ஔடதம்

ஔடதம் உடல் நலம், மனநலம் ,மருத்துவம் மற்றும் மருந்து சார்ந்த குறிப்புகள்...

27/12/2025

🌿👌 #பெண்கள் கணவனிடம் கூட சொல்ல தயங்கும் உடல் உபாதை தான் நீர் கசிவு
தும்மினாலும் இருமினாலும் எதனால் #சிறுநீர் வெளியேறுகிறது?
சிறுநீர்பை நிறைந்தவுடன் சிறுநீரானது வெளியேறத்துடிக்கும்பொழுது. சிறுநீரை உடனே வெளியேற்றாமல் நீண்டநேரம் தேக்கிவைப்பதால் சிறுநீர்பையின் இறுக்கத்தன்மையானது கொஞ்சகொஞ்சமாக தளர்ந்து நாளடைவில் தனது முழுத்திறனையும் இலக்கும் சூழல் வரும்பொழுதே அதற்கான அறிகுறியை நமக்குசொல்லுவதே
உடம்பின் வேக அதிர்வான இருமல் தும்மலின் போது சிறுநீர் வெளியேறுவது.
இநோய்யிலிருந்து பெண்களை முழுமையாக குணபடுத்தும் அற்புத ஆற்றக்கொண்ட துவர்ப்புசத்து மிகுந்த "மருதம்பட்டை பொடியை அத்தியிலை சாறு,தொட்டாசிணுங்கி இலை சாறு விட்டு சேர்த்தரைத்து.
சிறுநெல்லிகாய் அளவு காலை மாலை வெறும்வயிற்றில் வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டுவர எட்டே எட்டு நாட்களில் சிறுநீர்பையின் தளர்வானது நீங்கி சிறுநீர்பை வலுபெறும். இதுபோண்ற்ற பிரச்சனைகளுக்கு முக்கியகாரணமே அறுசுவைகளின் ஏற்றத்தாழ்வால் துவர்ப்பு சத்து பற்றாக்குறையே.
அதனால் இந்த பிரச்னை எங்கோ யாரோ ஒரு பெண்ணிற்கான பதிவுயென கடந்து செல்லாமல் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒருபெண்ணிற்க்கு இதுபோன்ற சூழல் இருக்கலாம் அல்லது இனிமேல் வரலாம்.
எனவே இதுபோன்ற செலவே இல்லாத மூலிகை மருந்தினை அனைத்து பெண்களுக்கும் தெரியபடுத்துவதே நாமக்காக அல்லும் பகலும் பாடுபடும் பெண்களுக்கு நாம் செய்யும் மிகபெரிய நன்றிக்கடனாகயிருப்பதுடன் வீட்டில் பெண்ணானவள் ஒருநாள் முடியாமல் படுத்துவிட்டாள் அவ்வீடு அஸ்தமனத்திற்கு ஈடாகிவிடுமேனும் சூட்சமத்தை நமக்கு சொன்ன காலாங்கி சித்தர் திருவடி போற்றும் சகல விதமான சிறுநீர் பிரசனையை தீர்க்கும் படும் சித்த வைத்தியர் :- 8248420939 Call Or Whatsapp 🌿🌿தொடர்பு கொள்ளவும்🌿🌿

*இலையும் சருகாகும்*பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத்...
26/12/2025

*இலையும் சருகாகும்*

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.

"ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.

"இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''.

"இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''

அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.

"அடுத்த வாரம் அனுப்பனும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பன்ன டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''

மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.

புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.
"அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''. ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், "என்னடா சொல்றே?'' என்றாள்.

தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், 'தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள். கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்... "இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''

"பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''

அவன் பதில் சொல்லவில்லை. தன் கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு சொன்னாள் ஜானகி... "சதீஷ் என் சித்தி (என் அப்பாவின் இரண்டாவது மனைவி) கொடுமைக்காரின்னு, உன்னை பிரசவிக்க பாட்டி, எங்க வீட்டுக்குக் கூட என்னை அனுப்பாம தானே பிரசவம் பார்த்தவங்கடா''

"அதுக்காக தான் அப்பா செத்தப்பறம் கூட அவங்களை வெளியே அனுப்பாம நீயே இத்தனை வருஷம் பார்த்துகிட்டியேம்மா...''

"உன்னோட பி.ஈ., படிப்புக்கு பீஸ் கட்ட தன்கிட்ட இருந்த கடைசி நகையைக் கூட வித்தவங்கடா அவங்க''

"அதுக்காக தான் மாசா, மாசம் முதியோர் இல்லத்தில் 1,500 ரூபாய் கட்ட ஒத்துக்கிட்டேன்மா''

"நாம இருக்கறப்போ ஒரு அனாதை மாதிரி அவங்களை ஏண்டா அங்க சேர்க்கணும்?''

"பாட்டிக்கு நாம மட்டும் இல்லையேம்மா. அத்தை கூட இருக்கா இல்லையா? வேணும்ன்னா, பெத்த பொண்ணு கூட கொஞ்ச நாள் இருக்கட்டுமே...''

"அவ அவங்களுக்கு ஒரு வேளை சோறு ஒழுங்கா போட மாட்டாடா''

"அது தெரிஞ்சு தான் முதியோர் இல்லத்தில் சேர்க்க நாங்க முடிவு செஞ்சோம்''

'பொறுமையாக இரு' என்று தனக்குள் பல முறை சொல்லிக் கொண்டு மகனைக் கேட்டாள் ஜானகி...

"பாட்டியால உங்களுக்கு என்னடா தொந்தரவு? ஏன் அனுப்ப முடிவு செஞ்சீங்க?''

