி என்னால் சுதந்திர இந்தியாவாக ஏற்றுக் கொள்ளமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு முன்னதான ஒரு பதிவு நான் பகிர்ந்து உள்ளேன் அதாவது இந்திய திருநாட்டில் இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் இந்தியாவில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் ஊதியம் குறித்ததான ஒரு கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன் அதே நீங்கள் அனைவரும் சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இன்னும் அதிகமாக சொல்லப்போனால் இன்று மருத்துவ சேவை என்பது கூட இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கிறதா என்றால் இல்லை அதாவது முந்தைய ஆங்கிலேயே அரசு மக்களின் சுகாதாரத்தின் மீது கொண்ட அக்கறையை இந்த சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் இந்திய மக்கள் மீது கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன் காரணம் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் கூட மக்களுக்கு இலவச மருத்துவங்கள் அதாவது அவர்களை தேடி சென்று அளிக்கப்பட்டது பழைய மிஷினரிகள் அதாவது சமூக ஆர்வலர்கள் ஆங்கிலேய ஆர்வலர்கள் இந்திய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை செய்து வந்தனர் ஆனால் இன்று நமது அரசும் இலவச மருத்துவமனைகள் மூலமாக சேவை செய்து வருகிறது ஆனால் அந்த இலவச மருத்துவ மனைகளில் கூட நாம் பணம் கொடுத்து தான் தங்களுடைய சேவைகளை துரிதமாக பெற முடிகிறது ஏனெனில் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் அங்கே அனுமதிக்கப்படும் நோயாளிகளை மிகவும் தரம் தாழ்ந்தவர்களாகவே கருதுகின்றனர்.இப்படிப்பட்ட ஒரு இந்தியாவை என்னால் எப்படி சுதந்திர இந்தியா என்று ஏற்றுக் கொள்ள முடியும். இன்று இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் பல அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு என்பது வழங்கப்படுகிறது ஆனால் அது மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற நிலையில் இருந்து அது ஒரு தொழில் என்கிற நிலையில் உள்ளது. கல்வி என்பது ஒரு சேவை என்பது நிலையிலிருந்து அதுவும் ஒரு தொழிலாக மாற்றப்பட்டு இன்று மக்களுக்கு கிடைக்கக்கூடிய சுதந்திர உரிமையான கல்வியும் மருத்துவமும் இன்று ஒரு விற்பனைப் பொருளாக மாறி விட்டது என்கிற பொழுது என்னால் எப்படி இதனை ஒரு சுதந்திர இந்தியாவாக ஏற்றுக்கொள்ளமுடியும். நான் இது என்னுடைய கேள்விகளாக மட்டுமல்ல இதை என் போன்ற ஒரு சாமானியனின் கேள்வியாகவே இந்த சமூகத்தின் முன் வைக்க விரும்புகிறேன் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த கருத்தை வாசித்துவிட்டு இல்லையெனில் இதை சற்று பார்த்து விட்டு சென்றாலும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்தல்ல இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது அது உண்மையா என்பதை நீங்கள் யோசிக்கவேண்டும் யோசித்தால் மட்டும் போதாது அதில் உங்களுக்கு ஏதேனும் கருத்து உண்டா என்றால் அதையும் பகிரவும் . இல்லை எனில் இதில் தவறு இருந்தால் அதையும் சுட்டிக்காட்ட வேண்டும் நான் உங்களிடத்தில் விரும்புவது நீங்களும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதே நன்றி வணக்கம் வாழ்க பாரதம் வளர்க வளர்க மக்கள் தம் சுய அறிவு