24/11/2025
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான குறிப்புகள்:
சீரான உணவு :
பழங்கள், காய்கறிகள், பசுமை நிறைந்த கீரை வகைகள்,முழு தானியங்கள், மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த, மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் அதிகமான இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை சீராக வைத்துக்கொள்ளவும், நோய்களை தடுக்கவும் உதவும்
போதுமான தூக்கம்:
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம் இரவில் அதிகம் விழித்திருப்பதை தவிர்க்கவும்
மன அழுத்தம் குறைய:
தியானம்,யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சமூக உறவுகள்:
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது மனநலத்திற்கு நல்லது. கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து சந்தோஷமாக பயமின்றி வாழுங்கள் நல்ல நண்பர்களை உருவாக்குங்கள் நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள் காலம் மறைவதை புறக்கணியுங்கள் எதிர்காலத்தை மட்டும் பாருங்கள் உங்கள் வாழ்வில் சிறந்தது உங்களைத் தேடி வரும்
தண்ணீர் குடித்தல்:
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கு அவசியம் இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். நாம் உண்பதெல்லாம் உழைப்பதற்கே உழைப்பதெல்லாம் உண்பதற்கே . இவை இரண்டுமே நாம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கே, ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் நீடிக்க வாழ்த்துக்கள் அன்புடன்...ஸ்ரீ தன்வந்திரி தண்டுவட மூட்டு வலி சிறப்பு சிகிச்சை வைத்தியசாலை கே டி சி நகர் பாளையங்கோட்டை திருநெல்வேலி 9003777757.8883777757.8012777757. மூட்டு வலி மற்றும் முதுகு தண்டுவட ,கழுத்து, வலிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படும்