தங்கள் அறைக் கதவைப் பார்த்தான் சதீஷ். உள்ளே போயிருந்தாள் சத்யா. வேறு வழியில்லாமல் உண்மையை அவன் சொன்னான். "பாட்டி இங்க இருக்கறது சத்யாக்கு பிடிக்கலைம்மா''

மகனை அருவெறுப்புடன் பார்த்தாள் ஜானகி. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பம் அடங்க சிறிது நேரம் பிடித்தது. பின் உடைந்த குரலில் மகனிடம் சொன்னாள்...

"சதீஷ் நல்லா யோசிடா... இது சரியில்லைடா''

"நாங்க நல்லா யோசிச்சாச்சும்மா''

மவுனமாக கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் ஜானகி.

"உனக்கு அவங்க கிட்டே சொல்ல கஷ்டமாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். பக்குவமாய் நானே அவங்ககிட்ட சொல்றேன்மா''

ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் ஜானகி. சிறுவயதிலேயே தாயை இழந்து சித்தியிடம் பல கொடுமைகளை அனுபவித்த ஜானகி, தன் திருமணத்திற்குப் பிறகு மாமியார் விசாலத்திடம் ஒரு தாயையே பார்த்தாள். சூது, வாது தெரியாத, நேசிக்க மட்டுமே தெரிந்த விசாலமும் தன் மருமகளை மகளாகவே பாவித்தாள்.

ஜானகியின் நாத்தனார் கிரிஜா, தன் தாயைப் போல யதார்த்தமானவளாக இருக்கவில்லை. அவள் ஜானகியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் தன் தாயிடம் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறாள் ஜானகி.

அப்போதெல்லாம், "சும்மா வாயிற்கு வந்தபடி பேசாதேடி' என்று மகளை விசாலம் அடக்கினாளே தவிர, என்றுமே அது பற்றி அவள் மருமகளிடம் விசாரித்தது கூட கிடையாது. மகள், மருமகளின் பிரசவத்தை தான் ஒருத்தியே பார்த்துக் கொண்டாள்.

ஒரு விபத்தில் கணவன் அற்ப ஆயுசில் இறந்து போகும் வரை ஜானகியின் வாழ்வு சந்தோஷமாகவே இருந்தது. அண்ணனின் சாவிற்கு வந்த கிரிஜா, தன் தாயைத் தன்னுடன் அனுப்பி விடுவரோ என்று பயந்து பிணத்தை எடுத்த மறுகணம் அங்கிருந்து மாயமாகி விட்டாள்.

பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத அவர்கள் குடும்பத்திற்கு உதவ உறவினர்கள் யாரும் இருக்கவில்லை நிராதரவாக நின்ற ஜானகிக்கு, அவள் மன உறுதியும், அவளது ருசியான சமையலும் கை கொடுத்தன. அவள் ஒரு கல்லுரிக்கு அருகே மெஸ் ஒன்றை ஆரம்பித்தாள். மாமியாரும், மருமகளும் ஓடாய் உழைத்தனர்.

சில வருடங்களுக்குப் பிறகு விசாலத்தின் முதுமை அவளை உழைக்க ஒத்துழைக்கவில்லை. மாமியாரை உட்கார வைத்து ஜானகி ஒருத்தியே மெஸ்ஸை நடத்தினாள்.

'உனக்கு நானும் பாரமாய் இருக்கேன் ஜானகி' என்று புலம்பினாள் விசாலம்.

"சும்மா பாரம், கீரம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை. என்னை பிறந்த வீட்டுக்குக் கூட அனுப்பாம நீங்களே பிரசவம் பார்த்தீங்க. அப்போ நீங்க என்னைப் பாரம்ன்னு பார்த்தீங்களா'

"ஒரு பிரசவத்தைப் பார்த்ததைப் பத்தி நீ இன்னும் பேசறே... என் பொண்ணுக்கு மூணு பிரசவம் பார்த்தேன். பெத்து வளர்த்த தாயை இப்ப அவ எட்டிக் கூட பார்க்க மாட்டேன்ங்கிறா'

விசாலம் என்ன சொன்னாலும் ஜானகிக்கு மாமியார் ஒரு பாரமாய் தோன்றவில்லை. விசாலம் வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டும், பக்கத்து வீட்டு லட்சுமிப் பாட்டியிடம் பழங்கதைகள் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருக்க, சிரமம் சிறிதும் தோன்றாமல் கடுமையாய் உழைத்து குடும்பத்தை நடத்தினாள் ஜானகி.

சதீஷ் கல்லுரிக்குப் போகும் வரை அந்த மெஸ் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. அவன் என்ஜினியரிங் சேர்ந்த பிறகு தான் பற்றாக்குறை ஏற்பட்டது. மாமியாரும், மருமகளும் தங்கள் நகைகளை எல்லாம் விற்று சதீஷைப் படிக்க வைத்தனர். அவன் பி.ஈ., முடித்து அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்த போது, மெஸ்ஸை அவர்கள் மூடினர்.

பல ஆசிரியர்களும், மாணவர்களும் உண்மையாகவே வருத்தப்பட்டனர். அவ்வளவு ருசியான சமையல் வேறு எங்கும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பின்பு ஜானகியைச் சந்திக்கும் போதெல்லாம் கூறினர்.

சதீஷிற்கு திருமணமாகும் வரை அவர்கள் குடும்பம் சுமுகமாகவே இருந்தது. அவன் மனைவி சத்யா ஒரு வங்கியில் வேலை பார்த்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில், "டி' போட்டுப் பேசும் பாட்டி விசாலத்தைப் பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த அவளது சிநேகிதிகளின் எதிரிலும் அதே போலப் பேசியது அவளுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

ஒரு வேலையும் செய்யாமல், ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்டமாக இருக்கும் விசாலத்தை, "சுத்த நியூசன்ஸ்' என்று அவள் கணவனிடம் சொல்லாத நாளில்லை.

