Patient welfare society - Base Hospital Tellippalai

Patient welfare society - Base Hospital Tellippalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Patient welfare society - Base Hospital Tellippalai, Health/Medical/ Pharmaceuticals, Base Hospital, Tellippalai.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை போதனா சாலையாக  உயரவேண்டும்! நோயாளர் நலன்புரிச் சங்க செயலர் ஹரிகரன்
19/02/2020

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை
போதனா சாலையாக உயரவேண்டும்!
நோயாளர் நலன்புரிச் சங்க செயலர் ஹரிகரன்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை , தெல்லிப்பழை போதனா வைத்தியசாலையாகத் தரம் உயரவேண்டும். அரசமைப்புக்கு முரணாக தற்.....

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தியாகேந்திரன் கிளினிக் சென்றர் திறப்பு!
18/02/2020

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
தியாகேந்திரன் கிளினிக் சென்றர் திறப்பு!

தியாகி அறக்கொடை நிறுவுநர் வி.தியாகேந்திரன் கிளினிக் சென்ரர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நாளை (19-02-2020) புதன்...

வேலைக்கு ஆள் தேவை
15/12/2019

வேலைக்கு ஆள் தேவை

மனம்மகிழ் பிறந்ததின வாழ்த்துக்கள்தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பாதைக்கு எந்நேரத்திலும் அத்திபாரமிடுபவரு...
02/12/2019

மனம்மகிழ் பிறந்ததின வாழ்த்துக்கள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பாதைக்கு எந்நேரத்திலும் அத்திபாரமிடுபவரும், நோயாளர் சேவை மேம்பாட்டில் விடிவெள்ளியாகத் திகழ்பவரும், தற்போது எமது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவும் மருந்து வழங்கல் பிரிவும் மிகுந்த சிரமத்துடன் ஏராளமான வெளிநோயாளிகள் சிரமப்படுகின்றமையை நாம் சேவைக்காருண்யனின் செவிகளுக்குக் கொண்டுசென்றதும், எவ்வித எதிர்க்கருத்துமின்றி மருந்துவழங்கல் மற்றும் வெளிநோயாளர் பிரிவின் சில பகுதிகளைத் தனியே இயக்குவதற்காக ஒருகோடி ரூபா பெறுமதியிலான கட்டடத்தை அமைக்கப் பெருமனதுடன் உதவிபுரிந்த
சேவைக்காருண்யன், புரவலர், சமூகஜோதி
உயர்திரு. வாமதேவா தியாகேந்திரன்
(நிறுவுநர் - நியாகி அறக்கொடை)
அவர்களுக்கு இன்று அகவை 68!

இன்றைய பிறந்தநன்னாளில் பெருமதிப்புக்குரிய தியாகேந்திரன் அவர்கள் சகல செல்வபோகமும் நிறைவாய் பெற்று, தியாகி அறக்கொடை ஊடாகப் பல்வேறு சமூகப்பணிகளில் உயர்ந்து நின்று, வாழ்வில்மேன்மையுற்று, தீர்க்க ஆயுளுடன் பல்லாண்டு பலநூறாண்டுகாலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
நோயாளர் நலன்புரிச் சங்கம்,
ஆதார வைத்தியசாலை - தெல்லிப்பழை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நீண்டபல காலமாக அளப்பெரும் சேவையாற்றி - அபிவிருத்திகள் பல புரிந்து - தன்வாழ்நாளையே வைத்த...
30/11/2019

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நீண்டபல காலமாக அளப்பெரும் சேவையாற்றி - அபிவிருத்திகள் பல புரிந்து - தன்வாழ்நாளையே வைத்தியசாலைக்காக அர்ப்பணித்து சேவையாற்றிய - நிறைந்த ஆளுமை - சிறந்த தலைமைத்துவம் - தூரநோக்கு சிந்தனையுடைய வைத்திய அத்தியட்சகர் Dr.யோ.திவாகர் அவர்கள் வைத்திய நிபுணர் (M.D) கற்கைக்காக வைத்தியசாலையிலிருந்து தற்காலிக விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள் இணைந்து பிரிவுபசார நிகழ்வை சிறப்பித்தனர்.

