15/07/2021
வன்னியில் இருநூறு பிள்ளைகள் படிக்க உதவுங்கள்.ஆயிரம் பேரின் பசியை நிரந்தரமாகப் போக்க முடியும்.
இந்த பிள்ளைகளுக்காக நீங்கள் இரங்கினால் உடனே அழைப்பை ஏற்படுத்துவீர்கள்.
பளை, பூநகரி, கரைச்சி, கண்டாவளை, புதுக்குடியிருப்பு, மல்லாவி போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தமது குடும்பத்தை காப்பாற்றும் நோக்கில் சுமார் இருநூறு பிள்ளைகள் படித்து வேலைக்கு செல்ல முன்வந்துள்ளார்கள்.
இப்பிள்ளைகளில் யுத்தத்தால் காயம் பட்டவர்கள் , யுத்தத்தில் இழப்புகளைச் சந்தித்தவர்கள் , யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்கள், மாவீரர் குடும்பங்கள் உள்ளனர்.
இப் பிள்ளைகள் யுத்தம் மற்றும் வறுமை காரணமாக சாதாரண தரத்துடன்oo ( OL) படிப்பை நிறுத்தி மேற் கொண்டு படிக்கவும் முடியாமல் வேலைக்கு செல்லவும் இயலாமல் செய்வதறியாது வீட்டில் உள்ளனர்.
இவர்களுக்கு உதவுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.
இப் பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி வழங்கி ஒரு வருடத்தில் வைத்திய துறையில் நோயாளர் பராமரிப்பு சேவையில் நல்ல சம்பளத்துடன் வேலை ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்த பிள்ளைகளும் தாதிய உதவியாளர் பயிற்சி படித்து வைத்திய துறையில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற ஆவலுடன் முன்வந்துள்ளனர்.
இவர்களது குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஸ்டப்படும் நிலையில் உள்ளன.
இந்த இருநூறு பிள்ளைகளும் வேலைக்கு சென்றால் இவர்கள் மூலம் ஆகக் குறைந்தது ஆயிரம் பேரின் ( குடும்ப அங்கத்தவர்கள் உட்பட) பசியை நிரந்தரமாக போக்க முடியும்.
இப் பிள்ளைகளை வேலைக்கு செல்ல வைப்பதன் மூலம் வன்னியில் தற்கொலை முயற்சிகள், சாப்பாடு , உடுப்பு கொடுத்து மதமாற்றும் முயற்சிகளை குறைக்க முடியும்.
அத்துடன் வைத்திய துறையில் வேலை செய்வது என்பது நல்ல சம்பளம் கிடைப்பது மட்டுமல்லாமல் கௌரவமான பாதுகாப்பான தொழிலாகவும் இருக்கும்.
ஒரு பிள்ளைக்கு தாதிய உதவியாளர் பயிற்சி வழங்க ஆகக் குறைந்த தொகையாக எங்களுக்கு 36000/= மட்டுமே தேவை.
இப்பதிவை வாசிக்கும் இருநூறு பேர் முன்வந்தாலே போதும்.( ஒரு குடும்பம் ஒரு பிள்ளை படிக்க உதவலாம்)
அண்மையில் கனடாவில் ஒரு தமிழர் தனது ஜம்பதாவது பிறந்த நாளை மூன்று கோடி செலவழித்து விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இந்த பணத்திற்கு வடமாகாணம் முழுவதும் சுமார் ஆயிரம் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
தற்கொலைகள், கலாசார சீரழிவுகள் என வன்னியில் எமது அடையாளமே அழிந்து கொண்டு போகிறது.பல வழிகளிலும் அவசரமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது.
புதிதாக சிந்திப்போம்.புதிய வடிவில் உதவி செய்வோம்.
பலருக்கு உதவ விருப்பம் உள்ளது.ஆனால் எமது இவ்வாறான செயற்பாடுகள் அவர்களுக்கு தெரியாது.எனவே இப் பதிவை அதிகமாகப் பகிர்வதன் மூலம் உதவி செய்ய விரும்புவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்.
உதவ விரும்புபவர்கள் இப்பக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புங்கள் அல்லது அழையுங்கள்.
0094773164617 ( Direct /viber /whats app)
0094773203137 ( Direct /viber /whats app)