ஒருமுறை ஏதோ ஒரு வேலையை விசாலத்திடம் சத்யா சொல்ல, அந்த வேலையைத் தானே செய்து விட்டு தன் மருமகளிடம் சொன்னாள் ஜானகி...

"அவங்க காலத்தில் அவங்க வேணும்ங்கிற அளவு வேலை செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு ஏதாவது செய்ய ணும்ன்னா நீ என்கிட்டே சொல்லு. நான் செய்யறேன். இந்த வயசான காலத்தில் அவங்க கிட்டே நாம வேலை வாங்கக் கூடாது' அதிலிருந்து ஜானகி இருக்கையில் விசாலத்திடம் பேசுவதை தவிர்த்தாள் சத்யா.

அவர்கள் புதிய வீட்டுக்கும், பக்கத்து வீதியில் இருந்த லட்சுமிப் பாட்டி தினமும் விசாலத்திடம் பேச வருவதை நிறுத்தவில்லை. அந்தக் கிழவியைப் பார்த்தாலும் சத்யாவிற்குப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்காததை எல்லாம் ஜானகி இல்லாத போது அவள் விசாலத்திடம் முகத்தில் அடித்தாற் போல சொல்லத் துவங்கினாள்.

விசாலம் சப்தமாய் பேசுவது, வெற்றிலை பாக்கு போடுவது, லட்சுமி பாட்டி அவர்கள் வீட்டுக்கு வருவது எல்லாம் ஒரு காலத்தில் நின்று போயின. சத்யா இருக்கும்போது தானிருக்கும் அறையை விட்டு வெளியே வரக் கூடப் பயந்தாள் விசாலம். ஆனாலும், சத்யாவின் வெறுப்பு ஏனோ குறையவில்லை.

விசாலம் வாய்விட்டு ஒன்றும் சொல்லா விட்டாலும், ஜானகிக்கு எல்லாம் தெரிந்து தானிருந்தன. ஏதோ ஒரு கைதியைப் போல அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழும் தன் அத்தையைப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

இன்று சதீஷ் திடீரென்று முதியோர் இல்ல குண்டை போடுகிறான். பிடிக்கவில்லை என்ற வெற்றுக் காரணம் சொல்லி நெருங்கிய சொந்த, பந்தங்களை இவர்களால் எப்படி உதறித் தள்ள முடிகிறது என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை.

கோவிலிலிருந்து விசாலம் வந்ததும் பாட்டியை சோபாவில் உட்கார வைத்து, மெல்லிய குரலில் சிறிது நேரம் பேசினான் சதீஷ். அவள் அறைக்கு வந்த போது பத்து வயது கூடியது போலத் தளர்ந்திருந்தாள். அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி ஜானகிக்கு இருக்கவில்லை.

நிறைய நேரம் பேசாமல் கட்டிலில் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தாள் விசாலம். பின்பு மருமகளிடம் சொன்னாள்...
"பரவாயில்லை அவன் என்னை நடுத்தெருவில் விட்டுடலியே... பணம் குடுத்து ஒரு இடத்தில் தங்கத் தானே வைக்கிறான்... என்ன பிரச்னைன்னா நான் இத்தனை நாள் உன் நிழல்லேயே இருந்துட்டேனா ஜானு, உன்னை விட்டு பிரியறதுன்னா மனசுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்குடி''

கண்களில் பெருகிய நீரைக் காண்பிக்க விரும்பாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜானகி. அன்றிரவு அவளும், விசாலமும் உறங்கவில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை எண்ணி விசாலம் பயந்து கொண்டிருந்தாள் என்றால், ஜானகியோ வேறு பல சிந்தனைகளில் இருந்தாள். மறுநாள் காலை சீக்கிரமாகவே சமையலை முடித்து வெளியே போன ஜானகி, மாலை மகனும், மருமகளும் வருவதற்கு சற்று முன் தான் வந்தாள்.

"ஏன்டி ஜானு இவ்வளவு நேரம்? எங்கே போயிட்டே? நான் என்னென்னவோ நினைச்சு பயந்தே போயிட்டேன்,'' என்ற விசாலத்தைப் பார்த்து அவள் புன்னகை செய்தாளே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.

அன்று இரவு கீழே உட்கார்ந்து தங்கள் இருவருடைய துணிமணிகளையும் சூட்கேஸ்களில் அடுக்கிய ஜானகியை கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலம் திகைப்புடன் பார்த்தாள்...

"என் துணிமணியை எடுத்து வைக்கிறது சரிதான் உன்னோடதை ஏண்டி ஜானு எடுத்து வைக்கிற?''

"உங்களை விட்டுட்டு நான் எப்படி அத்தை தனியாய் இருப்பேன். சாப்பிட்டா, எனக்குத் தொண்டையில் சோறு இறங்குமா? அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இங்கிருந்து போறோம்''

"என்னடி சொல்றே ஜானு? நீயும் என் கூட முதியோர் இல்லத்துக்கு வர்றியா?''

"இல்லை அத்தை நாம் முதியோர் இல்லத்துக்குப் போகப் போறதில்லை. நான் பழையபடி மெஸ் ஆரம்பிக்கப் போகிறேன். நாம ரெண்டு பேரும் நம்ம அந்தப் பழைய வீட்டுக்கே போகப் போகிறோம்''

விசாலம் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் தேவைப்பட்டது. பின் அவள் கண்கள் கலங்க சொன்னாள்...

"ஜானு, என் ராசாத்தி, வேண்டாண்டி... எனக்காக நீ இந்தப் பைத்தியக்காரத்தனம் செஞ்சுடாதே. நான் உன்னை விட்டுப் போய் ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டி. சீக்கிரமே செத்துடுவேன்.

