13/11/2023
தமிழ் பேசும் உலக மக்களிடையே புகழ் பெற்றுவரும் 'வலைத்தமிழ்" தமிழ் தகவல் களஞ்சியத்தை உருவாக்கிய நண்பர் ச. பார்த்தசாரதி Netflix- இல் "இறுகப்பற்று" எனும் திரைப்படத்தைப் பாருங்கள்; உங்கள் உளவியல் துறைச் சார்ந்தது; திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் பற்றியது; பார்த்துவிட்டு கருத்து கூறுங்கள் என்றார். படத்தைப் பார்த்தேன், எல்லோரும் தம்பதிகளாக அமர்ந்து பார்க்கவேண்டிய சிந்திக்க வைக்கும் திரைப்படம். தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் முதல் வெறுமை நிறைந்த மணவாழ்க்கையில் சமுதாயக் கௌரவத்திற்காக இணைந்து வாழும் தம்பதிகள் மற்றும் விவாகரத்து செய்து விடலாம் என்று சிந்திக்கும் நிலையில் உள்ள தம்பதிகள் வரை அவசியம் இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். இந்த அளவுக்கு சிந்தித்து திருமண உறவுகளைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்ற முடியும் என்ற சமூக உணர்வோடு திரைப்படத்தை எழுதி இயக்கிய யுவராஜ் தயாளன் அவர்களுக்குப் பாராட்டினைப் பதிவு செய்கிறேன்.