மும்மொழிக் கற்கையை மாணவர்களுக்குஊட்டும் லிட்டில் மாஸ்டர் மொன்டஸரி!வலி.வடக்கு உறுப்பினர் ஹரிகரன்
30/11/2019

மும்மொழிக் கற்கையை மாணவர்களுக்கு
ஊட்டும் லிட்டில் மாஸ்டர் மொன்டஸரி!
வலி.வடக்கு உறுப்பினர் ஹரிகரன்

மும்மொழிக் கல்வி இன்று எமது சந்ததியினருக்கு அவசியமாகின்றது. அந்த மும்மொழிக் கல்வியை மாணவர்களுக்கு அடி அத்திப...

வீடு வாடகைக்குத் தேவை!தெல்லிப்பழை, வீமன்காமம், மாவிட்டபுரம், மல்லாகம், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலுள்ள வீடு த...
25/01/2019

வீடு வாடகைக்குத் தேவை!

தெல்லிப்பழை, வீமன்காமம், மாவிட்டபுரம், மல்லாகம், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலுள்ள வீடு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாகக் கடமைக்காக வரும், வைத்தியர்கள், தாதியர்கள் தங்குவதற்கு வாடகைக்கு முழுமையாகத் தேவை. வீடு பல அறைகளுடன் நல்ல நிலையில் இருத்தல் வேண்டும்.

என்றும் நோயாளர் சேவையில்,
லயன் சி.ஹரிகரன்
செயலாளர் - நோயாளர் நலன்புரிச் சங்கம்,
ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை.
தொடர்பு இலக்கம்: 0779005856, 0718565540, 0772230535

10/02/2017

தெலலிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் சேவையில்.......
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் சேவையின் விஸ்தரிப்பின் மூலமாகவும் - யாழ்..மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையின் நெருக்குவாரங்களைக் குறைக்கும் முகமாகவும் - தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மிகவும் சேவை நோக்குக் கொண்ட நோயாளர் மீது கூடிய கரிசனை - அன்பு, பாசம், அக்கறை நிறையப்பெற்ற - கடமையை சேவையாகக் கருதும் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா அவர்கள் முழுநேர சேவையாளராக எமது வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சீரிய மக்கள் பணியாற்றியவர், தற்போது எமது பிரதேச மக்களுக்குச் சேவையாற்றுவதற்;காக எமது வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார்.-
அத்துடன், குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ச.மதனா அவர்களும் எமது வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார்.
இவர்களின் வருகையால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைச் சமூகமும் வலிகாமம் வாழ் மக்களும் மிகவும் மகிழ்வடைகின்றோம்.
யாழ்.குடாநாட்டு மக்களுக்கு இவர்களின் வருகை வரப்பிரசாதமாகும். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையூடாக அனைத்து மக்களும் இவர்களிடத்தில் நல்ல மருத்துவ சேவையைப் பெறமுடியும்.
தெல்லியூர் லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
நோயாளர் நலன்புரிச் சங்கம்,
ஆதார வைத்தியசாலை,
தெல்லிப்பழை.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கடந்த 17-08-2016 புதன்கிழமை எமது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை...
19/08/2016

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கடந்த 17-08-2016 புதன்கிழமை எமது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் தேவைகள் தெடர்பில் ஆராய்ந்தார்

காணி நிலம் வேண்டும். தெல்லிப்பளையில் காணி நிலம் வேண்டும். புற்று நோயாளர்களின் உறவினர்கள் தங்கும் விடுதியமைக்க தெல்லிப்பள...
12/08/2016

காணி நிலம் வேண்டும். தெல்லிப்பளையில் காணி நிலம் வேண்டும். புற்று நோயாளர்களின் உறவினர்கள் தங்கும் விடுதியமைக்க தெல்லிப்பளையில் காணி நிலம் வேண்டும்.