"என்னோட இந்தக் கொஞ்ச நாள் கஷ்டத்துக்காக நீ இந்த முடிவு எடுத்துடாதேடி... நீ, இது நாள் வரைக்கும் எனக்கு செஞ்சதுக்கே நான் ஏழு ஜென்மத்துக்கு உன் கால் செருப்பாய் இருந்தாக் கூட உன் கடன் தீர்க்க முடியாதுடிம்மா...''

மாமியாரின் காலடியில் வந்து உட்கார்ந்த ஜானகி பாசத்துடன் அவளைப் பார்த்தாள்...

"உங்களுக்காக நான் இந்த முடிவெடுத்தேன்னு யார் சொன்னது? அத்தை... எனக்கு இப்ப உழைக்கத் தெம்பிருக்கு. அதனால தான் என்னைக் கூட வச்சிருக்காங்க. ஒரு நாள் நானும், உங்க மாதிரி ஓய்ஞ்சுடுவேன். அப்போ, எனக்கும் முதியோர் இல்லம் தான் போக வேண்டி வரும்.

"அது புரிஞ்சு இப்ப நான் முழிச்சுகிட்டேன். அதான், இந்த முடிவு. நல்ல வேளையா, அந்த மெஸ் வீடு இப்ப காலியாத்தான் இருக்கு. நான் மெஸ் ஆரம்பிக்கப் போறேன்னு அங்கே சொன்னதும், சந்தோஷமா அந்தக் காலேஜ் வாத்தியாருங்க, பசங்க எல்லாம் சேர்ந்து பேசி அட்வான்ஸ் கூட கலெக்ட் பண்ணி என்கிட்ட கொடுத்துட்டாங்க.

"அத்தை... நமக்குப் பெரிய செலவில்லை உடுக்க துணி, இருக்க கூரை, வயித்துக்கு சோறு இதைத் தவிர வேற என்ன வேணும் சொல்லுங்க. மீதமாகிற காசை நான் சேர்த்து வைக்கப் போறேன். என் கடைசி காலத்தில் நான் முதியோர் இல்லம் போக வேண்டி வந்தாக் கூட என் சொந்தக் காசில் போய் இருக்க ஆசைப்படறேன்...''

"உன்னையெல்லாம் சதீஷ் அப்படிக் கை விட்டுட மாட்டான் ஜானு.. அவன் நல்லவன்டி''

"சுயமாய் முடிவெடுக்கவும், செயல்படவும் முடியாதவங்க, நல்லவங்களா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை அத்தை'' . தாங்க முடியாத துக்கத்துடன் மருமகளை வெறித்துப் பார்த்தாள் விசாலம்.

"அத்தை... எல்லாத்துக்கும் மேல நாம நம்ம வீட்டில் சுதந்திரமாய் இருக்கலாம் நீங்க சப்தமாய் பேசலாம். வெத்திலை, பாக்கு போடலாம் லட்சுமி பாட்டியோட மணிக்கணக்கில் பேசலாம்''

மருமகள் சொல்லச் சொல்ல, அவளைக் கட்டிக் கொண்டு நிறைய நேரம் அழுதாள் விசாலம். அதற்குப் பிறகு பேச அவளுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

மறுநாள் கால்டாக்சிக்குப் போன் செய்து விட்டு மகனிடம் தன் முடிவைச் சொன்னாள் ஜானகி. அவன் எரிமலையாக வெடித்தான்...

"அம்மா, உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சா? உனக்கென்ன இப்ப வேலை பார்கிற வயசா?''

"நான் இங்கே மட்டும் சும்மாவா உட்கார்ந்திருக்கேன்?''

"அம்மா நான் அந்த முதியோர் இல்லத்தில் பாட்டிக்காக அட்வான்ஸ் கூட கொடுத்துட்டேன்''

தங்கள் சூட்கேஸ்களை எடுத்து டாக்சி டிரைவரிடம் கொடுத்து விட்டு மகனிடம் சொன்னாள் ஜானகி...

"அது வீணாப் போகாதுடா அப்படியே வச்சிருக்கச் சொல்லு. 30 வருஷம் கழிச்சு நீங்க போறப்ப உபயோகமாகும்''

"திடீர்ன்னு இப்படிக் கிளம்பினா எப்படி? நான் வேலைக்கு வேற ஆள் கூட ஏற்பாடு செய்யலை'' என்றாள் சத்யா.

பதில் பேசவில்லை ஜானகி. அதிர்ச்சியிலிருந்து மீளாத மகனையும், திகைப்பில் ஆழ்ந்த மருமகளையும் பொருட்படுத்தாமல், தன் மாமியாரை கைத் தாங்கலாய் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ஜானகி.

எத்தனை நாட்கள் தான் இலையானது இலையாகவே இருக்கும்... சருகாகுமல்லவா?

சுமந்த போது நம்மை பாரமாக நினைக்காத உள்ளத்தை பாரமாக நினைப்பது எவ்வளவு கொடுமையானது... தாயிடம் பேச்சுத்திறமையால் தர்க்கம் செய்யாதீர்கள்....

ஏனென்றால்... அவள் தான் உனக்கு பேசவே கற்றுக்கொடுத்தவள்..... தாயைத் தவிர்க்க நினைக்கும் படிப்பாளிகள், தாயை இழந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.....

நாம் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஒரே உயிர் அது.....

WhatsApp Group Invite

19/12/2025

அனைத்து ஆண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

1] உங்களுக்கே உங்களுகாக.

