02/12/2025
🌿💊 Doxycycline பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
இந்நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குகளுடன் 🌧️ எலிக் காய்ச்சல் (Leptospirosis) 🐀🦠 பரவல் அதிகரித்திருப்பதை 📈 காணலாம்.
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவதோ 👨👩👧👧 இப்படியான ஒரு ஆபத்துக்கு ⚠️ உள்ளாகி இருந்தால், உங்கள் வைத்தியர் 👨⚕️ இந்த மருந்தை பரிந்துரைத்திருக்கலாம். 💯
அப்படியானால் இந்த மருந்தை 💊 சரியாக பயன்படுத்தும் முறை, மற்றும் அதைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி‼️ இன்று பேசலாம். 🤝
📌 முதலில், Doxycycline என்றால் என்ன? 🤔
Doxycycline என்பது Tetracycline என்ற பிரிவைச் சார்ந்த ஒரு பக்றீரியா எதிர்ப்பு மருந்தாகும் 🧬.
⭕ அதனால் இது பக்றீரியாவால் 🦠 ஏற்படும் நோய்களுக்கு மட்டுமே செயல்படும்.
🚫 வைரசு நோய்களுக்கு 🧫 இம் மருந்தானது பாதுகாப்பு தராது என்பதை நினைவில் வைத்திருங்கள். 👐
📌 அதேபோல் உலக சுகாதார அமைப்பு 🌍 மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் 🏥 வழிகாட்டுதலின்படி, வெள்ளத்தில் மீட்புப் பணியாற்றுபவர்கள் 🚣 அல்லது தொடர்ந்து வெள்ளநீரில் நனைவோரின் 🧝 ஆபத்து நிலைக்கு ஏற்ப, Doxycycline பயன்படுத்தும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, அவர்கள் எவ்வளவு நேரம் நீருக்கு 💧 வெளிப்பட்டு இருந்தார்கள் மற்றும் உடலில் வேறு காயங்கள் 🩹 உள்ளனவா என்பன மூலம் தீர்மானிக்கப்படும் ஒன்றாகும். 🖇️
1️⃣ குறைந்த ஆபத்து உள்ளவர்கள் - வெள்ளநீரில் நேரடியாக இறங்காதவர்கள் 🚫💧
2️⃣ சாதாரண ஆபத்து உள்ளவர்கள் - உடலில் காயங்கள் எதுவும் இல்லை; ஆனாலும் நீரில் இறங்க வேண்டிய தேவையிருப்பவர்கள்.
(வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு 🍱 வழங்குபவர்கள் போன்றோர்)
3️⃣ அதிக ஆபத்து உள்ளவர்கள் - உடலில் காயங்கள், சிராய்ப்புகள், இரத்தக்காயங்கள் 🩸 காணப்படும் நிலையில் நீரில் இறங்குபவர்கள்.
(மீட்புக் குழுக்களில் உள்ள நபர்கள் ⛑️ போன்றோர்)
அதற்கேற்ப,
✔️ குறைந்த ஆபத்து உள்ளவர்களுக்கு இந்த மருந்து தேவையில்லை. 💊🚫
✔️ சாதாரண ஆபத்து உள்ள மூத்த வயதினருக்கு Doxycycline 200 mg (2 மாத்திரைகள்) 💊💊வாரத்திற்கு ஒருமுறை மட்டும் என்ற ரீதியில், நீரில் பணிபுரியும் நேரத்திற்குள் எடுக்க வேண்டும்.
✔️ அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு
Doxycycline 100 mg
நாளுக்கு இரண்டு முறை (காலை/இரவு) 🌅🌙 5–7 நாட்கள் எடுக்க வேண்டும். காயங்கள் இருப்பின் அவற்றிற்கு உடனடியாக வைத்தியரை 👨⚕️ சந்திக்கவும்.
📌 இந்த மருந்தைத் தொடங்கும்முன் கீழ்க்கண்ட நிலைகளில் ஏதாவது இருந்தால், கண்டிப்பாக உங்கள் வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும்:
👉 ஈரல் தொடர்பான நோய்கள்
👉 சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் நோய்கள் 🩺
👉 நீங்கள் கர்ப்பிணி 🤰 அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக 🧑🍼 இருந்தால்
👉 8 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு
👉 அடிக்கடி வெயிலில் ⭐ வேலை செய்பவர்களுக்கு
👉 சமீபத்தில் வயிற்று அறுவை சிகிச்சை / வயிற்றுப் பிரச்சினைகள் ஏதும் இருந்தால்
👉 கண் பார்வை 👁️ கோளாறுகள் இருந்தால்
👉 வாயில் அல்லது யோனியில் பூஞ்சை 🍄 தொற்றுகள் இருந்தால்
👉 Tetracycline வகை மருந்துகளுக்கு ஒவ்வாமைகள் ஏதும் இருந்தால் ⚠️
📌 மருந்து குடிக்கும் போது நன்றாக நிரம்பிய ஒரு முழுக் கோப்பைத் தண்ணீருடன் 💧 குடிக்கவும்.
📌உணவு உண்ணாத சந்தர்ப்பத்தில் 🍽️❌ இம் மருந்தைக் குடிப்பது சிறந்தது.
🛑 ஆனால் உங்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் 🤢 இருந்தால், சிறிது உணவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
📌 முக்கியமானவை📌
நீங்கள் சில நாட்கள் மாத்திரை எடுத்த பிறகு நோய் அறிகுறிகள் குறைவதை உணர்ந்தாலும், வைத்தியர் தந்த மருந்து முழுவதும் 💊💊 முடியும் வரை மருந்தைத் தொடர வேண்டும். 💯
📌 அதேபோல் நீங்கள் அலுமினியம், கல்சியம், மக்னீசியம், இரும்பு, zinc உள்ள விற்றமின் வில்லைகள் அல்லது antacid கள் போன்றவற்றுடன் ஒன்றாக மருந்தை எடுக்க வேண்டாம்❌
📌 நீங்கள் எடுக்கும் பிற மருந்துகள் பற்றியும் வைத்தியரிடம் கட்டாயம் தெரிவிக்கவும் 😃
📍அதேபோல் மருந்தைப் பயன்படுத்தும் காலத்தில் மேலும் கவனிக்க வேண்டியவை,
👉 பிரதானமாக வெயிலில் ☀️ அதிகமாக நிற்காமல் முடியுமான வரை பாதுகாப்பு பெறுங்கள். கூடியளவு உடலை மூடும் ஆடைகள் 👕 அல்லது sun cream 🧴 பயன்படுத்துங்கள்.
👉 இரவில் மருந்து குடிக்கும்போது, நித்திரை கொள்ள சிறிது நேரத்திற்கு முன்பு முழுக் கோப்பை தண்ணீருடன் மருந்தைக் குடித்து, உடனே படுக்காமல் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்து பின்னர் நித்திரை கொள்வது சிறந்தது. இல்லையெனில் சிலவேளைகளில் வில்லை கரையாமல் தொண்டையில் தங்கி வலியை 😣 உண்டாக்கலாம்.
👉 மருந்தை எடுக்கும் போது, உங்களுக்கு வயிற்றோட்டம் (Diarrhoea) 💦 ஏற்பட்டால் மருந்தகத்தில் மருந்துகளை வாங்காமல்,
கடுமையான வயிற்றோட்டம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக வைத்தியரிடம் 👨⚕️👩⚕️ ஆலோசனை பெறுங்கள். 🌿
Article by :- Suthagaran Yahthurshan
Graphic by :- Amila Laksh*tha