SHRI VARMA Clinic

SHRI VARMA Clinic Varma Therapy for All type of joint pain, Muscular pain and Stroke .

அனைவருக்கும் அன்பான இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🙏🙏
11/10/2024

அனைவருக்கும் அன்பான இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🙏🙏

21/06/2024
இதுவரை காலமும் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தில்  இயங்கிய #ஸ்ரீவர்மாவைத்தியநிலையம் # 09:06:2024 தொடக்கம் கே.கே.எஸ் வீதி மருதன...
08/06/2024

இதுவரை காலமும் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தில் இயங்கிய
#ஸ்ரீவர்மாவைத்தியநிலையம் # 09:06:2024 தொடக்கம் கே.கே.எஸ் வீதி மருதனார்மடம் என்ற முகவரிக்கு மாற்றப்படுகிறது என்பதை அறியத்தருகிறோம்

இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும், நலமும் பெற   #ஸ்ரீவர்மா வைத்திய நிலையத்தின் இனிய தமிழ் புத்...
14/04/2024

இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும், நலமும் பெற #ஸ்ரீவர்மா வைத்திய நிலையத்தின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.❤️🙏🙏🙏

Wishing you a truly bright and joyful Christmas..🎈🎈🎈
25/12/2023

Wishing you a truly bright and joyful Christmas..🎈🎈🎈

17/11/2023

புதிய மாணவர் அனுமதி – 2024.....


வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம், சுன்னாகம்,சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத்தில் கண் பார்வையற்ற அல்லது குறைந்த பார்வையுடைய பிள்ளைகளை 2024 ஆம் கல்வியாண்டில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பிள்ளைகளுக்கான உணவு, உடை, தங்குமிடம் மற்றும், கல்விக்கான அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், மேலதிக வகுப்புக்கள், கணனிக் கற்கைகள், கவின் கலை வகுப்புக்கள், ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகள், சுகாதார, மருத்துவ வசதிகள் விளையாட்டு வசதிகள் என்பனவும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்டவாறான நிலைமைகளையுடைய பிள்ளைகளின் பெற்றோர்கள் எதிர்வரும் 20.12.2023. க்குப் பிந்தாமல் கீழ்க் காணும் முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்கு வழி சமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


குறிப்பு :

1. இலங்கையின் எப்பாகத்திலுமிருந்து விண்ணப்பிக்க முடியும்.
2. விடுதியில் தங்கியிருக்கும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் சந்திப்பதற்கோ அல்லது விடுமுறை நாட்களில் வீடு சென்றுவருவதற்கோ அனுமதி வழங்கப்படும்.
3. மாதம் ஒரு தடவை பெற்றோர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவும் தூர அடிப்படையில் வழங்கப்படும்.

தொடர்பு :
தலைவர்,
வாழ்வகம்,
சபாபதிப்பிள்ளை வீதி,
சுன்னாகம்.
தொலைபேசி : 021 224 0146,
076 828 6331(WhatsApp, Viber.)

02/11/2023

நிம்மதியா வாழனுமா...??

யாரையும் அதிகமா தேடாத
யாருக்கூடவும் Easy aah Attach ஆகிறாத
யாருக்கும் Easy aah கிடைச்சிறாத
யாருக்கூடவும் அதிகமா Time spend பண்ணாத

இன்னைக்கு பேசுறியா இதே அவங்க நாளைக்கு பேசலனாக் கூட அது உனக்கு பெருசா Effect பண்ணாத அளவுக்கு limited aah பழகு..

நிறைய பேருக்கூட பேசி பழகி இருக்குறத விட
உன் Vibe-க்கு Set ஆகுற same time
நீ இல்லாத இடத்துல கூட உன்ன விட்டுக் கொடுத்து பேசாத ஒருசிலர கூட வச்சிக்கோ

Most of the time தனியாவே இரு
கோபம் வந்தா தனியாகிரு
மனசு சரி இல்லையா தனியா Travel பண்ணு
கூட்டம் சேத்துட்டு Travel பண்றப்போ சந்தோசமா இருப்ப
இதே தனியா Travel பண்றப்போ நிம்மதியா இருப்ப

உனக்கு Uncomfortable aah feel ஆகுற எல்லாத்தையும் தூக்கி தூரமா போடு
எப்பவும் Self-respect ah விட்டுக் கொடுத்துறாத