• மாதம் ₹5000 சம்பாதித்தாலும், ₹5,00,000 சம்பாதித்தாலும், பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவே இருந்தாலும்; செலவு செய்தது போக மீதமுள்ள(!!!) சேமிப்பெல்லாம் என்னுடையது தானே என்று நினைத்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

• அந்த சேமிப்பும் உங்களை சார்ந்தவர்களுக்காக செலவு செய்யவே சேமித்தது என்பதை உணரும் காலத்தே அவையனைத்தும் கரைந்து போயிருக்கும்.

• 60 வயதில் பழனிக்குச் சென்று ஆசையாய் ஒரு மொட்டை போடலாம் (உங்களுக்கே தான்:)) என்று நினைத்தால் கூட முதலில் பட்ஜெட் போட நிர்பந்திக்கப் படுவீர்கள். ஆகவே சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே உங்களுக்கென 1% எடுத்து வையுங்கள். மொட்டை போட அல்ல, ஆகாமல் இருக்க.



• PF, பென்ஷன் என்று இருந்தாலும் சம்பாதிக்கும் பொழுதே உங்களுக்காக நீங்களே சேமிக்க ஆர்வம் கொள்ளாவிடில், பிறர் வலுக்கட்டாயமாக சேமித்து கொடுத்ததை கொண்டு என்ன செய்வீர்கள்??? சர்வமும் குடும்பத்திற்கே!

• லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைலை விட, உறுதியான உடலை விட, நேர்த்தியான ஆடையை விட, கச்சிதமான ஷூவை விட… ஒரு ஆணுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது ஏழு/எட்டு இலக்க சேமிப்பு தான்.

• Pay yourself first.

2] பெண்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யாதீர்கள்.

ஜுன்ஸ் பேண்ட் போட்டாக்கா
பேஃகி பேண்டையே பார்ப்பாங்க
பேஃகி பேண்ட் போட்டாக்கா
வேட்டியத்தான் தேடுவாங்க.

• அவர்களுக்காக மாற்றிக் கொண்டே இருந்தால் சிக்குபுக்கு ரயிலே ஜிக்கும். எப்பொழுதும் உசிலம்பட்டி பெண்குட்டிகள் உஷாராகத்தான் இருப்பார்கள்.

• காலத்தால் கம்சன் வேஷம் போட நேர்ந்தாலும் குந்தவைக்கு செயல்வீரனை அடையாளம் தெரியும்..

3] மன அழுத்தத்தை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.

• கடினமான காலங்கலெல்லாமே அற்ப மாயைகள்.

• "இதுவும் கடந்து போகும்"/"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது" என்பதை கடைப்பிடிக்க உறுதி கொள்ளுங்கள்.

4] சொல்வன்மை.

• ஆணோ, பெண்ணோ யாராயினும் சுருக்கமாக பேசி, நடையை கட்டுங்கள்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

• உண்மையான எல்லாத்தையுமே பேசாவிட்டாலும், பேசுவது எல்லாமுமே உண்மையாக இருக்கட்டும்.

• நாணயம், நா நயம் இரண்டும் அவசியம்.

5] விட்டு விடுதலையாகி நிற்பாய்.

• யாருக்கும் அடிமையாக இருக்காதீர்கள். அன்புக்கு அடிமை, பண்புக்கு அடிமை என்று ஒவ்வொன்றாக பட்டியலில் சேர்த்துக் கொண்டே போக வேண்டாம்.

• எது உங்களை இழுத்து செல்கிறதோ, மூழ்கடிக்கும் முன்பே விழித்துக் கொண்டு வெளியேறி விடுங்கள்.

• சமூக இடைவெளி, பேச்சிலும் இருக்கட்டும்.

• 15 வயதில் பெற்ற தாயிடமிருந்தே தள்ளி நின்று பழகிவிட்டால், எப்பெண்ணிடமும் விழுந்து வார மாட்டீர்கள். எந்த வழி சென்றாலும் வந்தவழி மறக்க மாட்டீர்கள்.

6] சித்திரம் வரைய...

• அப்பாவிற்கு எந்த வயதில், என்ன நோய்? தாத்தாவிற்கு எப்படி? என்றெல்லாம் கேட்டு தெளிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறையில் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

• பெண்கள் சுயசம்பாத்யம், நிர்வாக திறமை பெற்றிருந்தாலும், ஏன் சமயத்தில் உங்களுக்கே ஐடியா கொடுத்தாலும், குடும்பம் என்று வந்துவிட்டால் தலைவனுக்கு நிகர் யார்???

03/12/2025

பகிர்வு பதிவு....

ஆண்களே, நீங்கள் செய்யும் மிகவும் விலையுயர்ந்த தவறு, மோதலில் வெற்றி பெற நினைக்கும் ஒரு பெண்ணுடன் ஒரு வாழ்க்கையை கட்டமைப்பதுதான்.

அன்புள்ள ஆண்களே,
மோதலில் ஈடுபடும் ஒரு பெண்ணுக்கு, வாதங்கள் பிரச்சினைகள் அல்ல - அவை அவளின் சக்தி ஆதாரங்கள்.

அவளை மணக்கும் ஆணுக்கு ஒரு துணை கிடைக்காது.
அவனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு போர்க்களம் கிடைக்கிறது.

---
1. ஒரு குழப்பமான வீட்டில் ஒரு ஆணின் அமைதி முதலில் அழிகிறது.

- ஒரு ஆணால் சமூகத்தின் அழுத்தத்தைக் கையாள முடியும்.
- உலகத்துடனான போட்டியை அவனால் கையாள முடியும்.
- அவன் சந்திக்கும் சவால்களை அவனால் கையாள முடியும்.

ஆனால், சாப்பாட்டு மேசையில் கோபத்துடன் முகத்தை தூக்கிக்கொண்டு அமர்ந்து, பதற்றம் அளிக்கும் ஒரு பெண்ணை அவனால் கையாள முடிவதில்லை.
மோதல் போக்கு நிறைந்த ஒரு பெண்ணுடன் அவனால் நிம்மதியாக வாழ முடியாது.

