புராதன இராஜயோகம் என்பது 5000 வருடங்களுக்கு முன் பாரத கண்டத்தில் வாழ்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இலகுவான யோக முறையாகும். இதில், உயிருக்குள் சென்று அனைத்து உடல் நோய்களையும் குணப்படுத்தும் முறை, அனைத்து மன நோய்களையும் குணப்படுத்தும் முறை, அனைத்து தீய குணங்களையும் நற்குணங்களாக மாற்றும் முறை போன்றவை அடங்கியுள்ளன. இதை ஒருவர் கற்பதால் மருத்துவர் எவரும் இல்லாமலேயே தமது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்று விடுவார். இந்த இலகுவான யோக முறையினூடாக நோய்களை குணமாக்குவதோடு ஆன்மாவிலுள்ள ஏழு நற்குணங்களையும், எட்டு சக்திகளையும் (அஷ்ட சக்திகள்), முப்பத்தாறு தெய்வீக குணங்களையும் விருத்தி செய்து கொள்ள முடியும். இவைகளே ஒரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள் ஆகும். இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தும் நிரம்பியிருந்தால் அவர் தேவதை அல்லது தெய்வீகமானவர் என்று அழைக்கப்படுவார். இப் பண்புகளை பெற்றுக்கொள்வதற்காகவே ரிஷிகளும் முனிவர்களும் சாதுக்களும் சந்நியாசிகளும் காட்டில் பல காலம் தவம் செய்து வருகின்றார்கள். ஆனால், இதில் காட்டிற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. கண்களை மூடி தியானிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்து பயிற்சிகளும் இலகுவான வழி முறையினூடாகவே கொடுக்கப்படுகின்றது.
தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் மற்றும் தீய குணங்களைக் கொண்டவர்கள் மற்றும் தனக்குள் உள்ள நற்குணங்களை பெருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் இப்பயிற்சியில் ஈடுபடலாம். இந்த புனிதப் பயிற்சியினூடாக ஆன்மா ஈடேற்றப்படுவதுடன் அறிவு, ஆரோக்கியம், ஆயுள், ஆற்றல், அழகு, உடல் வலிமை வளர்வதுடன் நற்பண்புகளும் வளர ஆரம்பிக்கும்.
இப்பயிற்சிகளானது கடந்த 15 வருட காலமாக இராஜயோகத்தை பயிற்சி செய்து வருபவரும் தனக்குள் இருந்த நோய்நொடிகள் மற்றும் தீய குணங்கள், தீய பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தவராலேயே வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சிக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அனைத்தும் இலவசம்.
நன்றி, ௐ சாந்தி.