வெளில இருந்து பாக்குறவனுக்கு நீ திமிரு காட்டுற, Scene போட்ற மாதிரி தான் இருக்கும்
பரவால நினைச்சிட்டுப் போகட்டும் ஆனா
நீ உன் Zone-க்குள்ள நிம்மதியா இருப்ப.. 💯

சந்தோசம் நீ நாலு பேருக்கூட சிரிச்சி பேசுனாக் கூட கிடைக்கும்
ஆனா நிம்மதி அதுக்கான சூழல நீயா உருவாக்கிக்கிட்டா மட்டும் தான்
கிடைக்கும்..🤍🖤

11/10/2023

சுயஒழுக்கம் எனப்படுவது,

(01) வாங்கிய கடனையோ பொருளையோ திருப்பி செலுத்த முடியாத இயலுமை இருந்தாலும், உரியவருக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள், அது கூடுதல் முரண்பாட்டைக் குறைக்கும்....

(02) யாராவது ஒருவர் உங்களுக்கு உணவருந்த அழைத்தால் விலையுர்ந்த உணவை தெரிவு செய்யாதீர்கள், தெரிவை அவர்களிடமே விட்டுவிடுங்கள்....

(03) எப்போது குழந்தை, எப்போது திருமணம், எப்போது புதுவீடு கட்டப்போகிறீர்கள் என உங்களுக்கு பயனே இல்லாத கேள்விகளை இன்னொருவரிடம் அநாகரீகமாக கேட்காதீர்கள்....

(04) ஒரு நிகழ்விலோ அல்லது வரிசையிலோ உங்கள் பின்னால் வருபவர்களுக்கு எப்போதும் கதவைத் திறந்துவிடுங்கள். அது ஒரு பையனா அல்லது பெண்ணா, மூத்தவரா அல்லது இளையவரா என்பது முக்கியமில்லை. பொது இடத்தில் ஒருவரை நன்றாக நடத்துவதன் மூலம் நீங்கள் சிறியவர்களாக வளர மாட்டீர்கள்;

(05) ஒரு முறை உங்கள் நண்பன் உங்களுக்காக பணம் செலுத்தினால் அடுத்த முறை அவர்களுக்காக நீங்கள் செலவிட தயாராக இருங்கள்....

(06) அறிவு, நிறம், வசதி, எடை, உடல் குறைபாடு இவற்றையெல்லாம் கொண்டு நீங்கள் சொல்வது நகைச்சுவை அல்ல அது மற்றவரை உங்கள் முன் தாழ்த்திப்பேசுவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

(07) சிறியதேனும் எப்போதும் நன்றி சொல்வதற்கு மறந்துவிடாதீர்கள்...

(08) பொதுவில் வாழ்த்தப் பழகுங்கள், தனியாக குறைகளை சுட்டிக்காட்டுங்கள்...

(09) இந்தப் புகைப்படத்தைப் பார் என ஒருவர் உங்களிடம் அவருடைய தொலைபேசியை தந்தால் அந்த புகைப்படத்தை மட்டுமே பாருங்கள் அடுத்த புகைப் படத்தை நகர்த்தாதீர்கள்...

(10) எனக்கு இன்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என உங்களிடம் யாராவது சொன்னால் “ஏன், எதற்கு என அவர்களின் நோய்கள் குறித்து அலசி ஆராயாதீர்கள்? கேட்காதீர்கள்! மாற்றாக எல்லாம் சரியாகும், கவனமாக சென்று வாருங்கள் எனக் கூறுங்கள்....

(11) வேலை செய்யுமிடத்தில் முகாமையளரோ உயர்பதவியோ சீனியரோ யூனியரோ சக ஊழியரோ அல்லது துப்பரவு செய்பவரோ அனைவருக்கும் சமனான மரியாதையை கொடுங்கள், அதுதான் உங்களுக்கும் திரும்பி வரும்....

(12) உங்களிடம் ஒருவர் நேராக பேசும் பொழுது கையடக்கத்தொலைபேசியை பார்த்து பதில் சொல்லாதீர்கள்...

எதைப் பின்பற்றுகிறீர்களோ அதுவே உங்கள் முன் பிரதிபலிக்கும்

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHRI VARMA Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category