ஒரு ஆண் தனது அமைதியை இழக்கும்போது,
அவள் தனது சக்தியை நிலைநாட்டியதாக தப்புக்கணக்கு போடுகிறாள்.

ஒவ்வொரு பேச்சும் ஒரு கோபத்தின் தூண்டுதலாக மாறும்.
ஒவ்வொரு கேள்வியும் ஒரு தீப் பொறியாக மாறும்.
ஒவ்வொரு கருத்து வேறுபாடும் ஒரு பேரழிவாக மாறும்.
உங்கள் வீடு ஒரு அமைதி சரணாலயமாக இருப்பதை அவளின் கோபம் மாற்றுகிறது.
---
2. அவள் புரிந்துகொள்ளுதலை விரும்பவில்லை - அவள் வெற்றியை விரும்புகிறாள்

அவளுடைய வாக்கு வாதங்கள் வளர்ச்சியைப் பற்றியது அல்ல.
அவை ஆதிக்கத்தைப் பற்றியது.
நீ பேசுவதை அவள் கேட்க தயாராக இல்லை.
அவள் பதிலடி கொடுப்பதற்காகவே நீ பேசுவதை கேட்கிறாள்.
உன் நோக்கங்களைத் திருப்புகிறாள்.
உன் கோபத்தை அவள் பெரிதாக்குகிறாள்.
அவள் முழு உரையாடலையும் "வெற்றி"க்காக மீண்டும் ஆரம்பிக்கிறாள்.
ஒரு பெண் அமைதியை விட வெற்றியை அதிகமாக மதிக்கும்போது,
திருமணம் ஒரு போர் மண்டலமாக மாறும்.

---
3. விரோதம் அவளுடைய இயக்க முறைமை

நீங்கள் மெதுவாக, அமைதியாக உரையாடலில் நுழைகிறீர்கள் - அவள் சத்தத்தை உயர்த்துகிறாள்.
நீ அமைதியைத் தேடுகிறாய் - அவள் தீவிரத்தை நாடுகிறாள்.
நீ விலகிச் செல்கிறாய் - அவள் பின்தொடர்கிறாள்.

இது பிரச்னையை குறைக்கும் ஆர்வம் அல்ல.
இது நன்கு கற்றறிந்த குழப்பம். அந்த குழப்பத்தில் உன்னை நிறுத்தி அவள் சரியென உன்னை நம்பவைக்கும் நரித்தனம்.

அவளுக்கு ஆரோக்கியமான தொடர்பு புரியவில்லை.
அவள் மோதலை மட்டுமே புரிந்துகொள்கிறாள்.
அவளுடன் வாழ்வது என்பது இடியுடன் கூடிய மழையில் வாழ்வது போன்றது
மழை பெய்து தீரவேண்டும் வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்காது.
---
4. மதிக்கப்படாத இடத்தில் ஒரு மனிதன் வழிநடத்த முடியாது

- தலைமைக்கு ஒத்துழைப்பு தேவை.
- அன்புக்கு மென்மை தேவை.
- கூட்டாண்மைக்கு பணிவு தேவை.
ஆனால் மோதலால் இயக்கப்படும் ஒரு பெண் மூன்றையும் எதிர்க்கிறாள்.
உங்கள் தலைமை "கட்டுப்பாடு" ஆகிறது.
உங்கள் வழிகாட்டுதல் "அழுத்தம்" ஆகிறது.
உங்கள் எல்லைகள் "அவமரியாதை" ஆகின்றன.

உங்கள் மீதுள்ள மரியாதையை குறைக்கும் போது,
உறவுக்கு ஏற்கனவே புதைகுழி தோண்டப்பட்டுவிட்டது.

ஒரு ஆணின் வார்த்தைகள் வெறும் இரைச்சலாகக் கருதப்படும் இடத்தில், எந்த ஆணும் ஒரு வீட்டை வழிநடத்த முடியாது.

---
5. ஒரு குழப்பமான பெண் ஒரு வீட்டை ஒரு சிறைச்சாலையாக மாற்றுகிறாள்

ஒரு ஆண் தனது மனதை ரீசார்ஜ் செய்யும் இடம் அவனின் வீடு.

ஆனால் அவளுடன் இருப்பது?
வாழ்க்கையை நடத்த தினமும் அஞ்சுகிறீர்கள்.
வீட்டு வாசலில் நுழைய தயங்குகிறீர்கள்.
உங்கள் சொந்த சுவர்களுக்குள் நீங்கள் அந்நியமாகிறீர்கள்.
பேசுவதைத் தவிர்க்கிறீர்கள்.
ஏனென்றால் மௌனம் பாதுகாப்பானதாக உணர்கிறது.
நீங்கள் எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்கிறீர்கள்
ஏனென்றால் நீங்கள் சொல்லும் எதுவும் வெடிகுண்டாக மாறக்கூடும்.
இறுதியில்...
நீங்களாகவே இருப்பதைத் தவிர்க்கிறீர்கள்.
மோதலில் கட்டமைக்கப்பட்ட வீடு ஒரு வீடு அல்ல — அது சிறைப்பிடிப்பு.
---
6. தன்னை இழக்கத் தொடங்குகிறார்

- குழப்பமான துணை உங்கள் சக்தியை மட்டும் வடிகட்டுவதில்லை, அவள் உங்கள் ஆளுமையை மறுவடிவமைக்கிறாள்.
- அமைதியான மனிதன் கோபப்படுகிறான்.
- தன்னம்பிக்கை கொண்ட மனிதன் பாதுகாப்பற்றவனாகிறான்.
- வெற்றியில் கவனமாக இருக்கும் மனிதன் திசைதிருப்பப்படுகிறான்.
- மகிழ்ச்சியான மனிதன் மரத்துப் போகிறான்.