ඒ ඉඩම පිළිකා රෝගීන් ඥතීන් වෙනුවෙන් තෙලිප්පලෙයි පිළිකා ගෙදර ගොඩ නැගීමට අවශ්ය වේ. ඕනෑම සිරුර සුදුසු ඉඩම් තිබේ නම් මූලික රෝහල තෙලිප්පලෙයි රෝගීන්ට සුබ සාධක සංගමය අමතන්න

A suitable land is required urgently to build a cancer caring home at Tellipali for the relatives of cancer patients who assist the cancer patient at Base Hospital Tellipalai. Please contact Patient Welfare Society of Base Hospital Tellipalai for further details.

நல்லுள்ளங்கொண்ட கொடையாளர்களே!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு
அண்மையில் நிலம் உடையோரே!

நாளுக்குநாள் பெருவளர்ச்சி கண்டுவரும் எமது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் உறவினர்கள் நலன்கருதி அவர்கள் தங்கி நிற்பதற்கு சேவை நோக்குடன் விடுதி ஒன்று வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்கு ஒரு நல் இதயம் படைத்த அன்பர் முன்வந்துள்ளார். அதனை அமைப்பதற்கு வைத்தியசாலைச் சூழலில் காணி நன்கொடையாகவோ அன்றி பணத்திற்கோ தேவை.
அத்துடன் மறுவாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் காணி தேவைப்படுகின்றது.
எம்மினியவர்களே!

தயவுசெய்து உங்களிடமோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அண்மையில் காணி இருந்தால் உடன் தெரியப்படுத்தவும். நன்கொடையாகவோ பணமாகவோ வாங்குவதற்கு நாம் தயார்.

தொடர்புகளுக்கு:
லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
நோயாளர் நலன்புரிச் சங்கம்,
ஆதார வைத்தியசாலை,
தெல்லிப்பழை.
0779005856, 0718565540

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புதிய உணவகம் பால் காய்ச்சி, அமுது பொங்கி, ஆலய முருகன் ஆலயத்திலிருந்து வணக்கத்துக்குரிய தெய்...
12/08/2016

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புதிய உணவகம் பால் காய்ச்சி, அமுது பொங்கி, ஆலய முருகன் ஆலயத்திலிருந்து வணக்கத்துக்குரிய தெய்வங்கள் எடுத்துவரப்பட்டு, சமய அனுட்டான பதிவுகள் ............ திறப்பு விழாவன்று காலைக் காட்சிகள்........ ஜூலை மாதம் 30 ஆம் திகதி

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சர்வதேச தரத்திலான உணவு விடுதி அனைத்துலக மருத்துவ சுகாதார நிறுவனம் ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்...
12/08/2016

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சர்வதேச தரத்திலான உணவு விடுதி அனைத்துலக மருத்துவ சுகாதார நிறுவனம் ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் நோயாளர் நலன்புரிச்சங்கம் ஆதார வைத்திய தெல்லிப்பளை என்பவற்றின் நிதி உதவியுடனும் நோயாளர் நலன்புரிச்சங்கம் ஆதார வைத்திய தெல்லிப்பளையின் ஒருங்கிணைப்புடனும் அமைக்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்திகழ்வில் பிரதம விருந்தினராகஅனைத்துலக மருத்துவ சுகாதார நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவின் உப தலைவரான வைத்திய கலாநிதி திருமதி தெ.ராஜம் அம்மையார் கலந்து சிறப்பிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமார் மற்றும் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

New international standard cafetaria of Base Hospital Tellipalai was ceremonially declared open yesterday. This was funded by IMHO USA,Canada and Patient Welfare Society BHA Tellipalai and the project was coordinated by Patient Welfare Society BHA Tellipalai.

Dr(Mrs).T.Rajam, deputy chairman of IMHO USA graced this occasion as chiefguest while Dr.A.Ketheeswaran, PDHS NP, Dr.K.Nanthakumar, RDHS Jaffna and Dr.M.Umashankar were the guest of honors

Address

Base Hospital
Tellippalai

Telephone

0779005856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patient welfare society - Base Hospital Tellippalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Patient welfare society - Base Hospital Tellippalai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram