27/11/2025
“FATTY LIVER இருக்கு” என்று Doctor சொன்னாரா?
‘ஈரலில் கொழுப்பு’ (Fatty Liver) பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்!
சமீபத்தில் ஸ்கேன் அல்லது இரத்த பரிசோதனைக்குப் பிறகு, டொக்டர் “உங்கள் ஈரலில் கொஞ்சம் கொழுப்பு தேங்கியிருக்கிறது… Fatty Liver நிலை இருக்கு” என்று சொன்னாரா? அல்லது இரத்த பரிசோதனையில் liver enzymes(SGPT,SGOT) அதிகரித்துள்ளது, அல்லது கொலஸ்ட்ரால் அதிகரித்துள்ளது போன்ற வார்த்தைகள் வந்ததா?
“ஈரலில் கொழுப்பு தேங்கியுள்ளது” என்று கேட்டதும் பலருக்கு பயமாகவும் குழப்பமாகவும் இருக்கும்.
ஆம், உண்மையில் இந்த Fatty Liver என்றால் என்ன? ஏன் இது முக்கியம்? எப்படி இதனை தவிர்ப்பது?
இது பற்றி மிகவும் எளிமையாகப் பார்ப்போம்..! Fatty Liver என்றால் என்ன?
நம் ஈரல் என்பது ஒரு பெரிய தொழிற்சாலையைப் போன்றது .
உணவு சமிபாட்டுக்குத் தேவையான நொதியங்களை வழங்குவதிலிருந்து, சக்தியை பெற்றுக்கொடுத்தல், உடலுக்குள் நச்சுப்பொருட்களை நீக்குவது போன்ற பற்பல பெரிய செயற்பாடுகளை செய்கிறது.
ஆனால், ஈரல் கலங்களில் அதிக அளவு கொழுப்பு (fat) தேங்கினால், அதையே Fatty Liver என்கிறோம். சாதாரணமாக சிறிது கொழுப்பு இருப்பது இயல்புதான். ஆனால் ஈரலின் மொத்த நிறை அளவில் 5–10% க்கும் மேலாக கொழுப்பு சேர ஆரம்பித்தால் பிரச்சினை தொடங்குகிறது.
இதில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன:
👉 NAFLD – மது அருந்தாதவர்களுக்கு வரும் ஈரல் கொழுப்பு
👉 AFLD – அதிக மது அருந்துவதால் ஏற்படும் ஈரல் கொழுப்பு
ஏன் ஈரலில் இப்படி கொழுப்பு தேங்குகிறது?
முக்கியமான காரணிகள்,
👉 அதிக உடல் எடை – முக்கியமான காரணம்
👉 அதிக மாப்பொருள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உட்கொள்ளல்.
👉 சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகள் Junk and Processed foods
👉 Type 2 Diabetes, இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance)
👉 Cholesterol & Triglycerides அதிகரித்தல்
👉 உடற்பயிற்சி இல்லாமை
👉 மது அருந்தல்
👉 சில Steroids / Medicines
👉 PCOS, Hypothyroidism போன்ற உடல் நிலைகள்
👉 திடீர் எடைக் குறைப்பு - Improper Diet Control
👉 பரம்பரை காரணங்கள்
இந்த காரணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்தால் Fatty Liver உருவாகும் வாய்ப்பு அதிகம்.
🛡️ Fatty Liver வராமல் தடுப்பது எப்படி? (ஏற்கனவே இருந்தாலும் இந்த வழிகள் மூலம் குணப்படுத்திக்கொள்ளவும் இயலும்)
- ஆரோக்கியமான உணவு பழக்கம்
: மாப்பொருட்கள், Sweet items and Junk foods ஐ குறைக்கவும்
: வீட்டு உணவு – மரக்கறி, கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், whole grains, fish என்பவற்றை அதிகரிக்கவும்
: மணித்தக்காளி கீரை, மொடக்கத்தான் கீரை, பீட் ரூட் போன்றவற்றை நாளாந்த உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
: பாரம்ரபரிய அரிசி வகைககள் (කලු හීනැටි, සුවදැල්, පච්චපෙරුමාල්, මඩතවාලු, තනහාල්,) என்பவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
: கீரி சம்பா, சம்பா (white rice) ஐ குறைத்து brown rice/kurakkan/oats போன்றவைகளை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளவும்.
: தேவையான அளவு மாமிசத்தை எடுக்கவும் (இரவில் குறைத்துக்கொள்ளல் சிறந்தது.)
: இரவு சாப்பாட்டை முடியுமான அளவு Early ஆகவும் குறைவாகவும் சாப்பிடவும், முக்கியமான இலேசான உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.
- நாளாந்தம் உடற்பயிற்சி செய்தல்
: 30 நிமிடங்கள் brisk walk (https://fb.watch/DrawZfWO6Q/?)
: cycling, yoga — எதை விரும்பினாலும் வாரத்தில் 5 நாட்கள் செய்யவும்.
- உடல் எடையை முறையாக வைத்துக்கொள்ளவும்.
- மது அருந்துவதை, புகைத்தலை முற்றிலுமாக தவிர்க்கவும், ஈரலின் மிகப்பெரிய எதிரி மது தான்.
- இனிப்பான பானங்கள், குளிர்பானம், Artificial & Processed juice with added sugar வகைகளை தவிர்க்கவும்.
- Processed meats (sausage, meat balls) வகைகளை முற்றிலுமாக குறைக்கவும்.
- போதிய அளவு தண்ணீர் குடிக்கவும்.
- இரவில் விழித்திருப்ப்தை தவிர்க்கவும். போதியளவு இரவுத் தூக்கம் முக்கியமாகும்.
இந்த சிறிய மாற்றங்கள் ஈரலை மீண்டும் நலமாக்கும் சக்தி கொண்டவை. நம் ஈரல் நலமாக இருந்தால் தான் வாழ்க்கை நலமாக இருக்கும்!
இந்தத் தகவல் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.
இந்த பதிவை Share செய்து மற்றவர்களும் விழிப்புணர்வு பெற உதவுங்கள்.
- Dr. Fazl-Ul Haque M. Fouze