நீங்கள் உங்கள் மதிப்பைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள்.
நீங்கள் உங்கள் குரலை சந்தேகிக்கத் தொடங்குகிறீர்கள்.
நீங்கள் ஒரு காலத்தில் உங்களுக்குள் இருந்த மனிதனை இழக்கத் தொடங்குகிறீர்கள்.

உண்மையான சோகம் என்ன தெரியுமா நண்பர்களே..
ஒருபோதும் வராத அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் உங்கள் கனவு வாழ்க்கையை விட்டு விலகுகிறீர்கள்.
---
இறுதி வார்த்தை

ஆண்களே, இதைக் கேளுங்கள்:
உங்கள் ஆன்மாவை அமைதிப்படுத்தும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுங்கள்
அதை வடிகட்டும் ஒரு பெண்ணை அல்ல.

உங்களை குணப்படுத்தும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களை காயப்படுத்தும் ஒரு வீட்டை அல்ல.

ஏனென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்தான் உங்கள் வீடு. அது உங்களுக்கு அடைக்கலமாக மாறுமா அல்லது உங்கள் அழிவாக மாறுமா என்பதில் கவனமாக செயல்படுங்கள்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.



நீங்கள் எப்போதாவது நம்பிக்கையற்றவராக உணர்ந்தால், மனநல ஆலோசனைகள், உறவுகளின் ஆலோசனைகளுக்கு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்:

AJAYKUMAR PERIYASAMY.
📞 எனது உதவி எண் 9952 88 7279 (WhatsApp)

05/11/2025

வாழ்க்கையின் மூன்று கட்டங்களில் கவலைப்பட வேண்டாம்:
(1) முதல் கட்டம்: வயது 58 முதல் 65 வரை
இந்நேரத்தில் உங்கள் வேலைத்தளம் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், அதிகாரம் கொண்டவராக இருந்தாலும், இனி நீங்கள் ஒரு சாதாரண மனிதராகவே பார்க்கப்படுவீர்கள்.
அதனால், பழைய பதவியின் பெருமையையும், அந்த மனப்பான்மையையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

(2) இரண்டாம் கட்டம்: வயது 65 முதல் 72 வரை
இந்த வயதில், சமூகம் மெதுவாக உங்களை விட்டு விலகத் தொடங்கும். பழைய தோழர்கள், வேலை நண்பர்கள் ஆகியோருடன் சந்திப்புகள் குறையும். உங்கள் பழைய பணியிடத்தில் இருந்தவர்கள் கூட உங்களை அடையாளம் காணமாட்டார்கள்.
"நான் இருந்தேன்", "நான் செய்தேன்" என்று கூறாதீர்கள், ஏனெனில் இளம் தலைமுறை உங்களை அறியாது; அதைக் குறித்து மனம் புண்படாதீர்கள்.

(3) மூன்றாம் கட்டம்: வயது 72 முதல் 77 வரை
இந்த கட்டத்தில், குடும்பமே மெதுவாக உங்களை விட்டு விலகத் தொடங்கும். குழந்தைகள், பேரன் பேத்திகள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் துணையுடன் அல்லது தனியாக இருப்பீர்கள்.
குழந்தைகள் சில சமயம் வருவார்கள் என்றால், அது அவர்களின் அன்பின் வெளிப்பாடு. அவர்கள் குறைவாக வருவதை குற்றம் சொல்லாதீர்கள்; அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர்.

77 வயதிற்குப் பின், இந்த பூமி கூட உங்களை விட்டு விட விரும்பும்.
அந்த நேரத்தில் சோகப்படாதீர்கள், வருந்தாதீர்கள் — இது வாழ்க்கையின் இறுதி கட்டம், எல்லோரும் இதே பாதையைத் தான் கடந்து செல்வார்கள்.

அதனால், உடல் இயல்பாக இருக்கும் வரை முழுமையாக வாழ்க்கையை அனுபவியுங்கள்!
உங்களுக்கு பிடித்ததை உணவாகச் சாப்பிடுங்கள்,
உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்,
விளையாடுங்கள், மகிழுங்கள், சந்தோஷமாக இருங்கள்.

அன்பான மூத்த குடிமக்கள் சகோதரர்கள், சகோதரிகளே,
மேலே உள்ள கட்டுரை மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது.
எழுதியவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.

58 வயதிற்குப் பிறகு, நண்பர்களுடன் ஒரு குழுவை அமைத்து, ஒரு நிரந்தர இடத்திலும் நேரத்திலும் அடிக்கடி சந்தியுங்கள்.
தொலைபேசி மூலம் தொடர்பில் இருங்கள்.
பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள், ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 🙏

( வாட்ஸ் அப்பில் ரசித்தது)

26/09/2025

#உனதுகாரை_நீயேஓட்டவேண்டும்..!!

தத்துவ கதை.

கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்...

தேசிய நெடுஞ்சாலையில்...!

நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...

பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது!

ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.

ஒரு விலையுயர்ந்த காரில்...

இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!

அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!

வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.

அவரும் உயர்த்தியிருப்பார் போல...!

இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!

சளைத்தவரா நீங்கள்...?

வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.

அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.

நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.

இப்படியே போனால்.....

முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இந்நிலையில்....

உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!

இப்போது.....

உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!

நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...

பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...

இப்போதோ...

ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...

கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!

தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி...

அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...

தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...

பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!

உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்!

நாமே ஓட்ட வேண்டும்!

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்!

அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை...

நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...

நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...

எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
👍👍👍

20/09/2025

*அழுக்கு*

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான், “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”.

இப்படித்தான் நம் வாழ்விலும் நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை. அடுத்தவரிடம் குறைகள் இருந்தால் அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

04/09/2025

நீங்கள் தைரியமாக எழுந்து நிற்காதவரை உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை. இங்கு பயத்திற்கு இடமில்லை, பலத்திற்கே இடமுள்ளது. 💪🔥

உலகம் எப்போதும் பலத்தரும் வெற்றியாளர்களும் மட்டும் மதிக்கப்படுவார்கள் என்று சொல்லலாம்.
ஆனால் அதற்கு முன், நாம் தைரியமாக நிலைத்திருக்க வேண்டும்.
பயத்தை விட மேலே எழுந்து நிற்கும் வலிமையே நம்மை மதிப்புக்குரியவராக்கும்.

பலர் வாழ்க்கையில் பயத்தில் சிக்கி, ஒரே இடத்தில் தங்கிப்போவார்கள்.
ஆனால் உண்மையான வெற்றியாளர்கள், பயத்தை எதிர்கொண்டு, தைரியமாக முன்னேறி, வாழ்க்கையில் இடம் பிடிக்கிறார்கள்.
இங்கு பயத்திற்கு இடமில்லை, வெறும் பலத்திற்கே இடம் உள்ளது.
இந்த மனப்பான்மையுடன் மட்டுமே நாம் உலகை மாற்றக்கூடிய சக்தி பெற முடியும். 🌟

---

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறுவன் பிறந்தான். 🌱
அவன் எப்போதும் பயந்திருந்தான், புதிய சவால்களை சந்திக்க வலியில்லாமல் இருந்தான்.
ஒருநாள் அவன் தனது ஆசான் சொன்ன ஒரு வார்த்தையை மனதில் கொள்ளினான்:

"நீ தைரியமாக எழுந்து நிற்கவில்லை என்றால், உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள்."

அந்த வார்த்தை அவனை உள்ளுணர்வு மூலம் மாற்றியது.
அவன் தைரியமாக உயர்ந்து, பயத்தை எதிர்கொண்டு, புதிய சவால்களை ஏற்றுக் கொண்டான்.
அந்த முயற்சி தான் அவனை வீரமான, மதிப்புக்குரிய மனிதராக மாற்றியது.

நம் வாழ்க்கையும் இதே மாதிரி. 💡
பலரும் பயம் காரணமாக சிறிய முயற்சியிலும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.
ஆனால் தைரியமான மனப்பான்மை + செயல்முறை முயற்சி இணைந்தால், நமது வாழ்க்கை மதிப்புக்குரியதாகவும், பலமாகவும் மாறும்.

---

10 Life-Changing Lessons

1. தைரியமில்லாத மனிதன் மதிப்பு பெற முடியாது 🛡️
உயிரின் உண்மை வெற்றி தைரியத்திலேயே தொடங்குகிறது.

2. பயத்தை எதிர்கொள்ளுங்கள் ⚡
பயம் நம்மை நெருங்கிய இடத்தில் சிக்கச் செய்யும்; அதை எதிர்கொண்டு முன்னேறுங்கள்.

3. பலத்தை முன்னிறுத்துங்கள் 💪
பயம் அல்ல, வலிமை தான் நம்மை உயர்த்தும் சக்தி.

4. சிறிய வெற்றிகள் வலிமையை தரும் 🌱
அன்றாடச் சவால்களை எதிர்கொள்வது நம் தைரியத்தை வளர்க்கும்.

5. முடிவில் வெற்றி தைரியத்தின் பிளவு 🏆
தைரியமில்லாத முயற்சிக்கு வெற்றி கிடைக்காது.

6. பயத்தை தள்ளி வைக்கும் மனப்பான்மை 🌟
பயம் மனதை கட்டுப்படுத்தும் போது, நாம் சிறிய மனிதர்களாக மாறுகிறோம்.

7. தைரியம் = மதிப்பு 💫
நீங்கள் நிற்கும் இடத்தில் நீங்களே மதிப்புக்குரியவராக இருக்கிறீர்கள்.

8. சவால்களை எதிர்கொள்ளுங்கள் 🔥
வெற்றி தைரியமுள்ளவர்களின் கைகளில் மட்டும் வருகிறது.

9. திறமை + தைரியம் = உலக மாற்றம் 🌍
திறமை இருக்குமாலும், தைரியம் இல்லாமல் அது வெளிப்படாது.

10. நிலைத்திருக்கும் மனப்பான்மை = வெற்றி அடையாளம் 🌈
பயம் இல்லாமல், பலத்தை முன்னிறுத்தி செயல்படுவதை மட்டுமே வெற்றி எனக் கூறலாம்.

---

நீங்கள் தைரியமாக எழுந்து நிற்க வேண்டும், பயத்தை மறந்துபோய் பலத்தை முன்னிறுத்துங்கள். 💥
உலகம் எப்போதும் தைரியமானவர்களை மதிக்கும்.
பயமின்றி செயல்பட்டு, பலத்திற்கே இடம் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை மதிப்புக்குரிய, பலமுள்ள வாழ்க்கையாக மாறும்.

நாம் எப்போதும் தைரியமாக நிற்கும் மனப்பான்மை + பயத்தை எதிர்கொண்டு முன்னேறும் செயல்முறை கொண்டிருக்க வேண்டும்.
இது நம் வாழ்க்கையை வெற்றி, மதிப்பு, வலிமை கொண்டதாக மாற்றும். 👍

பகிர்வு பதிவு.....

24/08/2025

சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.
இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.
நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.


இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

Address

2/22 VADUGAN Street
Tondi
623409

Telephone

+917010298955

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஔடதம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram